உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
24 வியாழன்

பேச்சுவார்த்தைகளைத் தொடர ஈரான் தயார்! பெசெஷ்கியன் அறிவிப்பு

உலக செய்திகள் 5 மாதங்கள் முன்
35 பார்வைகள்

அமைதிப் பேச்சுவார்த்தைகளைத் தொடர ஈரான் தயாராக இருப்பதாகவும், தர்க்கரீதியான விவாதங்கள் மற்றும் இராஜதந்திரமே சிக்கல்களைத் தீர்ப்பதற்கான தங்களின் விருப்பமான வழி என்றும் அந்நாட்டின் ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியன் தெரிவித்துள்ளார்.

பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரானுடன் நடத்திய உரையாடலின் போது அவர் அதனை குறிப்பிட்டுள்ளார்.
அச்சுறுத்தல்கள், அழுத்தங்கள் மற்றும் ராணுவ நடவடிக்கைகள் எதற்கும் உதவாது என்று குறிப்பிட்ட அவர், இத்தகைய போக்குகள் அமெரிக்கா தானாகவே உருவாக்கிக்கொண்ட சிக்கல்களை மேலும் மோசமாக்கும் என்றும் எச்சரித்துள்ளார்.
மேலும், சர்வதேச சட்டங்கள் மற்றும் விதிமுறைகளை அமெரிக்கா முறையாகப் பின்பற்றுவதற்கு ஐரோப்பிய நாடுகள் அழுத்தம் கொடுக்க வேண்டும் என்றும் பெசெஷ்கியன் மேக்ரானிடம் வலியுறுத்தியுள்ளார்.
வளைகுடா பிராந்தியத்தில் பதற்றம் அதிகரித்துள்ள சூழலில், அமைதியை நிலைநாட்ட இராஜதந்திர முயற்சிகளுக்கு ஈரான் முன்னுரிமை அளிப்பதையே பெசெஷ்கியனின் இந்த கருத்துக்கள் பிரதிபலிக்கின்றன.
அதே நேரத்தில், தங்களுக்கு எதிரான பொருளாதார மற்றும் ராணுவ அழுத்தங்கள் ஆக்கபூர்வமான தீர்வுக்கு வழிவகுக்காது என்பதையும் அவர் தெளிவுபடுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் : ட்ரம்ப் எச்சரிக்கை!

போரை முடிவுக்குக் கொண்டுவர ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால் ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் செவ்வாயன்று (22) எச்சரித்தார். ஆனாலும், ஐக்கிய நாடுகள் சபையில்…

98 0 0
உலக செய்திகள்

ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க ஈரான் நிபந்தனை!

அமெரிக்கா தனது இராணுவ நெருக்குவாரங்களைக் குறைத்து, ஈரானிய துறைமுகங்கள் மீதான முற்றுகையை நீக்கினால், அடுத்த ஏழு நாட்களுக்குள் ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறக்க முடியும் என ஈரானின்…

95 0 0
உலக செய்திகள்

உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கிக்கும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பிற்கும் இடையே பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு

உக்ரைனிய ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் தலைமையகத்தில் சந்திக்கவுள்ளதுடன், ரஷ்யாவுடனான தாக்குதல்களை நிறுத்துவதற்கான சமரச முயற்சியை முன்னெடுக்கவுள்ளார்.…

101 0 0
உலக செய்திகள்

அமெரிக்காவை சென்றடைந்தார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

ஐக்கிய நாடுகள் சபையின் 81 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி திங்களன்று (21) நியூயோர்க் சென்றடைந்தார். அமெரிக்கா-ஈரான் இடையிலான…

32 0 0