உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
24 வியாழன்

ஆசிய மற்றும் ஐரோப்பிய பங்குச் சந்தைகளில் திடீர் சரிவு..!

உலக செய்திகள் 6 மாதங்கள் முன்
27 பார்வைகள்

ஆசிய மற்றும் ஐரோப்பிய பங்குச்சந்தைகளில் இன்று ஏப்ரல் 09 ஆம் திகதி வீழ்ச்சி பதிவாகியுள்ளது.

ஏப்ரல் 08 ஆம் திகதி நேற்றயத்தினம் காணப்பட்ட பாரிய விலை அதிகரிப்பைத் தொடர்ந்து, இன்று சந்தையில் இந்த மந்தநிலை ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

அதன்படி, ஜப்பானின் நிக்கி சுட்டெண் 0.7% வீழ்ச்சியடைந்ததுடன், தென்கொரியாவின் கோஸ்பி (Kospi) சுட்டெண் 1.6% சரிவைச் சந்தித்தது.
பிரித்தானியாவின் FTSE 100 சுட்டெண் வர்த்தக ஆரம்பத்தில் 0.1% வீழ்ச்சியடைந்தது. மேலும், ஜெர்மனி மற்றும் பிரான்ஸ் சந்தைகளிலும் இதேபோன்ற சரிவு நிலை காணப்பட்டது.
மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் சுமார் 900 புள்ளிகள் வரை சரிவைச் சந்தித்துள்ளதுடன், நிஃப்டி சுட்டெண்ணும் வீழ்ச்சியடைந்துள்ளது.

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர்நிறுத்த உடன்படிக்கை தொடர்பான நிச்சயமற்ற தன்மையே இந்த வீழ்ச்சிக்கு முக்கிய காரணமாகக் கூறப்படுகிறது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் : ட்ரம்ப் எச்சரிக்கை!

போரை முடிவுக்குக் கொண்டுவர ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால் ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் செவ்வாயன்று (22) எச்சரித்தார். ஆனாலும், ஐக்கிய நாடுகள் சபையில்…

98 0 0
உலக செய்திகள்

ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க ஈரான் நிபந்தனை!

அமெரிக்கா தனது இராணுவ நெருக்குவாரங்களைக் குறைத்து, ஈரானிய துறைமுகங்கள் மீதான முற்றுகையை நீக்கினால், அடுத்த ஏழு நாட்களுக்குள் ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறக்க முடியும் என ஈரானின்…

95 0 0
உலக செய்திகள்

உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கிக்கும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பிற்கும் இடையே பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு

உக்ரைனிய ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் தலைமையகத்தில் சந்திக்கவுள்ளதுடன், ரஷ்யாவுடனான தாக்குதல்களை நிறுத்துவதற்கான சமரச முயற்சியை முன்னெடுக்கவுள்ளார்.…

101 0 0
உலக செய்திகள்

அமெரிக்காவை சென்றடைந்தார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

ஐக்கிய நாடுகள் சபையின் 81 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி திங்களன்று (21) நியூயோர்க் சென்றடைந்தார். அமெரிக்கா-ஈரான் இடையிலான…

32 0 0