உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
6 செவ்வாய்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

வெள்ளரிப்பழம் உட்பட பழ வகைகள் அமோக விற்பனை.!

இலங்கை செய்திகள் 5 மாதங்கள் முன்
54 பார்வைகள்

அம்பாறை மாவட்டத்தில் தற்போது நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக கரையோர பகுதிகளில், பிரதான வீதியோரங்களில் அங்காங்கே வெள்ளரிப்பழம் உட்பட பழவகைகள் அமோகமாக விற்பனையாகி வருகின்றன.

குறிப்பாக சம்மாந்துறை – அம்பாறை பிரதான வீதி, கல்முனை – அக்கரைப்பற்று பிரதான வீதியோரங்களில் துவிச்சக்கரவண்டி மோட்டார் சைக்கிள் முச்சக்கர வண்டிகளில் வெள்ளரிப்பழத்தினை வியாபாரிகள் கொண்டு வந்து விற்பனை செய்து வருகின்றனர்.

பொதுமக்கள் ஆர்வத்துடன் வெள்ளரிப்பழ கொள்வனவில் ஈடுபடுவதை அவதானிக்க கூடியதாக இருந்தது.

தற்போது நிலவி வரும் வரட்சியான காலநிலை காரணமாக ஏற்பட்டுள்ள உடல் உஷ்ணத்தை தவிர்ப்பதற்காக இவ் வெள்ளரிப்பழம் உட்பட ஏனைய பழ வகைகளை சாப்பிடுவதில் மக்கள் அதிக நாட்டம் காட்டி வருகின்றனர்.

இவ்வாறு வெளி இடங்களில் இருந்து அம்பாறை மாவட்டத்திற்கு வருகின்ற பழ வகைகளின் தரங்களை பரிசோதிப்பதற்கு கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் சஹீலா இஸ்ஸடீன் ஆலோசனைக்கமைய சுகாதார பரிசோதகர்கள் தினமும் சோதனை நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

இது தவிர தற்போது அதிக வெப்பம் காரணமாக அம்பாறை மாவட்டத்தில் வெள்ளரிப்பழத்திற்கு அதிக கிராக்கி ஏற்பட்டுள்ளதுடன் 150 ரூபாய் முதல் சுமார் 650 ரூபாய் வரை இவ் வெள்ளரிப்பழம் சிறியது முதல் பெரியது வரையான பருமனுக்கேற்ப விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

மேற்குறித்த இப்பழ வகையானது பெரும்பாலும் வெப்பமான காலங்களிலேயே அதிகமாக அறுவடை செய்யப்பட்டு வருகின்றமை இங்கு குறிப்பிடத்தக்கது .பெரும்பாலும் மட்டக்களப்பு மாவட்டத்தின் கிரான்குளம், செங்கலடி, களுதாவளை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து பெருமளவில் வெள்ளரிப் பயிர் செய்கை பண்ணப்பட்டு வருவதுடன் இவைகள் ஏனைய ஊர்களுக்கு விற்பனைக்காக கொண்டு செல்லப்படுகின்றது.

இதே வேளை அம்பாறை மாவட்டத்தில் உடல் உஷ்ணத்தை போக்கும் விதமாக பொதுமக்கள் வத்தகை பழம், இளநீர், தோடை, திராட்சை வகைகள், வாழைப்பழங்கள் குளிர்பானம் செய்யும் விற்பனை நிலையங்கள் அதிகமாக நாடிச் செல்வதனையும் காண முடிகின்றது.

மேலும் டித்வா சுறாவளி மற்றும் அதனை தொடர்ந்து வந்த மோசனமான காலநிலை மாற்றங்களினால் இந்த வெள்ளரிச் செய்கை பாதிக்கப்பட்டிருந்ததாகவும் பயிர்கள் வெள்ளநீரில் அடித்து செல்லப்பட்டதாகவும் பாதிக்கப்பட்ட விவசாயிகள் தத்தமது அனுபவங்களை எமது செய்தியாளரிடம் தெரிவித்தனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

அம்பாறை செய்திகள்

ஐஸ் போ**தைப்பொருளுடன் இளைஞன் கைது.!

4 கிராமுக்கும் அதிகமான ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் 21 வயதுடைய இளைஞன் சம்மாந்துறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று திங்கட்கிழமை(5) அம்பாறை மாவட்டம், சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில்…

60 0 0
அம்பாறை செய்திகள்

பண்டைய வரலாற்றில் வீரமுனையும் சிந்தாயாத்திரைப் பிள்ளையார் திருத்தலமும் எனும் நூல் வெளியீடு.!

2000 வருடங்களுக்கு முற்பட்ட வரலாற்றினைக் கொண்ட அம்பாறை மாவட்டத்தின் வீரமுனை கிராமத்தின் வரலாறு ஆய்வு செய்யப்பட்டு எழுதப்பட்ட “பண்டைய வரலாற்றில் வீரமுனையும் சிந்தாயாத்திரைப் பிள்ளையார் திருத்தலமும்”எனும் நூல்…

77 0 0
அம்பாறை செய்திகள்

யானையின் தாக்குதலுக்கு இலக்கான மாணவன்.!

அம்பாறை – மத்திய முகாம் 03 ஆம் பிரிவைச் சேர்ந்த 15 வயதுடைய பாடசாலை மாணவன் காட்டு யானையின் தாக்குதலுக்குள்ளாகி காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச் சோக…

93 0 0
அம்பாறை செய்திகள்

தேசிய கல்வியியற் கல்லூரி மாணவிகளுக்கு பா**லியல் தொல்லை; விரிவுரையாளர் கைது.!

அம்பாறை மாவட்டத்தில் அமைந்துள்ள அட்டாளைச்சேனை தேசிய கல்வியியற் கல்லூரியின் ஆசிரிய பயிற்சி மாணவிகளுக்கு ஆபாசக் காணொளிகளைக் காட்டி பாலியல் ரீதியாகத் துன்புறுத்தல் வழங்கிவந்த 55 வயதுடைய விரிவுரையாளர்…

81 0 0