உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
24 வியாழன்

இந்தோனேசிய ஹெலிகொப்டர் விபத்தில் எட்டு பேர் உயிரிழப்பு!

உலக செய்திகள் 5 மாதங்கள் முன்
35 பார்வைகள்

இந்தோனேசியாவின் மேற்கு கலிமந்தான் (Kalimantan) மாகாணத்தில், ஆறு பயணிகள் மற்றும் இரண்டு பணியாளர்களை ஏற்றிச் சென்ற ஏர்பஸ் H130 ஹெலிகொப்டர் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்தில் ஹெலிகொப்டரில் பயணித்த அனைவரும் உயிரிழந்ததாக உள்ளூர் அதிகாரிகளை மேற்கோள் காட்டி ரொய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

இந்தோனேசியாவின் மீட்பு அமைப்பின் தலைவர் மொஹமட் ஷாஃபியின் கூற்றுப்படி, ஏப்ரல் 16 ஆம் திகதி காலை, மெலாவியில் உள்ள ஒரு தோட்டப் பகுதியிலிருந்து புறப்பட்ட ஐந்து நிமிடங்களுக்குப் பின்னர் ஹெலிகொப்டர் ரேடாரில் இருந்து மறைந்துவிட்டது.

பின்னர், தொடர்பு துண்டிக்கப்பட்ட இடத்திலிருந்து சுமார் 3 கி.மீ தொலைவில், விமானத்தின் வால் பகுதி என்று நம்பப்படும் சிதைவுகளை மீட்புக் குழுவினர் கண்டெடுத்தனர்.

விபத்து நடந்த இடம், சவாலான மலைப்பாங்கான நிலப்பரப்பைக் கொண்ட அடர்ந்த வனப்பகுதியில் அமைந்துள்ளது என்று குறிப்பிட்டார்.

ஹெலிகொப்டரில் இருந்த எட்டு பேரும் உயிரிழந்ததாக உள்ளூர் மீட்புப் பணித் துறை உறுதிப்படுத்தியுள்ளது.

ஹெலிகொப்டர் விபத்துக்கான காரணங்கள் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் : ட்ரம்ப் எச்சரிக்கை!

போரை முடிவுக்குக் கொண்டுவர ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால் ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் செவ்வாயன்று (22) எச்சரித்தார். ஆனாலும், ஐக்கிய நாடுகள் சபையில்…

98 0 0
உலக செய்திகள்

ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க ஈரான் நிபந்தனை!

அமெரிக்கா தனது இராணுவ நெருக்குவாரங்களைக் குறைத்து, ஈரானிய துறைமுகங்கள் மீதான முற்றுகையை நீக்கினால், அடுத்த ஏழு நாட்களுக்குள் ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறக்க முடியும் என ஈரானின்…

94 0 0
உலக செய்திகள்

உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கிக்கும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பிற்கும் இடையே பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு

உக்ரைனிய ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் தலைமையகத்தில் சந்திக்கவுள்ளதுடன், ரஷ்யாவுடனான தாக்குதல்களை நிறுத்துவதற்கான சமரச முயற்சியை முன்னெடுக்கவுள்ளார்.…

101 0 0
உலக செய்திகள்

அமெரிக்காவை சென்றடைந்தார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

ஐக்கிய நாடுகள் சபையின் 81 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி திங்களன்று (21) நியூயோர்க் சென்றடைந்தார். அமெரிக்கா-ஈரான் இடையிலான…

32 0 0