உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
22 ஞாயிறு
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

இலங்கை – இந்தியா பயணிகள் படகு சேவை – ரஜீவன் எம்.பி. விடுத்த கோரிக்கை

இலங்கை செய்திகள் 8 மாதங்கள் முன்
59 பார்வைகள்

தலைமன்னார் – இராமேஸ்வரம் இடையிலான படகுச் சேவையை மீண்டும் ஆரம்பிக்கக் கோரும் விசேட பிரேரணை ஒன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

இலங்கை மற்றும் இந்தியாவுக்கு இடையிலான தொப்புள்கொடி உறவையும், வரலாற்று ரீதியான தொடர்புகளையும் புதுப்பிக்கும் நோக்கில் இந்தப் பிரேரணை முன்வைக்கப்பட்டுள்ளது.

தேசிய மக்கள் சக்தியின் யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஜெ.ரஜீவன் இதனைச் சமர்ப்பித்துள்ளார்.

குறித்த பிரேரணையில், சுற்றுலாத்துறையும் வருமானமும் இந்திய மற்றும் இலங்கைக்கிடையிலான இந்தப் படகுச் சேவையை மீள ஆரம்பிப்பதன் மூலம் இந்திய சுற்றுலாப் பயணிகளின் வருகையை அதிகப்படுத்த முடியும்.
இதன் ஊடாக நாட்டின் அந்நியச் செலாவணி வருவாயை ஈட்டுவதற்குப் பெரும் வாய்ப்புகள் ஏற்படும். பொதுமக்கள் குறைந்த செலவில் தமிழ்நாட்டிற்குப் பயணம் செய்யவும், அத்தியாவசியப் பொருட்களை நியாயமான விலையில் பெற்றுக்கொள்ளவும் இந்தப் போக்குவரத்து வழிவகை செய்யும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

குறிப்பாக, வடக்கு மக்களின் நீண்டகால எதிர்பார்ப்பாக இது காணப்படுகின்றது. இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகத் தொடர்புகள் வலுப்படுவதன் மூலம், உள்ளூர் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த முடியும்.
எனவே, இப்பிராந்தியத்தின் பொருளாதார மற்றும் சமூக முன்னேற்றத்தைக் கருத்திற்கொண்டு, மத்திய அரசு இவ்விடயத்தில் உடனடியாகத் தலையிட்டு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று குறித்த பிரேரணையில் வலியுறுத்தப்பட்டுள்ளது

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

கோட்டாவின் வழியில் அநுர அரசாங்கம்! : அம்பாறையில் சஜித் கடும் சாடல்

கோட்டாபய ராஜபக்ஷவைப் போலவே அநுரகுமார திஸாநாயக்க அரசும் விவசாயிகளை ஏமாற்றியுள்ளது என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார். அம்பாறை மாவட்டத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற விவசாயிகள்…

115 0 0
இலங்கை செய்திகள்

தொல். திருமாவளவனுக்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் பிரதிநிதிகளால் நூல்கள் வழங்கி வைப்பு!

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் இந்திய நாடாளுமன்ற உறுப்பினருமான தொல். திருமாவளவன் அவர்களுக்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் பிரதிநிதிகளால் நூல்கள் அடங்கிய தொகுதி ஒன்று வழங்கி வைக்கப்பட்டது.…

128 0 0
இலங்கை செய்திகள்

திறைசேரி நிரம்பி வழிந்தாலும் மக்கள் கையில் பணம் இல்லை : சஜித் விசனம்!

“திறைசேரி நிரம்பினாலும் மக்கள் கையில் பணம் நிரம்பவில்லை. மக்களிடம் பணப்புழக்கம் இல்லாமை பாரிய பிரச்சினையாகக் காணப்படுகின்றது” என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார். கொழும்பு பண்டாரநாயக்க…

132 0 0
இலங்கை செய்திகள்

இந்தியா – இலங்கை நட்புறவு மற்றும் பரஸ்பர புரிந்துணர்வை வலுப்படுத்தும் நோக்கில் ‘மைத்திரி சேது யாத்திரை 2027’

இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையிலான நீண்டகால நட்புறவு, பரஸ்பர புரிந்துணர்வு மற்றும் ஒத்துழைப்பை இளைய தலைமுறையினூடாக மேலும் வலுப்படுத்தும் நோக்கில் முன்னெடுக்கப்பட்ட இந்தியா – இலங்கை தேசிய…

135 0 0