உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
29 சனி

கட்டுத் துப்பாக்கி வெடித்துஒருவர் பரிதாப உயிரிழப்பு!

இலங்கை செய்திகள் 4 மாதங்கள் முன்
34 பார்வைகள்

ஆனமடுவ, பரமாகந்த மலைப் பகுதியில் வன விலங்குகளை வேட்டையாடுவதற்காகச் சட்டவிரோதமான முறையில் அமைக்கப்பட்டிருந்த கட்டுத் துப்பாக்கி வெடித்ததில், 40 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் ஆனமடுவ, பரமாகந்தகம பகுதியைச் சேர்ந்த ரன்கொத்பேடி துரயலாகே தினேஷ் மங்கள அமரதாச (வயது 40) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

நேற்று வெள்ளிக்கிழமை இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

பரமாகந்த மலையின் பின்புறப் பகுதியில் விலங்குகளை வேட்டையாடுவதற்காகத் தாம் கட்டுத் துப்பாக்கி ஒன்றை வைத்திருந்ததாகவும், அங்கு சென்று பார்த்தபோது துப்பாக்கி வெடித்து தினேஷ் என்பவர் உயிரிழந்து கிடப்பதைக் கண்டதாகவும் 42 வயதுடைய நபர் ஒருவர் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

இதனையடுத்து, முறைப்பாடு செய்த மேற்படி நபரையே சந்தேகத்தின் பேரில் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

உயிரிழந்த நபர் எதற்காக அந்த அடர்ந்த காட்டுப் பகுதிக்குச் சென்றார் என்பதற்கான காரணம் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சடலம் மீட்கப்பட்டுள்ள நிலையில், இது குறித்த நீதிவான் விசாரணைகளை முன்னெடுப்பதற்குப் பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

சட்டவிரோத வேட்டை நடவடிக்கையால் ஏற்பட்ட இந்த உயிரிழப்பு குறித்து ஆனமடுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

அபிவிருத்தி உத்தியோகத்தர்களை தொடர்ச்சியாக ஏமாற்றும் அநுர அரசு : சஜித் குற்றச்சாட்டு

தேர்தல் காலத்திலும் அதற்குப் பின்னரும் இந்த அரசானது ஒரு இலட்சத்து 50 ஆயிரம் அபிவிருத்தி உத்தியோகத்தர்களையும், 14 ஆயிரத்து 8 பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்களையும் தொடர்ச்சியாக ஏமாற்றி…

24 0 0
இலங்கை செய்திகள்

மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்துங்கள்! : சஜித் வலியுறுத்தல்!!

அரசு மக்களுக்குச் சிறந்த சேவையைத்தான் ஆற்றி வருவதாகக் கூறினால், உடனடியாக மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறு தான் சவால் விடுவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.…

46 0 0
இலங்கை செய்திகள்

காணாமல் ஆக்கப்பட்டோர் தின நிகழ்வுகளில் தமிழரசுக் கட்சி கலந்துகொள்ளாது.!

இலங்கையில் இம்முறை நடைபெறும் சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான தின நிகழ்வுகளில் இலங்கைக் தமிழரசுக் கட்சி கலந்துகொள்வதில்லை என்று அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இது தொடர்பில் இலங்கைக் தமிழரசுக்…

72 0 0
இலங்கை செய்திகள்

உலக வர்த்தக மையமாக வடக்கை மாற்றுங்கள்! – மனோ கணேசன் எம்.பி வலியுறுத்தல்

உலக வர்த்தக மையமாகவடக்கை மாற்றுங்கள்! வட இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக்கான மிகப்பெரிய மூலோபாய வாய்ப்புகள் பலாலி சர்வதேச வானூர்தி நிலையமும் காங்கேசன்துறை துறைமுகமும் ஆகும் என்று தமிழ்…

65 0 0