உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
6 செவ்வாய்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

அனுமதியின்றி கற்குவாரியா? – கிளர்ந்தெழுந்த மக்கள்.!

இலங்கை செய்திகள் 5 மாதங்கள் முன்
53 பார்வைகள்

அம்பாறை மாவட்டம், திருக்கோவில் பிரதேச செயலக எல்லைக்குட்பட்ட நேருபுரம் பகுதியில், எவ்வித அனுமதியுமின்றி அமைக்கப்பட்டுள்ள கற்குவாரிக்கு எதிர்ப்புத் தெரிவித்து அப்பகுதி பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.

திருக்கோவில் பிரதேச சபையின் அனுமதியைப் பெறாமல் சட்டவிரோதமான முறையில் இந்தக் கற்குவாரி அமைக்கப்பட்டுள்ளது என்று குற்றம் சுமத்தி, நேற்றுமுன்தினம் மக்கள் ஒன்றுகூடி இந்தப் போராட்டத்தை நடத்தினர்.

நிலைமையைக் கேட்டறிந்த இலங்கைத் தமிழரசுக் கட்சியின் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன், திருக்கோவில் பிரதேச சபைத் தவிசாளர் சு.சசிகுமார் மற்றும் பிரதேச செயலாளர் த. கஜேந்திரன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு நேரில் விஜயம் செய்தனர்.

மக்களின் கோரிக்கைகளைச் செவிமடுத்த அதிகாரிகள், குறித்த கற்குவாரியானது சட்டவிரோதமானது என்பதை உறுதிப்படுத்தியதுடன், அது உடனடியாக அங்கிருந்து அகற்றப்படும் என்றும் உறுதியளித்தனர்.

இது தொடர்பாகத் தெளிவுபடுத்திய பிரதேச செயலாளர், “இந்த இடமானது குளத்துக்குச் சொந்தமான அரச காணி என்பதால், அங்கு எவ்விதமான கட்டுமானங்களையும் முன்னெடுக்க முடியாது” என்று தெரிவித்தார்.

அதேவேளை, நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன், சுற்றுச்சூழல் பாதுகாப்பு அதிகார சபையைத் தொலைபேசியூடாகத் தொடர்புகொண்டு வினவியபோது, குறித்த கற்குவாரிக்கு எவ்விதமான சுற்றுச்சூழல் அனுமதிப்பத்திரமும் வழங்கப்படவில்லை என்பது உறுதி செய்யப்பட்டது.

இறுதியில், இந்தக் கற்குவாரியால் பொதுமக்களுக்கும் சுற்றுச்சூழலுக்கும் பாரிய பாதிப்புகள் ஏற்படும் என்பதால், அதனை அவ்விடத்திலிருந்து அகற்றுவது என்று தீர்மானிக்கப்பட்டது. இதனால் அப்பகுதியில் நிலவிய பதற்ற நிலை தணிவுக்கு வந்தது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

அம்பாறை செய்திகள்

ஐஸ் போ**தைப்பொருளுடன் இளைஞன் கைது.!

4 கிராமுக்கும் அதிகமான ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் 21 வயதுடைய இளைஞன் சம்மாந்துறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று திங்கட்கிழமை(5) அம்பாறை மாவட்டம், சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில்…

60 0 0
அம்பாறை செய்திகள்

பண்டைய வரலாற்றில் வீரமுனையும் சிந்தாயாத்திரைப் பிள்ளையார் திருத்தலமும் எனும் நூல் வெளியீடு.!

2000 வருடங்களுக்கு முற்பட்ட வரலாற்றினைக் கொண்ட அம்பாறை மாவட்டத்தின் வீரமுனை கிராமத்தின் வரலாறு ஆய்வு செய்யப்பட்டு எழுதப்பட்ட “பண்டைய வரலாற்றில் வீரமுனையும் சிந்தாயாத்திரைப் பிள்ளையார் திருத்தலமும்”எனும் நூல்…

77 0 0
அம்பாறை செய்திகள்

யானையின் தாக்குதலுக்கு இலக்கான மாணவன்.!

அம்பாறை – மத்திய முகாம் 03 ஆம் பிரிவைச் சேர்ந்த 15 வயதுடைய பாடசாலை மாணவன் காட்டு யானையின் தாக்குதலுக்குள்ளாகி காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச் சோக…

93 0 0
அம்பாறை செய்திகள்

தேசிய கல்வியியற் கல்லூரி மாணவிகளுக்கு பா**லியல் தொல்லை; விரிவுரையாளர் கைது.!

அம்பாறை மாவட்டத்தில் அமைந்துள்ள அட்டாளைச்சேனை தேசிய கல்வியியற் கல்லூரியின் ஆசிரிய பயிற்சி மாணவிகளுக்கு ஆபாசக் காணொளிகளைக் காட்டி பாலியல் ரீதியாகத் துன்புறுத்தல் வழங்கிவந்த 55 வயதுடைய விரிவுரையாளர்…

81 0 0