பெல்ஜியம் மண்ணில் 28 ஆவது தமிழர் திரு யாத்திரை!
நெதர்லாந்து தமிழர் கத்தோலிக்க ஆன்மீகப்பணியகம், 28 ஆவது ஆண்டாகத் தமிழர் திருயாத்திரை நிகழ்வை முன்னெடுக்கவுள்ளது.
பெல்ஜியம் நாட்டில் அமைந்துள்ள பன்னியூ (Banneux) அன்னை திருத்தலத்தில் இந்நிகழ்வு சிறப்பாக நடைபெறவுள்ளது.
இந்தநிலையில், எதிர்வரும் 2026-ஆம் ஆண்டு மே மாதம் 09 ஆம் திகதி சனிக்கிழமை அன்று இந்நிகழ்வு முன்னெடுக்கப்படவுள்ளது.
மருதமடு அன்னை குடி கொண்டிருக்கும் இப்புனித நீர் ஊற்றை நோக்கி நடைபெறும் இந்த ஆன்மீகப் பயணத்தில் அன்னை மரியாளினதும் மருதமடு அன்னையினதும் அருளாசியைப் பெற அனைத்து தமிழ் இறைமக்களுக்கும் அன்புடன் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அன்றைய தின நிகழ்வுகள் காலை 10.00 மணிக்குத் திருமலை மறைமாவட்டக் குருமுதல்வர் அருட்பணி போல் றொபின்சன் அடிகளார் தலைமையிலான குணமாக்கும் நற்கருணை ஆராதனையுடன் ஆரம்பமாகும்.
அதனைத் தொடர்ந்து, மதியம் 12.30 மணியளவில் அன்னையின் புனித நீர் ஊற்றை நோக்கிப் பக்திபூர்வமான மெழுகுதிரிப் பவனி இடம்பெறும்.
