உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
24 வியாழன்

பிரித்தானியாவில் நாய் கடித்ததில் சிறுவன் உயிரிழப்பு – ஒரு நாய் பொலிஸாரால் சுட்டுக்கொலை!

உலக செய்திகள் 6 மாதங்கள் முன்
29 பார்வைகள்

பிரித்தானியாவின் ரெட்கார் (Redcar) பகுதியில் நாய் கடித்ததில் சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளார்.

கிளீவ்லேண்ட் (Cleveland) பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டோர்மன்ஸ்டவுன் (Dormanstown) பகுதியில் உள்ள ஹார்டேல் குரோவ் (Hardale Grove) எனும் இடத்தில், ஏப்ரல் 09 ஆம் திகதி நேற்று பிற்பகல் 1:30 மணியளவில் சிறுவன் ஒருவன் நாய் கடிக்கு உள்ளாகியுள்ளாகியுள்ளார்.

குறித்த சம்பவம் குறித்து அறிந்த ஆயுதம் ஏந்திய பொலிஸார் மற்றும் அவசரச் சேவைப் பிரிவினர் சம்பவ இடத்திற்கு விரைந்தபோது, குறித்த சிறுவன் ஏற்கனவே உயிரிழந்திருந்தமை உறுதி செய்யப்பட்டது.

இந்தத் தாக்குதலுடன் தொடர்புடைய ஒரு நாய் தெருவிலேயே அதிகாரிகளால் சுட்டுக்கொல்லப்பட்டது.

அத்துடன் வீட்டிலிருந்த மற்றொரு நாய் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

இந்தத் தாக்குதலில் காயமடைந்த மற்றுமொரு நபர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் நடந்த இடத்தில் பொலிஸார் குவிக்கப்பட்டு மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இது தொடர்பான தகவல்கள் தெரிந்தவர்கள் பொலிஸாருக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு கோரப்பட்டுள்ளனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் : ட்ரம்ப் எச்சரிக்கை!

போரை முடிவுக்குக் கொண்டுவர ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால் ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் செவ்வாயன்று (22) எச்சரித்தார். ஆனாலும், ஐக்கிய நாடுகள் சபையில்…

98 0 0
உலக செய்திகள்

ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க ஈரான் நிபந்தனை!

அமெரிக்கா தனது இராணுவ நெருக்குவாரங்களைக் குறைத்து, ஈரானிய துறைமுகங்கள் மீதான முற்றுகையை நீக்கினால், அடுத்த ஏழு நாட்களுக்குள் ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறக்க முடியும் என ஈரானின்…

95 0 0
உலக செய்திகள்

உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கிக்கும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பிற்கும் இடையே பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு

உக்ரைனிய ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் தலைமையகத்தில் சந்திக்கவுள்ளதுடன், ரஷ்யாவுடனான தாக்குதல்களை நிறுத்துவதற்கான சமரச முயற்சியை முன்னெடுக்கவுள்ளார்.…

101 0 0
உலக செய்திகள்

அமெரிக்காவை சென்றடைந்தார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

ஐக்கிய நாடுகள் சபையின் 81 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி திங்களன்று (21) நியூயோர்க் சென்றடைந்தார். அமெரிக்கா-ஈரான் இடையிலான…

32 0 0