உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
24 வியாழன்

ஹோர்முஸ் நீரிணையில் வீசப்பட்ட கண்ணிவெடிகள்: அவசர அவசரமாக செயற்பட்டதால் சிக்கல் – திணரும் இராணுவம்..!

உலக செய்திகள் 5 மாதங்கள் முன்
61 பார்வைகள்

ஹோர்முஸ் நீரிணை கடல் பகுதியில் வீசப்பட்ட கண்ணிவெடிகளை கண்டறிய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால் சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு எதிரான போருக்கு மத்தியில் ஹோர்முஸ் நீரிணையை ஈரான் மூடியது. அனுமதியின்றி ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க முயன்ற சில வெளிநாடுகளின் கப்பல்கள் மீது ஈரானின் படைகள் தாக்குதல் நடத்தின.


மேலும் அவ்வழியாக கப்பல்கள் செல்வதைத் தடுக்க சிறிய படகுகள் மூலம் ஈரானின் புரட்சிகர காவல் படையினர் கண்ணிவெடிகளை பொருத்தினர்.

இவ்வாறான சூழலில் போரை உடன் முடிவுக்குக் கொண்டு வர வேண்டுமென அழுத்தம் அதிகரித்ததைத் தொடர்ந்து 2 வாரங்களுக்கு அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே போர்நிறுத்தம் நடைமுறைக்கு வந்தது.

இந்த நிலையில், ஹோர்முஸ் நீரிணையில் ஈரான் பொருத்திய கண்ணிவெடிகளை கண்டறிய அந்நாட்டு படைகளால் முடியவில்லை எனவும், அவை கடலின் நீரோட்டத்தில் அடித்துச் செல்லப்பட்டிருக்கக் கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹோர்முஸ் நீரிணை கடல்பகுதியில், கண்ணிவெடிகள் எங்கெல்லாம் இருக்கின்றன என்பதை கண்டுபிடிக்க முடியாததால் நீரிணையை முழுமையாக திறப்பதில் சிக்கல் நீடிக்கிறது.

கடலுக்கு மேலே மிதந்த கண்ணிவெடிகளை ஈரான் இராணுவம் அகற்றியது. கடலுக்கு சில நூறு அடி ஆழத்தில் எங்கெல்லாம் கண்ணிவெடிகள் வீசப்பட்டன என்பது குறித்து தெளிவான விவரங்கள் இல்லாததால் சிரமம் ஏற்பட்டுள்ளது.
ட்டமிடப்பட்ட இராணுவ வரை படத்தின்படி நடக்காமல், அவசர அவசரமாகச் செய்யப்பட்டதால், எந்தெந்த இடங்களில் கண்ணிவெடிகள் வைக்கப்பட்டுள்ளன என்பதற்கான துல்லியமான தரவுகள் ஈரானிடம் இல்லாமல் போய்விட்டது. இதன் காரணமாக சிக்கல் நிலை நீடிப்பதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் : ட்ரம்ப் எச்சரிக்கை!

போரை முடிவுக்குக் கொண்டுவர ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால் ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் செவ்வாயன்று (22) எச்சரித்தார். ஆனாலும், ஐக்கிய நாடுகள் சபையில்…

98 0 0
உலக செய்திகள்

ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க ஈரான் நிபந்தனை!

அமெரிக்கா தனது இராணுவ நெருக்குவாரங்களைக் குறைத்து, ஈரானிய துறைமுகங்கள் மீதான முற்றுகையை நீக்கினால், அடுத்த ஏழு நாட்களுக்குள் ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறக்க முடியும் என ஈரானின்…

95 0 0
உலக செய்திகள்

உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கிக்கும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பிற்கும் இடையே பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு

உக்ரைனிய ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் தலைமையகத்தில் சந்திக்கவுள்ளதுடன், ரஷ்யாவுடனான தாக்குதல்களை நிறுத்துவதற்கான சமரச முயற்சியை முன்னெடுக்கவுள்ளார்.…

101 0 0
உலக செய்திகள்

அமெரிக்காவை சென்றடைந்தார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

ஐக்கிய நாடுகள் சபையின் 81 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி திங்களன்று (21) நியூயோர்க் சென்றடைந்தார். அமெரிக்கா-ஈரான் இடையிலான…

32 0 0