உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
21 சனி
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

ஈரான் போர் எதிர்காலம் குறித்து ட்ரம்பின் முரண்பட்ட கருத்துக்கள்!

உலக செய்திகள் 7 மாதங்கள் முன்
81 பார்வைகள்

ஈரானுக்கு எதிரான அமெரிக்கப் போரின் எதிர்காலப் பாதை குறித்து ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் திங்களன்று 20 ஆம் திகதி முரண்பட்ட கருத்துக்களைத் தெரிவித்தார்.

மோதலை முடிவுக்குக் கொண்டுவருவதில் தனக்கு அவசரமில்லை என்று அறிவித்த அதே வேளையில், தெஹ்ரானுடனான மேலதிகப் பேச்சுவார்த்தைகள் விரைவில் பாகிஸ்தானில் நடைபெறும் என்ற நம்பிக்கையையும் அவர் வெளிப்படுத்தினார்.

14 நாள் போர் நிறுத்தம் புதன்கிழமை 22 ஆம் திகதி முடிவடைய உள்ள நிலையில் ட்ரம்ப் தொலைபேசி நேர்காணல்களிலும் சமூக ஊடகப் பதிவுகளிலும், விரைவில் ஒரு உடன்பாடு எட்டப்படலாம் என்றும் போர் நிறுத்தக் காலக்கெடுவுக்குள் உடன்பாடு எட்டப்படாவிட்டால் ஈரானுக்கு எதிரான தாக்குதல்கள் அதிரிக்கக்கூடும் என்றும் முன்னுக்குப் பின் முரணாகப் பேசி வந்தார்.

ட்ரம்ப் தனது கோரிக்கைகளைத் தளர்த்தும் வரை பேச்சுவார்த்தையில் பங்கேற்க மாட்டோம் என்று ஈரான் வலியுறுத்திய போதிலும், துணை ஜனாதிபதி ஜே.டி. வேன்ஸ் தலைமையிலான தனது பேச்சுவார்த்தைக் குழுவை இரண்டாவது சுற்றுப் பேச்சுவார்த்தைக்காக பாகிஸ்தானின் தலைநகரான இஸ்லாமாபாத்திற்கு அனுப்ப எதிர்பார்ப்பதாக ட்ரம்ப் குறிப்பிட்டார்.

ஈரானின் தலைமைப் பேச்சுவார்த்தையாளரும் நாடாளுமன்ற சபாநாயகருமான மொஹமட் பாகர் காலிபாஃப், ஈரான் சரணடைய வேண்டும் என அமெரிக்கா விரும்புவதாகக் குற்றம் சாட்டியதுடன், அதற்கு மாறாக, “போர்க்களத்தில் புதிய வியூகங்களை வெளிப்படுத்த” ஈரான் தயாராகி வருவதாகவும் கூறினார்.

அத்துடன், அச்சுறுத்தல்களின் நிழலில் நடைபெறும் பேச்சுவார்த்தைகளை நாங்கள் ஏற்க மாட்டோம் என்றும் காலிபாஃப் இன்று அதிகாலையில் எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தார்.

அதேநேரம், ஈரான் தனது நிபந்தனைகளுக்கு ஒப்புக்கொள்ளும் வரை போரை முடிவுக்குக் கொண்டுவர தனக்கு எந்த அழுத்தமும் இல்லை என்று ட்ரம்ப் திங்களன்று வலியுறுத்தினார்.

அத்துடன், தெஹ்ரானுடன் ஒரு உடன்பாடு எட்டப்படும் வரை ஈரானிய துறைமுகங்கள் மீதான தனது முற்றுகையை அமெரிக்கா நீக்காது என்றும் அவர் கூறினார்.

இதனிடையே, ஹார்முஸ் நீரிணையைச் சுற்றி மீண்டும் ஏற்பட்ட மோதலால், வார இறுதியில் பலவீனமான போர் நிறுத்தம் மேலும் மோசமடைந்த நிலையில், அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையிலான புதிய சுற்றுப் பேச்சுவார்த்தைகளுக்கான தயாரிப்புகளை பாகிஸ்தான் அதிகாரிகள் முன்னெடுத்தனர்.
ஈரானிய துறைமுகங்கள் மீதான தனது முற்றுகையைத் தவிர்க்க முயன்றதாகக் கூறப்பட்ட ஒரு கப்பலை, ஞாயிற்றுக்கிழமை அமெரிக்கக் கடற்படை தாக்கிப் பிடித்ததைத் தொடர்ந்து பதற்றம் அதிகரித்தது.

சனிக்கிழமையன்று, சில கப்பல்களைக் கடந்து செல்ல அனுமதிப்பதாக அளித்த வாக்குறுதியைக் கைவிட்டு, அமெரிக்கா தனது போர் நிறுத்த ஒப்பந்தத்தை நிறைவேற்றவில்லை என்று குற்றம் சாட்டி, ஈரான் கப்பல்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதுடன், நீரிணையில் போக்குவரத்தையும் திடீரென நிறுத்தியது.

அமெரிக்காவின் நடவடிக்கைகள் இராஜதந்திரம் என்ற கூற்றுக்கு முரணானவை என்று ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி திங்களன்று ஒரு சமூக ஊடகப் பதிவில் தெரிவித்தார்.

போர் நிறுத்தம் காலாவதியான பின்னர் ஈரான் என்ன செய்யும் என்பது குறித்தோ அல்லது அமெரிக்காவுடன் இரண்டாம் சுற்றுப் பேச்சுவார்த்தைக்கு ஈரான் திரும்புமா என்பது குறித்தோ அவர் எந்த அறிகுறியையும் கொடுக்கவில்லை.

வார இறுதியில், அமெரிக்காவிடமிருந்து புதிய முன்மொழிவுகளைப் பெற்றதாக ஈரான் கூறியது, ஆனால் இரு தரப்பினருக்கும் இடையே ஒரு பெரிய இடைவெளி நீடிப்பதாகத் தெரிவித்தது.

கடந்த சுற்றுப் பேச்சுவார்த்தைகளைத் தடம் புரளச் செய்த பிரச்சினைகளில் ஈரானின் அணுசக்தி செறிவூட்டல் திட்டம், அதன் பிராந்திய பதிலி அமைப்புகள் மற்றும் நீரிணை ஆகியவை அடங்கும்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

சவூதி மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஏவுகணைத் தாக்குதல்!

ஏமனில் அரசுப்படையினருக்கும், ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் நிலவி வருகிறது. இந்த உள்நாட்டுப்போரில் அரசுப்படையினருக்கு சவுதி அரேபியாவும், ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு ஈரானும் ஆதரவு அளித்து…

139 0 0
உலக செய்திகள்

ரோஹிங்கியா மக்களுக்கு நடந்தது இன அழிப்பு: சர்வதேச நீதிமன்றம் தீர்ப்பு!

முஸ்லிம் சிறுபான்மையினரான ரோஹிங்கியா மக்களின் பெரும் பகுதியை அழிக்கும் நோக்கில், 2017ஆம் ஆண்டு மியன்மார் இராணுவம் முன்னெடுத்த நடவடிக்கைகளில் சுமார் 10,000 ரோஹிங்கியாக்கள் கொல்லப்பட்டதற்கான ஆதாரங்கள் உள்ளதாக…

145 0 0
உலக செய்திகள்

உக்ரைனுக்கு 1,000 நீண்ட தூரத் தாக்குதல் ட்ரோன்களை வழங்க பிரித்தானியா தீர்மானம்

ரஷ்யாவின் முன்னரங்கப் பகுதிகளுக்கு அப்பால் உள்ள இலக்குகள் மீது தாக்குதல் நடத்துவதற்காக, உக்ரைனுக்கு 1,000 நீண்ட தூரத் தாக்குதல் ட்ரோன் வானுர்திகளை வழங்க பிரித்தானியா தீர்மானித்துள்ளது. உக்ரைனுக்கு…

145 0 0
உலக செய்திகள்

வரலாற்றுச் சிறப்புமிக்க முத்தரப்புச் சந்திப்பு: ட்ரம்ப், புடின், மற்றும் சீ ஜின்பிங் பங்கேற்பு

ஆசிய-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு (APEC) உச்சிமாநாட்டிற்கு இடையே, சீனாவின் ஷென்சென் நகரில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் மற்றும் சீன ஜனாதிபதி…

144 0 0