உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
24 வியாழன்

லண்டனில் இடம்பெற்ற விபத்து சம்பவம்-விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ள 11 பொலிஸ் அதிகாரிகள்..!

உலக செய்திகள் 5 மாதங்கள் முன்
36 பார்வைகள்

லண்டனில் இடம்பெற்ற விபத்து சம்பவம் தொடர்பாக 11 பொலிஸ் அதிகாரிகள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

Metropolitan Police , சார்ந்த 11 அதிகாரிகள் 2023ஆம் ஆண்டு Wimbledon பகுதியில் நடந்த விபத்து விசாரணையை முறையாக மேற்கொள்ளவில்லை என்ற குற்றச்சாட்டில் தற்போது விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். இந்த விசாரணையை காவல்துறை நடத்தைக்கான சுதந்திரமான அலுவலகம் ( Independent Office for Police Conduct (IOPC)) மேற்கொண்டு வருகிறது.

இதனிடையே , இந்த விபத்தில் 8 வயதான இரு மாணவிகள், நூரியா சஜ்ஜாத் நூரியா சஜ்ஜாத் (Nuria Sajjad Nuria Sajjad) மற்றும் செலினா லாவ் (Selena Lau) உயிரிழந்தனர். 2023 ஜூலை மாதம், பள்ளி நிகழ்ச்சியின் போது ஒரு லாண்ட் ரோவர் கார் பள்ளி வளாகத்திற்குள் நுழைந்ததாலே இந்த துயர சம்பவம் ஏற்பட்டது.

அந்த வாகனத்தை ஓட்டிய கிளேர் ஃப்ரீமண்டில்(Claire Freemantle) மீது வழக்கு பதிவு செய்யப்படவில்லை. இருப்பினும் , உயிரிழந்த குழந்தைகளின் குடும்பத்தினர் இந்த விசாரணையில் பல குறைகள் உள்ளதாக தொடர்ந்து குற்றம் சாட்டி வந்தனர். இதனைத் தொடர்ந்து IOPC விசாரணை தற்போ து ஆரம்பிக்கப்பட்டுள்ளது

குடும்பத்தினர் வெளியிட்ட அறிக்கையில், ‘இந்த விசாரணை தொடங்கப்பட்டிருப்பது எங்களுக்கு நம்பிக்கையை அளிக்கிறது. அந்த நாளில் என்ன நடந்தது மற்றும் அதன் பின்னர் பொலிசார் எடுத்த நடவடிக்கைகள் குறித்து முழு உண்மை வெளிவர வேண்டும்’ என்று தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணை தற்போது நடைபெற்று வருகிறமை குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் : ட்ரம்ப் எச்சரிக்கை!

போரை முடிவுக்குக் கொண்டுவர ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால் ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் செவ்வாயன்று (22) எச்சரித்தார். ஆனாலும், ஐக்கிய நாடுகள் சபையில்…

99 0 0
உலக செய்திகள்

ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க ஈரான் நிபந்தனை!

அமெரிக்கா தனது இராணுவ நெருக்குவாரங்களைக் குறைத்து, ஈரானிய துறைமுகங்கள் மீதான முற்றுகையை நீக்கினால், அடுத்த ஏழு நாட்களுக்குள் ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறக்க முடியும் என ஈரானின்…

96 0 0
உலக செய்திகள்

உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கிக்கும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பிற்கும் இடையே பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு

உக்ரைனிய ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் தலைமையகத்தில் சந்திக்கவுள்ளதுடன், ரஷ்யாவுடனான தாக்குதல்களை நிறுத்துவதற்கான சமரச முயற்சியை முன்னெடுக்கவுள்ளார்.…

102 0 0
உலக செய்திகள்

அமெரிக்காவை சென்றடைந்தார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

ஐக்கிய நாடுகள் சபையின் 81 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி திங்களன்று (21) நியூயோர்க் சென்றடைந்தார். அமெரிக்கா-ஈரான் இடையிலான…

33 0 0