உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
24 வியாழன்

மாண்டல்சன் விவகாரத்தில் பிரதமர் கீர் ஸ்டார்மர் நாடாளுமன்றத்தில் இன்று விளக்கமளிப்பு!

உலக செய்திகள் 5 மாதங்கள் முன்
38 பார்வைகள்

அமெரிக்காவுக்கான தூதராக லோர்ட் மாண்டல்சன் (Lord Mandelson) நியமிக்கப்பட்டதில் நிலவும் பாதுகாப்பு சோதனை குளறுபடிகள் குறித்து, பிரதமர் Sir Keir Starmer இன்று நாடாளுமன்றத்தில் விளக்கமளிக்கவுள்ளார்.

மாண்டல்சனின் நியமனத்தின் போது ‘முறையான நடைமுறைகள்’ பின்பற்றப்பட்டதாக பிரதமர் ஏற்கனவே கூறிவந்த நிலையில், ஆரம்பகட்ட சோதனையில் தெரிவிக்கப்பட்ட எச்சரிக்கைகள் தமக்கு மறைக்கப்பட்டதாக அவர் தற்போது தெரிவித்துள்ளார்.

இது குறித்து கடந்த வாரம் தான் தமக்குத் தெரியவந்ததாக பிரதமர் கூறினாலும், ஓராண்டு காலமாக இந்தத் தகவல்கள் அவருக்குத் தெரியாமல் இருந்தது நம்பத்தகுந்ததாக இல்லை என எதிர்க்கட்சித் தலைவி கெமி பேடனொக் (Kemi Badenoch) குற்றஞ்சாட்டியுள்ளார்.

பிரதமர் நாடாளுமன்றத்தைத் தவறாக வழிநடத்தியுள்ளதால் அவர் உடனடியாக பதவி விலக வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.

ஏற்கனவே இந்த சர்ச்சை காரணமாக பிரதமரின் தலைமை அதிகாரி மற்றும் வெளியுறவுத்துறை உயர் அதிகாரி ஆகியோர் பதவி விலகியுள்ள நிலையில், இன்று சமர்ப்பிக்கப்படவுள்ள ரகசிய ஆவணங்கள் பிரதமருக்கு மேலும் நெருக்கடியைத் தரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்பாக, ஜெப்ரி எப்ஸ்டீன் உடனான தொடர்பு மற்றும் நிதி விவகாரங்கள் குறித்த எச்சரிக்கைகள் ஏன் புறக்கணிக்கப்பட்டன என்பது குறித்து இன்று விவாதிக்கப்படவுள்ளது.

இதற்கிடையில், லோர்ட் மாண்டல்சன் மீது குற்றவியல் விசாரணைகளும் முன்னெடுக்கப்பட்டு வருவதால், லேபர் கட்சி அரசாங்கம் அரசியல் நெருக்கடியைச் சந்தித்துள்ளது

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் : ட்ரம்ப் எச்சரிக்கை!

போரை முடிவுக்குக் கொண்டுவர ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால் ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் செவ்வாயன்று (22) எச்சரித்தார். ஆனாலும், ஐக்கிய நாடுகள் சபையில்…

98 0 0
உலக செய்திகள்

ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க ஈரான் நிபந்தனை!

அமெரிக்கா தனது இராணுவ நெருக்குவாரங்களைக் குறைத்து, ஈரானிய துறைமுகங்கள் மீதான முற்றுகையை நீக்கினால், அடுத்த ஏழு நாட்களுக்குள் ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறக்க முடியும் என ஈரானின்…

94 0 0
உலக செய்திகள்

உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கிக்கும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பிற்கும் இடையே பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு

உக்ரைனிய ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் தலைமையகத்தில் சந்திக்கவுள்ளதுடன், ரஷ்யாவுடனான தாக்குதல்களை நிறுத்துவதற்கான சமரச முயற்சியை முன்னெடுக்கவுள்ளார்.…

101 0 0
உலக செய்திகள்

அமெரிக்காவை சென்றடைந்தார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

ஐக்கிய நாடுகள் சபையின் 81 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி திங்களன்று (21) நியூயோர்க் சென்றடைந்தார். அமெரிக்கா-ஈரான் இடையிலான…

32 0 0