உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
24 வியாழன்

வெளிநாடொன்றில் பாடசாலை மீது துப்பாக்கிச் சூடு! பலர் படுகாயம்

உலக செய்திகள் 5 மாதங்கள் முன்
40 பார்வைகள்

துருக்கியின் தென்கிழக்கு பகுதியில் அமைந்துள்ள பாடசாலை ஒன்றில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 16 பேர் காயமடைந்துள்ளதாக சர்வதேச டகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

குறித்த சம்பவமானது இன்றையதினம் ஏப்ரல் 14 ஆம் திகதி இடம்பெற்றுள்ளது.

துப்பாக்கிச் சூட்டை நடத்தியவர் 18 வயதுடைய அந்தப் பாடசாலையின் பழைய மாணவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இவர் ‘ஷொட்கன்’ ரக துப்பாக்கியைப் பயன்படுத்தி பாடசாலையில் இருந்தவர்கள் மீது சரமாரியாகத் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார்.

அத்துடன், தாக்குதலை நடத்திய பின்னர் பாடசாலைக் கட்டிடத்திற்குள் மறைந்திருந்த அவர், அதே துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டு உயிரிழந்துள்ளார்.
இந்தத் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த 16 பேரில் ஆசிரியர் ஒருவரும் உள்ளடங்குவதோடு, அவரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

மேலும், இந்தத் தாக்குதலுக்கான காரணம் இதுவரையில் கண்டறியப்படவில்லை எனவும் பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் : ட்ரம்ப் எச்சரிக்கை!

போரை முடிவுக்குக் கொண்டுவர ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால் ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் செவ்வாயன்று (22) எச்சரித்தார். ஆனாலும், ஐக்கிய நாடுகள் சபையில்…

98 0 0
உலக செய்திகள்

ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க ஈரான் நிபந்தனை!

அமெரிக்கா தனது இராணுவ நெருக்குவாரங்களைக் குறைத்து, ஈரானிய துறைமுகங்கள் மீதான முற்றுகையை நீக்கினால், அடுத்த ஏழு நாட்களுக்குள் ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறக்க முடியும் என ஈரானின்…

95 0 0
உலக செய்திகள்

உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கிக்கும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பிற்கும் இடையே பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு

உக்ரைனிய ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் தலைமையகத்தில் சந்திக்கவுள்ளதுடன், ரஷ்யாவுடனான தாக்குதல்களை நிறுத்துவதற்கான சமரச முயற்சியை முன்னெடுக்கவுள்ளார்.…

101 0 0
உலக செய்திகள்

அமெரிக்காவை சென்றடைந்தார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

ஐக்கிய நாடுகள் சபையின் 81 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி திங்களன்று (21) நியூயோர்க் சென்றடைந்தார். அமெரிக்கா-ஈரான் இடையிலான…

32 0 0