உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
29 சனி

தியாக தீபம் அன்னை பூபதியின் நினைவாக ஊர்திப் பவணி: 10ம் நாளாக மட்டக்களப்பு படுவான்கரையில் எழுச்சி!

இலங்கை செய்திகள் 4 மாதங்கள் முன்
37 பார்வைகள்

தியாக தீபம் அன்னை பூபதியின் 38வது ஆண்டு நினைவேந்தலை அனுஸ்டிக்கும் முகமாக எதிர்கால சந்ததிக்கு அன்னையின் தியாகத்தையும், தமிழின போராட்டத்தின் வரலாற்றையும் கடத்தும் முகமாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியால் முன்னெடுக்கப்பட்டு வரும் அன்னை பூபதியின் திருவுருவப் படம் தாங்கிய ஊர்திப் பவணி 10ம் நாளான இன்று மட்டக்களப்பின் படுவான்கரை பிரதேசங்கள் பலவற்றிற்குக் கொண்டு செல்லப்பட்டு மக்கள் அஞ்சலிக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

10ம் நாளான இன்று காலை களுவாஞ்சிக்குடி நகரில் ஆரம்பிக்கப்பட்ட இவ்வூர்திப் பவணியானது வெல்லாவெளி, மண்டூர், கொக்கட்டிச்சோலை, வவுணதீவு பிரதேசங்களுக்குச் சென்று அங்கு மக்களின் அஞ்சலிக்கான ஏற்பாடுகள் நடைபெற்றதுடன், மக்களும் உணர்வுபூர்வமாக அன்னைக்கு அஞ்சலி செலுத்தினர்.

கடந்த 09ம் திகதி யாழ் நல்லூர் தியாகி திலீபன் நினைவிடத்தில் ஆரம்பிக்கப்பட்ட இவ்வூர்திப் பவணி வடக்கு கிழக்கு பகுதிகளிலுள்ள பிரதேசங்கள் அனைத்திற்கும் கொண்டு செல்லப்பட்டு நாளை அன்னை பூபதியின் நினைவிடத்தில் முடிவுறுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இன்றைய பவணியின் போது தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன், கட்சியின் தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ் உள்ளிட்ட பிரமுகர்கள் ஊர்தியுடன் பயணித்தமை குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

அபிவிருத்தி உத்தியோகத்தர்களை தொடர்ச்சியாக ஏமாற்றும் அநுர அரசு : சஜித் குற்றச்சாட்டு

தேர்தல் காலத்திலும் அதற்குப் பின்னரும் இந்த அரசானது ஒரு இலட்சத்து 50 ஆயிரம் அபிவிருத்தி உத்தியோகத்தர்களையும், 14 ஆயிரத்து 8 பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்களையும் தொடர்ச்சியாக ஏமாற்றி…

24 0 0
இலங்கை செய்திகள்

மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்துங்கள்! : சஜித் வலியுறுத்தல்!!

அரசு மக்களுக்குச் சிறந்த சேவையைத்தான் ஆற்றி வருவதாகக் கூறினால், உடனடியாக மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறு தான் சவால் விடுவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.…

46 0 0
இலங்கை செய்திகள்

காணாமல் ஆக்கப்பட்டோர் தின நிகழ்வுகளில் தமிழரசுக் கட்சி கலந்துகொள்ளாது.!

இலங்கையில் இம்முறை நடைபெறும் சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான தின நிகழ்வுகளில் இலங்கைக் தமிழரசுக் கட்சி கலந்துகொள்வதில்லை என்று அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இது தொடர்பில் இலங்கைக் தமிழரசுக்…

72 0 0
இலங்கை செய்திகள்

உலக வர்த்தக மையமாக வடக்கை மாற்றுங்கள்! – மனோ கணேசன் எம்.பி வலியுறுத்தல்

உலக வர்த்தக மையமாகவடக்கை மாற்றுங்கள்! வட இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக்கான மிகப்பெரிய மூலோபாய வாய்ப்புகள் பலாலி சர்வதேச வானூர்தி நிலையமும் காங்கேசன்துறை துறைமுகமும் ஆகும் என்று தமிழ்…

65 0 0