உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
24 வியாழன்

கர்ப்பிணிப் பெண் உயிரிழந்த சம்பவம் – இரண்டு லண்டன் பொலிஸ் அதிகாரிகள் மீது குற்றச்சாட்டு!

உலக செய்திகள் 5 மாதங்கள் முன்
50 பார்வைகள்

லண்டனில் கர்ப்பிணிப் பெண் மற்றும் அவரது வயிற்றில் இருந்த குழந்தை உயிரிழக்கக் காரணமான விபத்து தொடர்பாக, மெட்ரோபாலிட்டன் பொலிஸ் பிரிவைச் சேர்ந்த இரண்டு அதிகாரிகள் மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

கடந்த 2024 ஆம் ஆண்டு அக்டோபர் 17 ஆம் திகதி, தென்கிழக்கு லண்டனின் கிட்புரூக் (Kidbrooke) பகுதியில் உள்ள A20 வீதியில் அடையாளம் இடப்படாத பொலிஸ் வாகனம் ஒன்று மோதி குறித்த விபத்து ஏற்பட்டது.

இந்த விபத்தில் 38 வயதான கர்ப்பிணிப் பெண் ஒருவரின் வயிற்றில் இருந்த குழந்தை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது.

படுகாயமடைந்த அந்தப் பெண்ணும் பின்னர் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்தார்.

இதேவேளை, இந்தச் சம்பவம் குறித்து ‘பொலிஸ் நடத்தைக்கான சுயாதீன அலுவலகம்’ (IOPC) நடத்திய விரிவான விசாரணையைத் தொடர்ந்து, இரண்டு அதிகாரிகள் மீது தற்போது குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

அபாயகரமாக வாகனம் ஓட்டி மரணத்தை விளைவித்ததாக இவர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

குற்றம் சுமத்தப்பட்ட இவ்விருவரும் எதிர்வரும் மே மாதம் 28 ஆம் திகதி வெஸ்ட்மின்ஸ்டர் நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.

கடந்த ஆண்டு அக்டோபரில் இந்த விசாரணை நிறைவடைந்ததாக பொலிஸ் நடத்தைக்கான சுயாதீன அலுவலகம் தெரிவித்துள்ளது.

இந்த விபத்து லண்டனில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், தற்போது அதிகாரிகள் மீது எடுக்கப்பட்டுள்ள சட்ட நடவடிக்கை முக்கியத்துவம் பெற்றுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் : ட்ரம்ப் எச்சரிக்கை!

போரை முடிவுக்குக் கொண்டுவர ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால் ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் செவ்வாயன்று (22) எச்சரித்தார். ஆனாலும், ஐக்கிய நாடுகள் சபையில்…

98 0 0
உலக செய்திகள்

ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க ஈரான் நிபந்தனை!

அமெரிக்கா தனது இராணுவ நெருக்குவாரங்களைக் குறைத்து, ஈரானிய துறைமுகங்கள் மீதான முற்றுகையை நீக்கினால், அடுத்த ஏழு நாட்களுக்குள் ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறக்க முடியும் என ஈரானின்…

95 0 0
உலக செய்திகள்

உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கிக்கும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பிற்கும் இடையே பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு

உக்ரைனிய ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் தலைமையகத்தில் சந்திக்கவுள்ளதுடன், ரஷ்யாவுடனான தாக்குதல்களை நிறுத்துவதற்கான சமரச முயற்சியை முன்னெடுக்கவுள்ளார்.…

101 0 0
உலக செய்திகள்

அமெரிக்காவை சென்றடைந்தார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

ஐக்கிய நாடுகள் சபையின் 81 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி திங்களன்று (21) நியூயோர்க் சென்றடைந்தார். அமெரிக்கா-ஈரான் இடையிலான…

32 0 0