உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
24 வியாழன்

ஈரானுடனான போர்நிறுத்தத்தை காலவரையின்றி நீட்டித்த ட்ரம்ப்!

உலக செய்திகள் 5 மாதங்கள் முன்
40 பார்வைகள்

அமைதிப் பேச்சுவார்த்தைகளுக்கு மேலும் வழிவகுக்கும் வகையில், ஈரானுடனான போர் நிறுத்தத்தை காலவரையின்றி நீட்டிப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கூறியுள்ளார்.

இது தொடர்பில் சமூக ஊடகங்களில் வெளியிட்ட ஓர் பதிவில் ட்ரம்ப்,

ஈரான் தலைவர்களும் பிரதிநிதிகளும் ஒருமித்த முன்மொழிவுடன் வரும் வரையிலும், பேச்சுவார்த்தைகள் ஒரு முடிவுக்கு வரும் வரையிலும், ஈரான் மீதான நமது தாக்குதலை நிறுத்தி வைப்பதற்கான பாகிஸ்தான் மத்தியஸ்தர்களின் கோரிக்கைக்கு அமெரிக்கா ஒப்புக்கொண்டதாகக் கூறினார்.

அதேநேரம், ஈரானின் கடல்வழி வர்த்தகத்திற்கான அமெரிக்கக் கடற்படையின் முற்றுகையைத் தொடரப்போவதாகவும் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

இருப்பினும், இரண்டு மாத காலப் போரில் அமெரிக்காவின் பங்காளியான இஸ்ரேல் இதற்கு ஒப்புக்கொள்ளுமா என்பது தெளிவாகத் தெரிவிக்கப்படவில்லை.

புதன்கிழமை அதிகாலையில் ட்ரம்பின் அறிவிப்புக்கு மூத்த ஈரானிய அதிகாரிகளிடமிருந்து எந்தப் பதிலும் வரவில்லை, இருப்பினும் தெஹ்ரானில் இருந்து வந்த சில ஆரம்பகட்ட எதிர்வினைகள், ட்ரம்பின் கருத்துக்கள் சந்தேகத்துடன் பார்க்கப்படுவதாகத் தெரிவித்தன.

இதனிடையே, ஆயிரக்கணக்கான மக்களைக் கொன்று, உலகப் பொருளாதாரத்தை உலுக்கிய ஒரு போரை முடிவுக்குக் கொண்டுவர, பாகிஸ்தான் தலைவர்கள் இஸ்லாமாபாத்தில் அமைதிப் பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் : ட்ரம்ப் எச்சரிக்கை!

போரை முடிவுக்குக் கொண்டுவர ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால் ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் செவ்வாயன்று (22) எச்சரித்தார். ஆனாலும், ஐக்கிய நாடுகள் சபையில்…

98 0 0
உலக செய்திகள்

ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க ஈரான் நிபந்தனை!

அமெரிக்கா தனது இராணுவ நெருக்குவாரங்களைக் குறைத்து, ஈரானிய துறைமுகங்கள் மீதான முற்றுகையை நீக்கினால், அடுத்த ஏழு நாட்களுக்குள் ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறக்க முடியும் என ஈரானின்…

94 0 0
உலக செய்திகள்

உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கிக்கும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பிற்கும் இடையே பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு

உக்ரைனிய ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் தலைமையகத்தில் சந்திக்கவுள்ளதுடன், ரஷ்யாவுடனான தாக்குதல்களை நிறுத்துவதற்கான சமரச முயற்சியை முன்னெடுக்கவுள்ளார்.…

101 0 0
உலக செய்திகள்

அமெரிக்காவை சென்றடைந்தார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

ஐக்கிய நாடுகள் சபையின் 81 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி திங்களன்று (21) நியூயோர்க் சென்றடைந்தார். அமெரிக்கா-ஈரான் இடையிலான…

32 0 0