உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

நாட்டுப்படகில் இலங்கைக்கு கடத்த விருந்த 91 லட்சம் ரூபா மதிப்பிலான 7 லட்சம் வெளிநாட்டு சிகரெட் பறிமுதல்!

இந்திய செய்திகள் 5 மாதங்கள் முன்
41 பார்வைகள்

ராமநாதபுரம் மாவட்டம் புதுமடம் கடற்கரை வழியாக இலங்கைக்குக் கடத்த முயன்ற 91 லட்சம் ரூபாய் மதிப்பிலான வெளிநாட்டுச் சிகரெட்டுகளை மெரைன் பொலிஸார் அதிரடியாகப் பறிமுதல் செய்துள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டம் புதுமடம் கடற்கரை வழியாக இலங்கைக்கு நாட்டுப் படகுகள் மூலம் சட்டவிரோதப் பொருட்கள் கடத்தப்படவுள்ளதாக மெரைன் பொலிஸார் மற்றும் கீழக்கரை சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.

இதனடிப்படையில், இன்று அதிகாலை ஒரு மணி அளவில் அதிகாரிகள் அந்தப் பகுதியில் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டனர்.புதுமடம் கடற்கரையில் சரக்கு வாகனம் ஒன்றிலிருந்து சில நபர்கள் மூட்டைகளை இறக்கிப் பதுக்கி வைத்திருப்பதை அதிகாரிகள் அவதானித்தனர்.

அதிகாரிகளைக் கண்டதும் கடத்தல்காரர்களில் சிலர் தப்பியோடிய நிலையில், மெரைன் பொலிஸார் ஒருவரை மடக்கிப் பிடித்தனர்.அங்கு வைக்கப்பட்டிருந்த 35 சாக்கு மூட்டைகளைச் சோதனை செய்தபோது, அவற்றில் 7 லட்சம் வெளிநாட்டுச் சிகரெட்டுகள் இருப்பது கண்டறியப்பட்டது.

7 லட்சம் வெளிநாட்டுச் சிகரெட்டுகள், சுமார் 91 லட்சம் ரூபாய், கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட ஒரு சரக்கு வாகனம் என்பன பறிமுதல் செய்யப்பட்டன.இந்தக் கடத்தல் சம்பவம் தொடர்பாகப் புதுமடம் மேற்குத் தெருவைச் சேர்ந்த முருகன் 38 வயது உடையவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

விசாரணையில், இந்தச் சிகரெட்டுகளை இன்று அதிகாலை கடல் வழியாக இலங்கைக்குக் கடத்தத் திட்டமிட்டிருந்தது உறுதியானது.

பறிமுதல் செய்யப்பட்ட பொருட்கள் அனைத்தும் சுங்கத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.கைது செய்யப்பட்ட நபரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திச் சிறையில் அடைப்பதற்கான நடவடிக்கைகளை மெரைன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.தப்பியோடிய ஏனைய நபர்களைத் தேடும் பணியும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இந்திய செய்திகள்

காமராஜர் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம் : மாணவர்களுடன் சாப்பிட்ட முதல்வர் விஜய்

பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டத்தை முதலமைச்சர் விஜய் இன்று தொடங்கி வைத்தார். காமராஜர் காலை உணவுத் திட்டம்தமிழகத்தில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான காலை உணவுத் திட்டம்…

45 0 0
இந்திய செய்திகள்

மும்பையில் பாலத்தில் இருந்து பாய்ந்த BMW கார் – மூவர் உயி@ரிழப்பு!

மும்பையில் உள்ள ‘கோஸ்டல் வீதி’ (Coastal Road) பாலத்திலிருந்து அதிநவீன பிஎம்டபிள்யூ (BMW) கார் ஒன்று கீழே பாய்ந்து விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்த மூவர் உயிரிழந்தனர். மற்றொருவர்…

44 0 0
இந்திய செய்திகள்

முதல்வர் விஜய்யின் லண்டன் பயணத்தை கடுமையாக விமர்சித்த அண்ணாமலை!

தமிழக பாஜகவின் முன்னாள் தலைவர் கே. அண்ணாமலை, முதலமைச்சர் ஜோசப் விஜய் அண்மையில் மேற்கொண்ட லண்டன் பயணத்தைக் கடுமையாக விமர்சித்துள்ளார். தமிழகத்திற்கான முதலீடுகளை ஈர்க்க இங்கிலாந்து சரியான…

30 0 0
இந்திய செய்திகள்

“கேள்வி கேட்டால் பாட்டுப் பாடுகிறார்கள் – முதலமைச்சர் பஞ்ச் டயலொக் பேசுகிறார்” : உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்!

தமிழ்நாடு சட்டமன்றத்தில் எதிர்க்கட்சியினர் கேள்வி எழுப்பும்போது, ஆளுங்கட்சியினர் அதற்கு பதிலளிக்காமல் பாடல்களைப் பாடுவதாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் விமர்சித்துள்ளார். திருமண விழா ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய…

47 0 0