உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
6 செவ்வாய்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

கல்முனை வலயக் கல்வி அலுவலக நிதி உதவியாளராக திருமதி எஸ்.எம்.எப்.அமான் நியமனம்.!

இலங்கை செய்திகள் 6 மாதங்கள் முன்
74 பார்வைகள்

கல்முனை வலயக் கல்வி அலுவலக நிதி உதவியாளராக மாகாண முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் சேவையின் வகுப்பு ஒன்றைச் சேர்ந்த சிரேஷ்ட உத்தியோகத்தர் திருமதி எஸ். எம். எப். அமான் நியமிக்கப்பட்டுள்ளார்.

இவருக்கான நியமன கடிதத்தை கல்முனை வலயக் கல்வி பணிப்பாளர் எம்.எஸ். ஸஹதுல் நஜீம் நேற்று (20) வழங்கி வைத்தார்.

இந்த நிகழ்வில் கல்முனை வலய கல்வி அலுவலக கணக்காளர் ரீ.லிங்கேஸ்வரனும் கலந்து கொண்டனர்.

இதனைத் தொடர்ந்து திருமதி எஸ் .எம். எப். அமான் நிதி உதவியாளர் பதவிக்கான கடமைகளை பொறுப்பேற்கும் நிகழ்வு கணக்காளர் ரீ.லிங்கேஸ்வரன் தலைமையில் நிதிப் பிரிவில் இடம்பெற்றது.

அத்துடன் கல்முனை வலயக் கல்வி அலுவலக நிதி பிரிவின் பிரதம முகாமைத்துவ சேவை உத்தியோகத்தராக மாகாண முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் சேவையின் தரம் 1 ஐச் சேர்ந்த திரு .ஜெயகிருஷ்னா நியமிக்கப்பட்டு பொறுப்புக்களை ஏற்றுக் கொண்டமையும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிகழ்வில் நிதிப் பிரிவு உத்தியோகத்தர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

அம்பாறை செய்திகள்

ஐஸ் போ**தைப்பொருளுடன் இளைஞன் கைது.!

4 கிராமுக்கும் அதிகமான ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் 21 வயதுடைய இளைஞன் சம்மாந்துறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று திங்கட்கிழமை(5) அம்பாறை மாவட்டம், சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில்…

60 0 0
அம்பாறை செய்திகள்

பண்டைய வரலாற்றில் வீரமுனையும் சிந்தாயாத்திரைப் பிள்ளையார் திருத்தலமும் எனும் நூல் வெளியீடு.!

2000 வருடங்களுக்கு முற்பட்ட வரலாற்றினைக் கொண்ட அம்பாறை மாவட்டத்தின் வீரமுனை கிராமத்தின் வரலாறு ஆய்வு செய்யப்பட்டு எழுதப்பட்ட “பண்டைய வரலாற்றில் வீரமுனையும் சிந்தாயாத்திரைப் பிள்ளையார் திருத்தலமும்”எனும் நூல்…

77 0 0
அம்பாறை செய்திகள்

யானையின் தாக்குதலுக்கு இலக்கான மாணவன்.!

அம்பாறை – மத்திய முகாம் 03 ஆம் பிரிவைச் சேர்ந்த 15 வயதுடைய பாடசாலை மாணவன் காட்டு யானையின் தாக்குதலுக்குள்ளாகி காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச் சோக…

93 0 0
அம்பாறை செய்திகள்

தேசிய கல்வியியற் கல்லூரி மாணவிகளுக்கு பா**லியல் தொல்லை; விரிவுரையாளர் கைது.!

அம்பாறை மாவட்டத்தில் அமைந்துள்ள அட்டாளைச்சேனை தேசிய கல்வியியற் கல்லூரியின் ஆசிரிய பயிற்சி மாணவிகளுக்கு ஆபாசக் காணொளிகளைக் காட்டி பாலியல் ரீதியாகத் துன்புறுத்தல் வழங்கிவந்த 55 வயதுடைய விரிவுரையாளர்…

81 0 0