உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
6 செவ்வாய்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

பிரஜாசக்தி நிகழ்ச்சித் திட்டம்; புதிய வீடுகளுக்கு அடிக்கல் நாட்டி வைப்பு.!

இலங்கை செய்திகள் 6 மாதங்கள் முன்
74 பார்வைகள்

“தனக்கான ஓர் இடம், அழகான வாழ்கை” எனும் தொனிப்பொருளில் காரைதீவு பிரதேச செயலகத்திற்குட்பட்ட மாளிகைக்காடு, காரைதீவு, மாவடிப்பள்ளி ஆகிய கிராமங்களில் தெரிவு செய்யப்பட்ட பயனாளிக்கான 01 மில்லியன் ரூபாய் பெறுமதியான வீடுகளுக்கான அடிக்கல் நடும் நிகழ்வு அம்பாறை மாவட்ட கரையோர பிரதேசங்களின் ஒருங்கிணைப்பு குழுத் தலைவரும், அரசியலமைப்பு பேரவையின் உறுப்பினரும், நாடாளுமன்ற உறுப்பினருமான அபூபக்கர் ஆதம்பாவாவினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

பிரஜாசக்தி நிதி ஒதுக்கீட்டின் கீழ் தேசிய வீடமைப்பு அதிகார சபையினால் நடைமுறைப்படுத்தப்பட்ட இந் நிகழ்வில், தேசிய மக்கள் சக்தியின் காரைதீவு பிரதேச சபை உறுப்பினர் பர்ஹான், காரைதீவு செயற்பாட்டாளர்களான பத்மசீலன், ஆசிரியர் சுசி மற்றும் மாவடிப்பள்ளி அமைப்பாளரும், பிரஜாசக்தி தவிசாளருமாகிய சப்றூஸ் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில், அம்பாறை மாவட்ட தேசிய வீடமைப்பு அதிகார சபையின் தொழிநுட்ப உத்தியோகத்தர்கள், கிராம உத்தியோகத்தர்கள், நாடாளுமன்ற உறுப்பினரின் செயலாளர் ஆசிரியர் ஆரிப் உட்பட பிரஜாசக்தி உறுப்பினர்கள், பொதுமக்கள், பயனாளிகள், ஆதரவாளர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

அம்பாறை செய்திகள்

ஐஸ் போ**தைப்பொருளுடன் இளைஞன் கைது.!

4 கிராமுக்கும் அதிகமான ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் 21 வயதுடைய இளைஞன் சம்மாந்துறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று திங்கட்கிழமை(5) அம்பாறை மாவட்டம், சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில்…

60 0 0
அம்பாறை செய்திகள்

பண்டைய வரலாற்றில் வீரமுனையும் சிந்தாயாத்திரைப் பிள்ளையார் திருத்தலமும் எனும் நூல் வெளியீடு.!

2000 வருடங்களுக்கு முற்பட்ட வரலாற்றினைக் கொண்ட அம்பாறை மாவட்டத்தின் வீரமுனை கிராமத்தின் வரலாறு ஆய்வு செய்யப்பட்டு எழுதப்பட்ட “பண்டைய வரலாற்றில் வீரமுனையும் சிந்தாயாத்திரைப் பிள்ளையார் திருத்தலமும்”எனும் நூல்…

77 0 0
அம்பாறை செய்திகள்

யானையின் தாக்குதலுக்கு இலக்கான மாணவன்.!

அம்பாறை – மத்திய முகாம் 03 ஆம் பிரிவைச் சேர்ந்த 15 வயதுடைய பாடசாலை மாணவன் காட்டு யானையின் தாக்குதலுக்குள்ளாகி காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச் சோக…

93 0 0
அம்பாறை செய்திகள்

தேசிய கல்வியியற் கல்லூரி மாணவிகளுக்கு பா**லியல் தொல்லை; விரிவுரையாளர் கைது.!

அம்பாறை மாவட்டத்தில் அமைந்துள்ள அட்டாளைச்சேனை தேசிய கல்வியியற் கல்லூரியின் ஆசிரிய பயிற்சி மாணவிகளுக்கு ஆபாசக் காணொளிகளைக் காட்டி பாலியல் ரீதியாகத் துன்புறுத்தல் வழங்கிவந்த 55 வயதுடைய விரிவுரையாளர்…

81 0 0