உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
24 வியாழன்

பாலி பகயோகோவின் முடிவுக்கு நீதிமன்றம் தடை!

உலக செய்திகள் 5 மாதங்கள் முன்
54 பார்வைகள்

Tribunal administratif de Montreuil நீதிமன்றம், Préfecture de la Seine-Saint-Denis தாக்கல் செய்த மனுவை விசாரித்து,Saint-Denis நகர மேயர் Bally Bagayoko வெளியிட்ட வாடகைதாரர் வெளியேற்றத் தடை உத்தரவை இடைக்காலமாக நிறுத்தி வைக்க தீர்மானித்துள்ளது. அந்த உத்தரவு சட்டபூர்வமா என்ற கேள்வியில் “கடுமையான சந்தேகம் உள்ளது” என நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.

கடந்த ஏப்ரல் 1ஆம் தேதி வெளியிடப்பட்ட இந்த நகராட்சி உத்தரவு, குடியிருப்பாளர்களை வெளியேற்றுவதற்கு முன் அவர்களுக்கு மாற்று வசதி ஏற்பாடு செய்யப்பட வேண்டும் என வலியுறுத்தியது. இவ்வுத்தரவை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த நீதிமன்றம், அதன் சட்டபூர்வ தன்மை குறித்து இறுதி தீர்ப்பு வரும் வரை தற்காலிகமாக நிறுத்த உத்தரவிட்டுள்ளது.

நீதிபதி, Conseil d’État வழங்கிய முன்னாள் தீர்ப்புகளை மேற்கோள் காட்டி, குடியிருப்பு வெளியேற்றங்களை தடுக்க மேயருக்கு அதிகாரம் இல்லை எனத் தெளிவுபடுத்தினார். இதன் மூலம், நீதித்துறையால் ஏற்கனவே தீர்மானிக்கப்பட்ட நடவடிக்கைகளை நிர்வாக அதிகாரிகள் மாற்ற முடியாது என்பதும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்த உத்தரவு சமூக அவசர நிலையை சமாளிக்க எடுத்த நடவடிக்கை என மேயர் விளக்கம் அளித்திருந்தார். ஆனால், அது சட்டத்திற்கு ஒவ்வாதது என நிர்வாகம் முன்பே தெரிவித்திருந்தது. இதற்கு முன்பும் Bagneux மற்றும் Gennevilliers போன்ற நகராட்சிகளில் இதேபோன்ற உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டு பின்னர் நீதிமன்றத்தால் நிறுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் : ட்ரம்ப் எச்சரிக்கை!

போரை முடிவுக்குக் கொண்டுவர ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால் ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் செவ்வாயன்று (22) எச்சரித்தார். ஆனாலும், ஐக்கிய நாடுகள் சபையில்…

98 0 0
உலக செய்திகள்

ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க ஈரான் நிபந்தனை!

அமெரிக்கா தனது இராணுவ நெருக்குவாரங்களைக் குறைத்து, ஈரானிய துறைமுகங்கள் மீதான முற்றுகையை நீக்கினால், அடுத்த ஏழு நாட்களுக்குள் ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறக்க முடியும் என ஈரானின்…

95 0 0
உலக செய்திகள்

உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கிக்கும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பிற்கும் இடையே பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு

உக்ரைனிய ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் தலைமையகத்தில் சந்திக்கவுள்ளதுடன், ரஷ்யாவுடனான தாக்குதல்களை நிறுத்துவதற்கான சமரச முயற்சியை முன்னெடுக்கவுள்ளார்.…

101 0 0
உலக செய்திகள்

அமெரிக்காவை சென்றடைந்தார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

ஐக்கிய நாடுகள் சபையின் 81 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி திங்களன்று (21) நியூயோர்க் சென்றடைந்தார். அமெரிக்கா-ஈரான் இடையிலான…

32 0 0