உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
24 வியாழன்

பிரித்தானிய நாடாளுமன்ற அனுமதியின்றி ஐரோப்பிய ஒன்றிய விதிகளை அமுல்படுத்தத் திட்டம்

உலக செய்திகள் 5 மாதங்கள் முன்
75 பார்வைகள்

ஐரோப்பிய ஒன்றியத்தின் (EU) ஒற்றைச் சந்தை விதிகளை, முறையான நாடாளுமன்ற வாக்கெடுப்பு இல்லாமலேயே பிரித்தானிய அரசாங்கம் ஏற்றுக்கொள்வதற்கு ஏதுவாக புதிய சட்டம் ஒன்றை பிரதமர் சேர் கீர் ஸ்டார்மர் தலைமையிலான அரசாங்கம் திட்டமிட்டுள்ளது

உணவுத் தரம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ஐரோப்பிய ஒன்றியத்தின் புதிய விதிமுறைகளுடன் பிரித்தானியாவை ஒருங்கிணைப்பதே இந்த மசோதாவின் முக்கிய நோக்கமாகும்.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள தொழிலாளர் கட்சி (Labour) வட்டாரங்கள், ‘இந்த நடவடிக்கையானது வணிகங்களுக்கான செலவைக் குறைக்கும். குறிப்பாக, பிரெக்ஸிட் (Brexit) நடைமுறைகளால் உருவான கூடுதல் வரிச்சுமை மற்றும் ஆவணப் பணிகளைக் குறைப்பதன் மூலம்இ மக்களின் வாராந்தர மளிகைப் பொருட்களின் விலை குறைய வாய்ப்புள்ளது’ எனத் தெரிவித்துள்ளன.

இதனிடையே , தற்போது பிரித்தானியாவும் ஐரோப்பிய ஒன்றியமும் உணவுப் பாதுகாப்பு மற்றும் விலங்கு, தாவர ஆரோக்கியம் தொடர்பான ஒப்பந்தங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன.

இந்த ஒப்பந்தங்கள் கையெழுத்தான பிறகு, ‘டைனமிக் அலைன்மென்ட்’ (Dynamic Alignment)எனப்படும் புதிய அதிகாரம் அரசாங்கத்திற்கு வழங்கப்படும். இதன் மூலம, பிரஸ்ஸல்ஸில் (ஐரோப்பிய ஒன்றியம்) ஒரு புதிய விதி அங்கீகரிக்கப்படும் போதெல்லாம், பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்களின் விரிவான ஆய்வோ அல்லது வாக்கெடுப்போ இன்றி அதனை நேரடியாக அமுல்படுத்த முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

இந்தத் திட்டத்திற்கு கன்சர்வேடிவ் (Conservatives) மற்றும் ரிஃபார்ம் யூகே (Reform UK) ஆகிய கட்சிகள் கடும் எதிர்ப்பைத் தெரிவித்துள்ளன. இது நாட்டின் இறையாண்மையைப் பாதிக்கும் என்றும், பிரெக்ஸிட் முடிவுகளுக்கு எதிரானது என்றும் அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். நாடாளுமன்றத்தின் அதிகாரத்தைக் குறைத்து, ஐரோப்பிய ஒன்றியத்தின் விதிகளைப் பின்பற்றுவது ஜனநாயகத்திற்கு விரோதமானது என அவர்கள் வாதிடுகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் : ட்ரம்ப் எச்சரிக்கை!

போரை முடிவுக்குக் கொண்டுவர ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால் ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் செவ்வாயன்று (22) எச்சரித்தார். ஆனாலும், ஐக்கிய நாடுகள் சபையில்…

98 0 0
உலக செய்திகள்

ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க ஈரான் நிபந்தனை!

அமெரிக்கா தனது இராணுவ நெருக்குவாரங்களைக் குறைத்து, ஈரானிய துறைமுகங்கள் மீதான முற்றுகையை நீக்கினால், அடுத்த ஏழு நாட்களுக்குள் ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறக்க முடியும் என ஈரானின்…

95 0 0
உலக செய்திகள்

உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கிக்கும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பிற்கும் இடையே பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு

உக்ரைனிய ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் தலைமையகத்தில் சந்திக்கவுள்ளதுடன், ரஷ்யாவுடனான தாக்குதல்களை நிறுத்துவதற்கான சமரச முயற்சியை முன்னெடுக்கவுள்ளார்.…

101 0 0
உலக செய்திகள்

அமெரிக்காவை சென்றடைந்தார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

ஐக்கிய நாடுகள் சபையின் 81 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி திங்களன்று (21) நியூயோர்க் சென்றடைந்தார். அமெரிக்கா-ஈரான் இடையிலான…

32 0 0