உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

மன்னாரில் சிலோன் டெவலப்மென்ட் பிளான்டேஷன் எம்பயர் நிறுவனத்தின் புதிய கிளை திறப்பு.!

இலங்கை செய்திகள் 4 மாதங்கள் முன்
38 பார்வைகள்

சிலோன் டெவலப்மென்ட் பிளான்டேஷன் (CDP) எம்பயர் பிரைவேட் லிமிடெட் நிறுவனம், தனது புதிய கிளையை உத்தியோகபூர்வமாக மன்னாரில் இன்று செவ்வாய்க்கிழமை(21) திறந்து வைத்தது.

இலங்கையின் விவசாயத் துறையை நவீன மயமாக்கவும், விசேட முகாமைத்துவ சேவைகளை வடமாகாணத்தின் இதயப் பகுதிக்குக் கொண்டு செல்லும் வகையில் குறித்த அலுவலகம் திறந்து வைக்கப்பட்டது.

மன்னார் மாவட்டச் செயலக திட்டமிடல் பணிப்பாளர் எச்.எம். ஹலிம்தீன் பிரதம அதிதியாக கலந்து கொண்டு புதிய கிளையை திறந்து வைத்தார்.

தொழில்நுட்பம் சார்ந்த விவசாயத் துறையை உருவாக்கும் CDP-இன் இலட்சியத்தை முன்னெடுத்துச் செல்லும் நிறுவனத்தின் பணிப்பாளர் மற்றும் தலைமைச் செயல்பாட்டு அதிகாரி (COO) தலைமையில் இந்த நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.

முதலீட்டாளர்கள், பங்குதாரர்கள் மற்றும் CDP ஊழியர்களின் பங்களிப்புடன் இந்த விழா இடம்பெற்றது. உள்ளூர் விவசாயிகள் மற்றும் நில உரிமையாளர்களை ஊக்குவிக்கும் உறுதிப்பாட்டைப் பிரதிபலிக்கும் வகையில் குறித்த நிகழ்வு இடம்பெற்றது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

நன்னீர் மீன்பிடி உற்பத்திகளின் உணவுக் கண்காட்சி கிளிநொச்சியில் ஆரம்பம்!

வடமாகாண விவசாய அமைச்சின் மீன்பிடி அலகு ஏற்பாடு செய்தநன்னீர் மீன்பிடி உற்பத்திகளின் உணவுக் கண்காட்சி 29.08.2026 இன்று கிளிநொச்சி பசுமைப்பூங்காவில் ஆரம்பமாகியது. இன்று பிற்பகல் மீன்பிடி அலகின்…

65 0 0
இலங்கை செய்திகள்

எச்சரிக்கை!! : எல் நினோ தாக்கத்தால் உணவுப் பற்றாக்குறை மற்றும் மந்தபோஷணை ஏற்படும் அபாயம்!

எல் நினோ தாக்கத்தால் இலங்கையில் கடுமையான உணவுப் பற்றாக்குறை, மந்தபோஷணை ஏற்படும் அபாயம்! – விசேட வைத்தியர் நிபுணர் சமல் சஞ்சீவ எச்சரிக்கை உலகளாவிய ரீதியில் அதிகரித்து…

78 0 0
இலங்கை செய்திகள்

அபிவிருத்தி உத்தியோகத்தர்களை தொடர்ச்சியாக ஏமாற்றும் அநுர அரசு : சஜித் குற்றச்சாட்டு

தேர்தல் காலத்திலும் அதற்குப் பின்னரும் இந்த அரசானது ஒரு இலட்சத்து 50 ஆயிரம் அபிவிருத்தி உத்தியோகத்தர்களையும், 14 ஆயிரத்து 8 பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்களையும் தொடர்ச்சியாக ஏமாற்றி…

29 0 0
இலங்கை செய்திகள்

மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்துங்கள்! : சஜித் வலியுறுத்தல்!!

அரசு மக்களுக்குச் சிறந்த சேவையைத்தான் ஆற்றி வருவதாகக் கூறினால், உடனடியாக மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறு தான் சவால் விடுவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.…

50 0 0