உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
24 வியாழன்

பிரித்தானியக் கடற்படைக்கு முன்னதாக நோர்வேக்கு போர்க்கப்பல்கள்: கிளைட் தளத்தில் புதிய நடவடிக்கை!

உலக செய்திகள் 5 மாதங்கள் முன்
39 பார்வைகள்

பிரித்தானியாவின் கிளாஸ்கோ நகரில் உள்ள கிளைட் (Clyde) கப்பல் கட்டும் தளங்களில், அரச கடற்படைக்கான (Royal Navy) ஆர்டர்கள் முடிவடைவதற்கு முன்னரே, நோர்வே நாட்டிற்கான போர்க்கப்பல்களைக் கட்டும் பணிகள் தொடங்கப்படவுள்ளன.

பிரித்தானிய அரச கடற்படைக்காகத் தயாரிக்கப்படும் ‘டைப்-26’ (Type-26) ரகப் போர்க்கப்பல்களின் வரிசையில், நோர்வே நாட்டிற்கான கப்பல்களைக் கட்டும் பணிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படவுள்ளதாகப் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு, நோர்வே நாடு சுமார் 10 பில்லியன் பவுண்டுகள் செலவில் ஐந்து ‘டைப்-26’ ரகப் போர்க்கப்பல்களைக் கொள்வனவு செய்ய ஒப்பந்தம் செய்தது.
இது பிரித்தானிய வரலாற்றிலேயே மிகப்பெரிய போர்க்கப்பல் ஏற்றுமதி ஒப்பந்தமாகக் கருதப்படுகிறது.

கிளாஸ்கோவின் கிளைட் நதிக்கரையில் உள்ள ‘பி.ஏ.இ சிஸ்டம்ஸ்’ (BAE Systems) தளத்தில் தற்போது அரச கடற்படைக்கான 8 கப்பல்களில் 5 கப்பல்கள் பல்வேறு கட்டங்களில் கட்டப்பட்டு வருகின்றன.

எஞ்சிய 3 கப்பல்களின் பணிகள் தொடங்குவதற்கு முன்னதாக, நோர்வேக்கான கப்பல்கள் கட்டப்படும்.இது குறித்துப் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லூக் பொலார்ட் (Luke Pollard) தனது விளக்கத்தை நாடாளுமன்றத்தில் எழுத்துப்பூர்வமாகத் தெரிவித்துள்ளார்.

நோர்வேயுடனான ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, சில கட்டுமான இடங்கள் (Build slots) ஒதுக்கப்பட்டுள்ளன.இதனால் பிரித்தானியக் கடற்படைக்கான 8 கப்பல்களின் எண்ணிக்கையில் எவ்வித மாற்றமும் இருக்காது. எஞ்சிய கப்பல்கள் பாதுகாப்பு முதலீட்டுத் திட்டத்தின் கீழ் பின்னர் கட்டி முடிக்கப்படும். இந்த மாற்றம் பிரித்தானியாவின் பாதுகாப்புத் திறனை எவ்விதத்திலும் பாதிக்காது.

பிரித்தானியா மற்றும் நோர்வே ஆகிய இரு நாடுகளின் கடற்படைகளும் ஒரே மாதிரியான போர்க்கப்பல்களைப் பயன்படுத்துவதன் மூலம், வருங்காலத்தில் ஒரு ஒருங்கிணைந்த மற்றும் ஒன்றோடொன்று மாற்றிக்கொள்ளக்கூடிய (Interoperable) பலமாகச் செயல்பட முடியும் என அமைச்சர் மேலும் சுட்டிக்காட்டினார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் : ட்ரம்ப் எச்சரிக்கை!

போரை முடிவுக்குக் கொண்டுவர ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால் ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் செவ்வாயன்று (22) எச்சரித்தார். ஆனாலும், ஐக்கிய நாடுகள் சபையில்…

98 0 0
உலக செய்திகள்

ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க ஈரான் நிபந்தனை!

அமெரிக்கா தனது இராணுவ நெருக்குவாரங்களைக் குறைத்து, ஈரானிய துறைமுகங்கள் மீதான முற்றுகையை நீக்கினால், அடுத்த ஏழு நாட்களுக்குள் ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறக்க முடியும் என ஈரானின்…

94 0 0
உலக செய்திகள்

உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கிக்கும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பிற்கும் இடையே பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு

உக்ரைனிய ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் தலைமையகத்தில் சந்திக்கவுள்ளதுடன், ரஷ்யாவுடனான தாக்குதல்களை நிறுத்துவதற்கான சமரச முயற்சியை முன்னெடுக்கவுள்ளார்.…

101 0 0
உலக செய்திகள்

அமெரிக்காவை சென்றடைந்தார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

ஐக்கிய நாடுகள் சபையின் 81 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி திங்களன்று (21) நியூயோர்க் சென்றடைந்தார். அமெரிக்கா-ஈரான் இடையிலான…

32 0 0