தமிழகம் முழுவதும் அனல் பறக்கும் வாக்குப்பதிவு; 3 மணி நிலவரப்படி 70% பேர் வாக்களிப்பு!
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப் பதிவு இன்று காலை 7 மணிக்கு ஆரம்பமாகி, நடைபெற்று வருகிறது. மக்கள் ஆர்வத்துடன் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர். பிற்பகல் 3 மணி நிலவரப்படி 70 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. அதிகபட்சமாக நாமக்கல்லி 76.43வீதவாக்குகள் பதிவாகியுள்ளன. குறைந்தபட்சமாக கன்னியாகுமரியில் 61.95வீத வாக்குகள் பதிவாகியுள்ளன.
தலைநகர் சென்னையில் பிற்பகல் 3 மணி நிலவரப்படி 68.13வீத வாக்குகள் பதிவாகியுள்ளன. இவற்றில் தொகுதி வாரியாகப் பார்த்தால் சென்னை விருகம்பாக்கத்தில் அதிகபட்சமாக 71.81வீத வாக்குகளும், குறைந்தபட்சமாக மயிலாப்பூரில் 60.60வீத வாக்குகளும் பதிவாகியுள்ளன.