உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
24 வியாழன்

“வெற்றி பெற்றால் 4 லட்சம் பேர் நாடு கடத்தப்படுவர்”: ரிபார்ம் யுகே கட்சியின் அதிரடி குடியேற்றக் கொள்கை!

உலக செய்திகள் 5 மாதங்கள் முன்
37 பார்வைகள்

பிரித்தானியாவின் ரிபார்ம் யுகே (Reform UK) கட்சி, பொதுத்தேர்தலில் வெற்றி பெற்றால் கடந்த ஐந்து ஆண்டுகளில் வழங்கப்பட்ட அனைத்து புகலிடக் கோரிக்கைகளையும் (Asylum Claims) மீண்டும் மறுபரிசீலனை செய்யப்போவதாக வாக்குறுதி அளித்துள்ளது.

நைஜல் ஃபராஜ் தலைமையிலான ‘ரிபார்ம் யுகே’ கட்சி, தான் ஆட்சிக்கு வந்தால் 2021-ஆம் ஆண்டிலிருந்து வழங்கப்பட்ட அனைத்து புகலிடக் கோரிக்கைகளையும் உடனடியாக ஆய்வு செய்யப்போவதாக அறிவித்துள்ளது.

இந்தத் திட்டத்தின் மூலம், தகுதி நீக்கம் செய்யப்படுபவர்கள், விசா காலம் முடிந்தும் தங்கியிருப்பவர்கள் மற்றும் ‘பாதுகாப்பான நாடு’ என வகைப்படுத்தப்பட்ட நாடுகளிலிருந்து வந்தவர்கள் என சுமார் 4,00,000 பேர் நாடு கடத்தப்பட வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

இதேவேளை, சிறிய படகுகள் மூலம் சட்டவிரோதமாக வருபவர்களுக்கு வாழ்நாள் தடை விதிப்பதுடன், அடுத்த ஐந்து ஆண்டுகளில் 6 லட்சம் பேரை நாடு கடத்துவது இந்த கட்சியின் முக்கிய இலக்காக காணப்படுகிறது.

மேலும், நாடு கடத்தல் நடவடிக்கைகளை எளிதாக்க, ஐரோப்பிய மனித உரிமைகள் உடன்படிக்கையிலிருந்து (ECHR) பிரித்தானியா வெளியேற வேண்டும் என்பது அக்கட்சியின் நிலைப்பாடாக காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் ரிபார்ம் யுகே கட்சியின் இந்த அறிவிப்பு பிரித்தானிய அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் : ட்ரம்ப் எச்சரிக்கை!

போரை முடிவுக்குக் கொண்டுவர ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால் ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் செவ்வாயன்று (22) எச்சரித்தார். ஆனாலும், ஐக்கிய நாடுகள் சபையில்…

98 0 0
உலக செய்திகள்

ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க ஈரான் நிபந்தனை!

அமெரிக்கா தனது இராணுவ நெருக்குவாரங்களைக் குறைத்து, ஈரானிய துறைமுகங்கள் மீதான முற்றுகையை நீக்கினால், அடுத்த ஏழு நாட்களுக்குள் ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறக்க முடியும் என ஈரானின்…

94 0 0
உலக செய்திகள்

உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கிக்கும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பிற்கும் இடையே பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு

உக்ரைனிய ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் தலைமையகத்தில் சந்திக்கவுள்ளதுடன், ரஷ்யாவுடனான தாக்குதல்களை நிறுத்துவதற்கான சமரச முயற்சியை முன்னெடுக்கவுள்ளார்.…

101 0 0
உலக செய்திகள்

அமெரிக்காவை சென்றடைந்தார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

ஐக்கிய நாடுகள் சபையின் 81 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி திங்களன்று (21) நியூயோர்க் சென்றடைந்தார். அமெரிக்கா-ஈரான் இடையிலான…

32 0 0