உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
24 வியாழன்

துருக்கி பாடசாலையில் துப்பாக்கி சூடு; ஒன்பது பேர் உயிரிழப்பு!

உலக செய்திகள் 5 மாதங்கள் முன்
40 பார்வைகள்

தென்கிழக்கு துருக்கியில் உள்ள ஒரு இடைநிலைப் பாடசாலையில் புதன்கிழமை 15 ஆம் திகதி 14 வயது மாணவன் ஒருவன், தன்னுடன் கல்வி பயிலும் எட்டு மாணவர்கள் உட்பட குறைந்தது ஒன்பது பேரைச் சுட்டுக் கொன்றதாகவும், மேலும் 13 பேரைக் காயப்படுத்தியதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இது, இரண்டு நாட்களில் நாட்டில் நடந்த இரண்டாவது பாடசாலை துப்பாக்கிச் சூட்டுச் சம்பவமாகும்.

கஹ்ரமன்மாராஸ் (Kahramanmaras) மாகாணத்தில் நடந்த தாக்குதலில் எட்டு மாணவர்களும் ஒரு ஆசிரியரும் உயிரிழந்ததாகவும், காயமடைந்தவர்களில் ஆறு பேர் கவலைக்கிடமான நிலையில் இருப்பதாகவும் துருக்கியின் உள்துறை அமைச்சர் முஸ்தபா சிஃப்ட்சி (Mustafa Ciftci) செய்தியாளர் தெரிவித்தார்.

இது எங்கள் மாணவர்களில் ஒருவரால் நடத்தப்பட்ட முற்றிலும் தனிப்பட்ட தாக்குதல், இது ஒரு பயங்கரவாத சம்பவம் அல்ல என்றும் அவர் விவரித்தார்.

முன்னதாக, கஹ்ரமன்மாராஸ் ஆளுநர் முகர்ரெம் உன்லுயர், துப்பாக்கிச் சூடு நடத்தியவர் அந்த அமளியில் தன்னைத்தானே சுட்டுக்கொண்டு இறந்துவிட்டதாகக் கூறியிருந்தார்.
அதேநேரேம், துப்பாக்கிச் சூடு நடத்தியவரின் தந்தை கைது செய்யப்பட்டதாக என்டிவி ஒளிபரப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.

துருக்கியில் துப்பாக்கிச் சட்டங்கள் பொதுவாகக் கடுமையாக உள்ளன; 21 வயதுக்கு மேற்பட்ட மற்றும் உரிமம் பெற்ற நபர்கள் மட்டுமே ஆயுதங்களை வைத்திருக்க அனுமதிக்கப்படுகிறார்கள்.

இருப்பினும், துருக்கியில் துப்பாக்கிகள் பரவலாகப் புழக்கத்தில் உள்ளன, பல பாதுகாப்பு அதிகாரிகள் ஆயுதங்களை எடுத்துச் செல்லவும் வைத்திருக்கவும் அனுமதிக்கப்படுகிறார்கள்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் : ட்ரம்ப் எச்சரிக்கை!

போரை முடிவுக்குக் கொண்டுவர ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால் ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் செவ்வாயன்று (22) எச்சரித்தார். ஆனாலும், ஐக்கிய நாடுகள் சபையில்…

98 0 0
உலக செய்திகள்

ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க ஈரான் நிபந்தனை!

அமெரிக்கா தனது இராணுவ நெருக்குவாரங்களைக் குறைத்து, ஈரானிய துறைமுகங்கள் மீதான முற்றுகையை நீக்கினால், அடுத்த ஏழு நாட்களுக்குள் ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறக்க முடியும் என ஈரானின்…

95 0 0
உலக செய்திகள்

உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கிக்கும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பிற்கும் இடையே பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு

உக்ரைனிய ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் தலைமையகத்தில் சந்திக்கவுள்ளதுடன், ரஷ்யாவுடனான தாக்குதல்களை நிறுத்துவதற்கான சமரச முயற்சியை முன்னெடுக்கவுள்ளார்.…

101 0 0
உலக செய்திகள்

அமெரிக்காவை சென்றடைந்தார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

ஐக்கிய நாடுகள் சபையின் 81 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி திங்களன்று (21) நியூயோர்க் சென்றடைந்தார். அமெரிக்கா-ஈரான் இடையிலான…

32 0 0