உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
24 வியாழன்

நேட்டோவிலிருந்து ஸ்பெயினை இடைநீக்கம் செய்வது உள்ளிட்ட நடவடிக்கைகள் குறித்து பென்டகன் பரிந்துரை!

உலக செய்திகள் 5 மாதங்கள் முன்
43 பார்வைகள்

ஈரானுடனான போரில் வொஷிங்டனின் நடவடிக்கைகளுக்கு ஆதரவளிக்கத் தவறியதாக அமெரிக்கா நம்பும் நேட்டோ நட்பு நாடுகளைத் தண்டிப்பதற்கான வழிமுறைகளை, பென்டகனின் ஒரு உள் மின்னஞ்சல் அடிக்கோடிட்டுக் காட்டியுள்ளது.


இதில், ஸ்பெயினை கூட்டணியிலிருந்து இடைநீக்கம் செய்வதும், ஃபாக்லாந்து தீவுகள் மீதான பிரிட்டனின் உரிமை கோரல் குறித்த அமெரிக்காவின் நிலைப்பாட்டை மறுபரிசீலனை செய்வதும் அடங்கும் என்று ஒரு அமெரிக்க அதிகாரி உறுதிபடுத்தியுள்ளார்.

ஈரான் போருக்காக அமெரிக்காவிற்கு அணுகல், தளமிடல் மற்றும் வான்வழிப் பயண உரிமைகளை -வழங்க சில நட்பு நாடுகள் தயக்கம் காட்டுவதாக அல்லது மறுப்பதாக உணரப்படுவதால் ஏற்படும் விரக்தியை வெளிப்படுத்தும் ஒரு குறிப்பில் கொள்கை விருப்பங்கள் விரிவாகக் கூறப்பட்டுள்ளன என, அந்த மின்னஞ்சலை விவரிப்பதற்காக பெயர் குறிப்பிட விரும்பாத அந்த அதிகாரி கூறினார்.

பெப்ரவரி 28 அன்று ஈரான்கு எதிரான வான்வழிப் போர் தொடங்கியதைத் தொடர்ந்து உலகளாவிய கப்பல் போக்குவரத்திற்காக மூடப்பட்டிருந்த ஹார்முஸ் நீரிணையை திறக்க உதவுவதற்காகத் தங்கள் கடற்படைகளை அனுப்பாததற்காக, நேட்டோ நட்பு நாடுகளை ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கடுமையாக விமர்சித்துள்ளார்.

மேலும், அவர் இந்தக் கூட்டணியிலிருந்து விலகுவது குறித்துப் பரிசீலித்து வருவதாகவும் அறிவித்துள்ளார்.எனினும், அமெரிக்கா நேட்டோவில் இருந்து விலக வேண்டுமா என்பது குறித்து அந்த மின்னஞ்சலில் தெரிவிக்கவிலலை என்றும், அது ஐரோப்பாவில் உள்ள அமெரிக்க தளங்களை மூடுவதையும் முன்மொழியவில்லை என்றும் அந்த அதிகாரி கூறினார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் : ட்ரம்ப் எச்சரிக்கை!

போரை முடிவுக்குக் கொண்டுவர ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால் ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் செவ்வாயன்று (22) எச்சரித்தார். ஆனாலும், ஐக்கிய நாடுகள் சபையில்…

97 0 0
உலக செய்திகள்

ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க ஈரான் நிபந்தனை!

அமெரிக்கா தனது இராணுவ நெருக்குவாரங்களைக் குறைத்து, ஈரானிய துறைமுகங்கள் மீதான முற்றுகையை நீக்கினால், அடுத்த ஏழு நாட்களுக்குள் ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறக்க முடியும் என ஈரானின்…

94 0 0
உலக செய்திகள்

உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கிக்கும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பிற்கும் இடையே பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு

உக்ரைனிய ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் தலைமையகத்தில் சந்திக்கவுள்ளதுடன், ரஷ்யாவுடனான தாக்குதல்களை நிறுத்துவதற்கான சமரச முயற்சியை முன்னெடுக்கவுள்ளார்.…

101 0 0
உலக செய்திகள்

அமெரிக்காவை சென்றடைந்தார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

ஐக்கிய நாடுகள் சபையின் 81 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி திங்களன்று (21) நியூயோர்க் சென்றடைந்தார். அமெரிக்கா-ஈரான் இடையிலான…

32 0 0