உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
24 வியாழன்

பசி கொடுமையின் உச்சம் சூடானில் இலை தழைகளை தின்று உயிர் வாழும் மக்கள்.

உலக செய்திகள் 5 மாதங்கள் முன்
36 பார்வைகள்

சூடான் ராணுவத்துக்கும். துணை ராணுவப்படைக்கும் இடையே கடந்த 3 ஆண்டுகளாக நடை பெற்று வரும் போர், உலகிலேயே மிகப்பெரிய மனிதாபிமான நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக நார்த் டார்பர் மற்றும் தெற்கு கோர்டோபன் பகுதிகளில் நிலைமை படுமோசமாக உள்ளது.


அங்குள்ள மக்கள் பசியைத் தாங்க முடியாமல் மரங்களின் இலை தழைகளையும், கால்நடை தீவனங்களையும் தின்று உயிர் பிழைக்கும் அவல நிலையில் உள்ளனர்.


கிட்டத்தட்ட 2.89 கோடி மக்கள் கடும் உணவுப் பஞ்சத்தில் சிக்கியுள்ளனர். போர்க்களத்தில் விவசாய நிலங்கள் அழிக்கப்பட்டும், உணவுச் சந்தைகள் முடக்கப்பட்டும் உள்ளதால் இந்த நெருக்கடி ஏற்பட்டுள்ளது. குறிப்பாக பெண்கள் மற்றும் சிறுமிகள் உணவு தேடி வெளியே செல்லும்போது பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகும் அபாயமும் உள்ளது.
சர்வதேச உதவி நிறுவனங்களுக்கு நிதி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், அங்குள்ள சமூக சமையல் கூடங்களும் மூடப்படும் நிலையில் உள்ளன.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் : ட்ரம்ப் எச்சரிக்கை!

போரை முடிவுக்குக் கொண்டுவர ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால் ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் செவ்வாயன்று (22) எச்சரித்தார். ஆனாலும், ஐக்கிய நாடுகள் சபையில்…

99 0 0
உலக செய்திகள்

ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க ஈரான் நிபந்தனை!

அமெரிக்கா தனது இராணுவ நெருக்குவாரங்களைக் குறைத்து, ஈரானிய துறைமுகங்கள் மீதான முற்றுகையை நீக்கினால், அடுத்த ஏழு நாட்களுக்குள் ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறக்க முடியும் என ஈரானின்…

96 0 0
உலக செய்திகள்

உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கிக்கும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பிற்கும் இடையே பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு

உக்ரைனிய ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் தலைமையகத்தில் சந்திக்கவுள்ளதுடன், ரஷ்யாவுடனான தாக்குதல்களை நிறுத்துவதற்கான சமரச முயற்சியை முன்னெடுக்கவுள்ளார்.…

102 0 0
உலக செய்திகள்

அமெரிக்காவை சென்றடைந்தார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

ஐக்கிய நாடுகள் சபையின் 81 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி திங்களன்று (21) நியூயோர்க் சென்றடைந்தார். அமெரிக்கா-ஈரான் இடையிலான…

33 0 0