உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

டெல்லியில் வாகன மாசினால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!

இந்திய செய்திகள் 5 மாதங்கள் முன்
45 பார்வைகள்

நாடு முழுதும் வாகன பெருக்கத்தால், சுற்றுச்சூழலுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக, தலைநகர் டில்லியில் குளிர்காலங்களில் வாகனங்களால் ஏற்படும் மாசு காரணமாக பொதுமக்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி வருகின்றனர்.

இந்த பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில் டில்லி அரசு, 2026 – 2030 ஆம் ஆண்டுக்கான புதிய மின்சார வாகன கொள்கையை வகுத்து, அதற்கான வரைவு அறிக்கையை பொதுமக்கள் பார்வைக்காக வைத்துள்ளது.
வரும் 2028 ஆம் ஆண்டுக்குள் பெட்ரோல், டீசல் வாகனங்களை படிப்படியாக தடை செய்யும் வகையில் இந்த வரைவு திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.

டில்லி போக்குவரத்து துறை வெளியிட்ட இந்த வரைவு அறிக்கையில், வாகன புகையால் ஏற்படும் மாசை குறைக்க கடுமையான இலக்குகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.

இந்த திட்டத்தின் மூலம், மின் வாகன துறையில் புதிதாக வேலைவாய்ப்புகள் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. பழைய பேட்டரிகளை சுழற்சி முறையில் கையாள, ‘பேட்டரி சேகரிப்பு மையங்கள்’ அமைக்கப்படும். இந்த வரைவு அறிக்கை மீது பொதுமக்கள் அளிக்கும் கருத்துகளுக்கு ஏற்ப இறுதி முடிவு எடுக்கப்படவுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இந்திய செய்திகள்

காமராஜர் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம் : மாணவர்களுடன் சாப்பிட்ட முதல்வர் விஜய்

பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டத்தை முதலமைச்சர் விஜய் இன்று தொடங்கி வைத்தார். காமராஜர் காலை உணவுத் திட்டம்தமிழகத்தில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான காலை உணவுத் திட்டம்…

45 0 0
இந்திய செய்திகள்

மும்பையில் பாலத்தில் இருந்து பாய்ந்த BMW கார் – மூவர் உயி@ரிழப்பு!

மும்பையில் உள்ள ‘கோஸ்டல் வீதி’ (Coastal Road) பாலத்திலிருந்து அதிநவீன பிஎம்டபிள்யூ (BMW) கார் ஒன்று கீழே பாய்ந்து விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்த மூவர் உயிரிழந்தனர். மற்றொருவர்…

44 0 0
இந்திய செய்திகள்

முதல்வர் விஜய்யின் லண்டன் பயணத்தை கடுமையாக விமர்சித்த அண்ணாமலை!

தமிழக பாஜகவின் முன்னாள் தலைவர் கே. அண்ணாமலை, முதலமைச்சர் ஜோசப் விஜய் அண்மையில் மேற்கொண்ட லண்டன் பயணத்தைக் கடுமையாக விமர்சித்துள்ளார். தமிழகத்திற்கான முதலீடுகளை ஈர்க்க இங்கிலாந்து சரியான…

30 0 0
இந்திய செய்திகள்

“கேள்வி கேட்டால் பாட்டுப் பாடுகிறார்கள் – முதலமைச்சர் பஞ்ச் டயலொக் பேசுகிறார்” : உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்!

தமிழ்நாடு சட்டமன்றத்தில் எதிர்க்கட்சியினர் கேள்வி எழுப்பும்போது, ஆளுங்கட்சியினர் அதற்கு பதிலளிக்காமல் பாடல்களைப் பாடுவதாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் விமர்சித்துள்ளார். திருமண விழா ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய…

47 0 0