உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
24 வியாழன்

ஈரானின் புதிய இராணுவ திறன்கள்! புரட்சிகர காவல்படை விடுத்த கடும் எச்சரிக்கை

உலக செய்திகள் 5 மாதங்கள் முன்
51 பார்வைகள்

ஈரான் மீதான போர் தொடருமானால், தங்களின் புதிய ராணுவத் திறன்கள் எதிரிகளை நிலைகுலையச் செய்யும் என்று புரட்சிகர காவல்படை (IRGC) எச்சரிக்கை விடுத்துள்ளது.

இது குறித்து திங்கட்கிழமை கருத்து தெரிவித்துள்ள அந்தப் படையின் செய்தித் தொடர்பாளர் ஜெனரல் ஹொசைன் மொஹெபி, ஈரான் தன்னிடம் உள்ள பல மேம்பட்ட ராணுவத் திறன்களை இன்னும் வெளிப்படுத்தவில்லை என குறிப்பிட்டுள்ளார்.

எனவே போர் நீடித்தால் எதிரிகளால் கற்பனை கூட செய்து பார்க்க முடியாத அளவிலான புதிய ஆயுதங்கள் மற்றும் தொழில்நுட்பங்களை ஈரான் வெளிப்படுத்தும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.


எதிரிகள் இதுவரை எதிர்கொள்ளாத புதிய போர் முறைகளை ஈரான் கையாளத் தயாராக இருப்பதாகவும், அத்தகைய நவீன அணுகுமுறைகளை சமாளிக்கும் திறன் எதிரி நாடுகளுக்கு இருக்காது என்றும் அவர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
வளைகுடா பிராந்தியத்தில் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், ஈரானின் இந்த ராணுவ எச்சரிக்கை சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் : ட்ரம்ப் எச்சரிக்கை!

போரை முடிவுக்குக் கொண்டுவர ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால் ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் செவ்வாயன்று (22) எச்சரித்தார். ஆனாலும், ஐக்கிய நாடுகள் சபையில்…

98 0 0
உலக செய்திகள்

ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க ஈரான் நிபந்தனை!

அமெரிக்கா தனது இராணுவ நெருக்குவாரங்களைக் குறைத்து, ஈரானிய துறைமுகங்கள் மீதான முற்றுகையை நீக்கினால், அடுத்த ஏழு நாட்களுக்குள் ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறக்க முடியும் என ஈரானின்…

95 0 0
உலக செய்திகள்

உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கிக்கும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பிற்கும் இடையே பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு

உக்ரைனிய ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் தலைமையகத்தில் சந்திக்கவுள்ளதுடன், ரஷ்யாவுடனான தாக்குதல்களை நிறுத்துவதற்கான சமரச முயற்சியை முன்னெடுக்கவுள்ளார்.…

101 0 0
உலக செய்திகள்

அமெரிக்காவை சென்றடைந்தார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

ஐக்கிய நாடுகள் சபையின் 81 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி திங்களன்று (21) நியூயோர்க் சென்றடைந்தார். அமெரிக்கா-ஈரான் இடையிலான…

32 0 0