ஈரானுக்கான உதவி! சீனாவின் எதிர்பாரா அறிவிப்பு – அமெரிக்காவுக்கும் எச்சரிக்கை
ஈரானுக்கு சீனா ராணுவ உதவி வழங்குவதாக வெளியாகும் ஊடகச் செய்திகள் முற்றிலும் பொய்யானவை என்றும், அத்தகைய தவறான தகவல்களின் அடிப்படையில் அமெரிக்கா இறக்குமதி வரி அதிரிப்பை நடைமுறைப்படுத்தினால் அதற்குப் பதில் நடவடிக்கைகளை எடுக்க நேரிடும் என்று சீனா எச்சரித்துள்ளது.
இது குறித்து சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் தனது உத்தியோகபூர்வ எக்ஸ் கணக்கில் பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், சீனா ஈரானுக்கு ராணுவ ஆதரவு அளிப்பதாகக் கூறப்படும் செய்திகள் அடிப்படை ஆதாரமற்றவை என்றும், அவை திட்டமிட்டு உருவாக்கப்பட்டவை என்றும் மறுத்துள்ளார்.
ராணுவத் தளவாடங்கள் மற்றும் பொருட்கள் ஏற்றுமதியில் சீனா எப்போதும் மிகவும் விவேகத்துடனும் பொறுப்புடனும் செயல்பட்டு வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சீன சட்டங்கள், ஒழுங்குமுறைகள் மற்றும் சர்வதேசக் கடமைகளுக்கு உட்பட்டே இத்தகைய ஏற்றுமதிகள் மிகக் கடுமையான கட்டுப்பாடுகளுடன் மேற்கொள்ளப்படுகின்றன என்றும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.
இதன்படி, இந்த ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்னிறுத்தி அமெரிக்கா சீனா மீதான வர்த்தகக் கட்டுப்பாடுகளை அதிகரித்தால், சீனாவின் நலன்களைப் பாதுகாக்கத் தேவையான எதிர் நடவடிக்கைகளைத் தங்களால் எடுக்க முடியும் என்று சீனா தெரிவித்துள்ளது.
இச்சம்பவம் உலகப் பொருளாதார சந்தையில் மீண்டும் ஒரு வர்த்தகப் போர் ஏற்படுமோ என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.