உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
6 செவ்வாய்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலைக்கு புதிய அபிவிருத்திக் குழு நியமனம்.!

இலங்கை செய்திகள் 6 மாதங்கள் முன்
56 பார்வைகள்

சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலையின் புதிய அபிவிருத்திக் குழு (Hospital development commitee) நியமனம் வழங்கி வைக்கும் நிகழ்வு வைத்தியசாலையின் பொறுப்பு வைத்திய அதிகாரி டாக்டர் எம்.எச். சனூஸ் காரியப்பர் தலைமையில் செவ்வாய்க்கிழமை (21) சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலையில் நடைபெற்றது.

இதன் போது அம்பாறை மாவட்ட கரையோர பிரதேசங்களின் அபிவிருத்திக் குழு தலைவரும் இலங்கை அரசியலமைப்பு பேரபையின் உறுப்பினரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அபூபக்கர் ஆதம்பாவா கலந்து கொண்டு நியமனங்களை வழங்கி வைத்தார்.

மேலும், இந்நிகழ்வில் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகளின் பணிப்பாளர் வைத்திய கலாநிதி வைத்தியர் சகீலா இஸ்ஸதீன் மற்றும் தேசிய மக்கள் சக்தியின் காரைதீவு பிரதேச சபை உறுப்பினர் பர்ஹான், நாடாளுமன்ற உறுப்பினரின் பிரத்தியேகச் செயலாளர் எஸ். இம்தியாஸ் உட்பட வைத்தியர்கள், முக்கியஸ்தர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

இதன்போது சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலையின் புதிய வைத்தியசாலை அபிவிருத்திக் குழுவின் தலைவராக வைத்தியர் ஏ.எம்.மிஸ்பாஹ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

அத்துடன் சாய்ந்தமருது- மாளிகைக்காடு ஜும்ஆப் பெரிய பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபையின் தலைவரும் சாய்ந்தமருது – மாளிகைக்காடு வர்த்தக சங்கத்தின் தலைவரும் தொழிலதிபருமான எம். எஸ்.எம். முபாரக், பொறியியலாளர் எஸ்.எம். ஆரீஸ் அக்பர், தாதிய விரிவுரையாளர் எம்.சி.எம்.சி. றிழா, தாதிய உத்தியோகத்தர் ஏ.எச். நியாஸ், புகையிரத திணைக்களத்தின் ஓய்வுபெற்ற அதிகாரி எம். எஸார், ஆசிரியர்எம்.பி.எம். பௌஸான் கிராம உத்தியோகத்தர் ஏ.எம். அஜ்ஹர், வர்த்தகர்களான ஏ. கபீர், பி.பி. நபார், ஏ.எம். அபூபக்கர் ஆகியோர் உறுப்பினர்களாகளாகவும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

அம்பாறை செய்திகள்

ஐஸ் போ**தைப்பொருளுடன் இளைஞன் கைது.!

4 கிராமுக்கும் அதிகமான ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் 21 வயதுடைய இளைஞன் சம்மாந்துறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று திங்கட்கிழமை(5) அம்பாறை மாவட்டம், சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில்…

60 0 0
அம்பாறை செய்திகள்

பண்டைய வரலாற்றில் வீரமுனையும் சிந்தாயாத்திரைப் பிள்ளையார் திருத்தலமும் எனும் நூல் வெளியீடு.!

2000 வருடங்களுக்கு முற்பட்ட வரலாற்றினைக் கொண்ட அம்பாறை மாவட்டத்தின் வீரமுனை கிராமத்தின் வரலாறு ஆய்வு செய்யப்பட்டு எழுதப்பட்ட “பண்டைய வரலாற்றில் வீரமுனையும் சிந்தாயாத்திரைப் பிள்ளையார் திருத்தலமும்”எனும் நூல்…

77 0 0
அம்பாறை செய்திகள்

யானையின் தாக்குதலுக்கு இலக்கான மாணவன்.!

அம்பாறை – மத்திய முகாம் 03 ஆம் பிரிவைச் சேர்ந்த 15 வயதுடைய பாடசாலை மாணவன் காட்டு யானையின் தாக்குதலுக்குள்ளாகி காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச் சோக…

93 0 0
அம்பாறை செய்திகள்

தேசிய கல்வியியற் கல்லூரி மாணவிகளுக்கு பா**லியல் தொல்லை; விரிவுரையாளர் கைது.!

அம்பாறை மாவட்டத்தில் அமைந்துள்ள அட்டாளைச்சேனை தேசிய கல்வியியற் கல்லூரியின் ஆசிரிய பயிற்சி மாணவிகளுக்கு ஆபாசக் காணொளிகளைக் காட்டி பாலியல் ரீதியாகத் துன்புறுத்தல் வழங்கிவந்த 55 வயதுடைய விரிவுரையாளர்…

81 0 0