உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
24 வியாழன்

பிரித்தானிய இராணுவத்துடன் பணியாற்றிய ஆப்கான் வீரர் மீது பிரித்தானியர்கள் தாக்குதல்!

உலக செய்திகள் 5 மாதங்கள் முன்
36 பார்வைகள்

பிரித்தானிய இராணுவத்துடன் இணைந்து ஆப்கானிஸ்தானில் பணியாற்றிய விசேட அதிரடிப்படை வீரர் ஒருவர், லண்டனில் பாதுகாப்பு உத்தியோகத்தராகப் பணியாற்றியபோது கடந்த மார்ச் மாதம் தாக்கப்பட்டதில் பலத்த மூளைக் காயம் அடைந்துள்ளார்.

ஆப்கானிஸ்தான் விசேட அதிரடிப்படையின் முன்னாள் வீரரான 39 வயதுடைய நூர் அஜீஸ் அகமத்சாய் (Noor Aziz Ahmadzai), கடந்த மாதம் வேமவுத் (Weymouth) ரயில் நிலையத்தில் பாதுகாப்பு உத்தியோகத்தராகப் பணியில் இருந்தபோது தாக்குதலுக்கு உள்ளானார்.

இத்தாக்குதலில் அவரது மூளையில் கடும் இரத்தக் கசிவு ஏற்பட்டு, அவர் மயக்கமடைந்த நிலையில் உலங்குவானூர்தி மூலம் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.

தற்போது அவர் சுயநினைவிற்குத் திரும்பியுள்ள போதிலும், அவரது பேச்சு மற்றும் உடல் நிலையில் பாரிய பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதால் குணமடைய நீண்ட காலம் எடுக்கும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, இவர் 2021-ல் தாலிபான்கள் ஆப்கானைக் கைப்பற்றியபோது, பிரித்தானிய இராணுவத்திற்கு அவர் வழங்கிய ஒத்துழைப்பிற்காக ‘ஆப்கான் இடமாற்றம் மற்றும் உதவி கொள்கையின்’ (ARAP) கீழ் பிரித்தானியாவிற்கு அழைத்து வரப்பட்டார்.

பிரித்தானிய இராணுவத்தில் சேர்ந்து பணியாற்ற வேண்டும் என்பதே நூரின் விருப்பமாக இருந்தது.

ஆனால், அவர் பிரித்தானியப் பிரஜையாக மாறுவதற்கு இன்னும் 5 ஆண்டுகள் அங்கேயே வசிக்க வேண்டும் என்ற விதியின் காரணமாக அவருக்கு அந்த வாய்ப்பு கிடைக்கவில்லை.

இந்தத் தாக்குதல் தொடர்பாக 17 வயதுடைய இரண்டு சிறுமிகளைப் பிரித்தானிய போக்குவரத்துப் பொலிஸார் (BTP) கைது செய்து, பின்னர் மேலதிக விசாரணைகளுக்காகப் பிணையில் விடுவித்துள்ளனர்.

பிரித்தானியாவிற்காகத் தனது உயிரைப் பணையம் வைத்துப் போரிட்ட ஒரு வீரர், இன்று அந்த நாட்டிலேயே தாக்குதலுக்கு உள்ளாகி, உரிய அங்கீகாரமும் உதவியும் இன்றி மருத்துவமனையில் போராடி வருவது பலரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் : ட்ரம்ப் எச்சரிக்கை!

போரை முடிவுக்குக் கொண்டுவர ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால் ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் செவ்வாயன்று (22) எச்சரித்தார். ஆனாலும், ஐக்கிய நாடுகள் சபையில்…

98 0 0
உலக செய்திகள்

ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க ஈரான் நிபந்தனை!

அமெரிக்கா தனது இராணுவ நெருக்குவாரங்களைக் குறைத்து, ஈரானிய துறைமுகங்கள் மீதான முற்றுகையை நீக்கினால், அடுத்த ஏழு நாட்களுக்குள் ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறக்க முடியும் என ஈரானின்…

95 0 0
உலக செய்திகள்

உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கிக்கும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பிற்கும் இடையே பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு

உக்ரைனிய ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் தலைமையகத்தில் சந்திக்கவுள்ளதுடன், ரஷ்யாவுடனான தாக்குதல்களை நிறுத்துவதற்கான சமரச முயற்சியை முன்னெடுக்கவுள்ளார்.…

101 0 0
உலக செய்திகள்

அமெரிக்காவை சென்றடைந்தார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

ஐக்கிய நாடுகள் சபையின் 81 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி திங்களன்று (21) நியூயோர்க் சென்றடைந்தார். அமெரிக்கா-ஈரான் இடையிலான…

32 0 0