உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
24 வியாழன்

மின்சாரக் கட்டணங்களைக் குறைக்க அதிரடித் திட்டம் ; எரிவாயு விலையிலிருந்து மின்சார விலையைப் பிரிக்க அரசாங்கம் முடிவு!

உலக செய்திகள் 5 மாதங்கள் முன்
38 பார்வைகள்

பிரித்தானிய அரசாங்கம் மின்சாரக் கட்டணங்களைக் குறைக்கும் நோக்கில், எரிசக்தி விலையிடல் முறையில் அதிரடி மாற்றங்களை அறிவித்துள்ளது.

சர்வதேச மோதல்களால் ஏற்படும் எரிபொருள் விலை அதிர்ச்சிகளிலிருந்து நுகர்வோரைப் பாதுகாக்கும் வகையில், மின்சார விலையை எரிவாயு (Gas) விலையிலிருந்து தனிமைப்படுத்தும் புதிய திட்டத்தை பிரித்தானிய அரசாங்கம் அறிவித்துள்ளது.

தற்போதைய நடைமுறைப்படி, மின்சாரச் சந்தையில் மொத்த விற்பனை விலையானது, தேவையைப் பூர்த்தி செய்ய இறுதியாகப் பயன்படுத்தப்படும் எரிசக்தி அலகைக் கொண்டே தீர்மானிக்கப்படுகிறது.

பிரித்தானியாவில் பெரும்பாலும் எரிவாயு மூலமே இந்த இறுதித் தேவை பூர்த்தி செய்யப்படுவதால், சர்வதேசச் சந்தையில் எரிவாயு விலை உயரும்போது மின்சாரக் கட்டணமும் தானாகவே உயர்கிறது.

காற்றாலை மற்றும் சூரியசக்தி மூலம் மலிவாக மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டாலும், அதன் பயன் மக்களுக்கு முழுமையாகக் கிடைப்பதில்லை.

இதேவேளை, பழைய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தி நிலையங்களை ‘மாறும் விலை’ (Variable price) முறையிலிருந்து ‘நிலையான விலை’ (Fixed-price) ஒப்பந்தங்களுக்கு மாற்ற அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

இந்த மாற்றத்தை அடுத்த ஓராண்டிற்குள் நடைமுறைப்படுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இது நாட்டின் மின் உற்பத்தியில் மூன்றில் ஒரு பங்கைக் கொண்டுள்ள பழைய தூய எரிசக்தி திட்டங்களுக்குப் பொருந்தும்.

இதன் மூலம் புதைபடிவ எரிபொருட்களின் (Fossil fuels) விலை திடீரென உயர்ந்தாலும், மின்சாரக் கட்டணங்கள் பாதிக்கப்படாது.

இருப்பினும், தொழிலாளர் கட்சியின் இந்த இலக்குகள் மின்சாரக் கட்டணங்களை மேலும் உயர்த்தும் என கன்சர்வேடிவ் கட்சி விமர்சித்துள்ளது.

இந்த மாற்றத்தின் மூலம் சேமிக்கப்படும் தொகையின் துல்லியமான விபரங்களை அரசாங்கம் வெளியிடவில்லை என்றாலும், அது “குறிப்பிடத்தக்கதாக” இருக்கும் என நம்பப்படுகிறது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் : ட்ரம்ப் எச்சரிக்கை!

போரை முடிவுக்குக் கொண்டுவர ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால் ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் செவ்வாயன்று (22) எச்சரித்தார். ஆனாலும், ஐக்கிய நாடுகள் சபையில்…

98 0 0
உலக செய்திகள்

ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க ஈரான் நிபந்தனை!

அமெரிக்கா தனது இராணுவ நெருக்குவாரங்களைக் குறைத்து, ஈரானிய துறைமுகங்கள் மீதான முற்றுகையை நீக்கினால், அடுத்த ஏழு நாட்களுக்குள் ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறக்க முடியும் என ஈரானின்…

94 0 0
உலக செய்திகள்

உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கிக்கும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பிற்கும் இடையே பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு

உக்ரைனிய ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் தலைமையகத்தில் சந்திக்கவுள்ளதுடன், ரஷ்யாவுடனான தாக்குதல்களை நிறுத்துவதற்கான சமரச முயற்சியை முன்னெடுக்கவுள்ளார்.…

101 0 0
உலக செய்திகள்

அமெரிக்காவை சென்றடைந்தார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

ஐக்கிய நாடுகள் சபையின் 81 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி திங்களன்று (21) நியூயோர்க் சென்றடைந்தார். அமெரிக்கா-ஈரான் இடையிலான…

32 0 0