உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
24 வியாழன்

ஈரானைச் சுற்றி அமெரிக்க இராணுவம் நிலைத்திருக்கும் – ட்ரம்ப் எச்சரிக்கை!

உலக செய்திகள் 6 மாதங்கள் முன்
26 பார்வைகள்

தனது இராணுவக் கப்பல்களும் விமானங்களும் ஈரானைச் சுற்றி நிலைத்திருக்கும் என்றும், வொஷிங்டனுடன் எட்டப்பட்ட ஒப்பந்தத்தை தெஹ்ரான் முழுமையாகக் கடைப்பிடிக்காவிட்டால் அமெரிக்கா மீண்டும் தாக்குதலைத் தொடங்கும் என்றும் அமெரிக்க ஜனாதிபதி டெனால்ட் ட்ரமப் புதன்கிழமை ஏப்ரல் 08 ஆம் திகதி எச்சரித்தார்.

எட்டப்பட்ட உண்மையான ஒப்பந்தம் முழுமையாகக் கடைப்பிடிக்கப்படும் வரை, அனைத்து அமெரிக்கக் கப்பல்கள், விமானங்கள், இராணுவ வீரர்கள், மேலதிக வெடிமருந்துகள் மற்றும் ஆயுதங்கள் ஈரானிலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் நிலைத்திருக்கும் என்றும் ட்ரம்ப் தனது சமூக ஊடகப் பதிவில் குறிப்பிட்டார்.

இஸ்ரேல் நேற்றைய தினம் லெபனான் மீது இதுவரை இல்லாத மிகக் கடுமையான தாக்குதல்களை நடத்தி, நூற்றுக்கணக்கான மக்களைக் கொன்றதைத் தொடர்ந்து, அமெரிக்காவுடன் ஒரு நிரந்தர அமைதி ஒப்பந்தத்தை உருவாக்குவதற்கான பேச்சுவார்த்தைகளைத் தொடர்வது “நியாயமற்றது” என்று ஈரான் முன்னதாக புதன்கிழமை கூறியிருந்தது.

ஈரானின் அணுசக்தித் திட்டம் குறித்து இரு தரப்பினரும் பெரும் கருத்து வேறுபாட்டில் இருப்பதாகத் தோன்றியது.

யுரேனியம் செறிவூட்டுவதை நிறுத்த ஈரான் ஒப்புக்கொண்டதாக ட்ரம்ப் கூறினார், ஆனால் போர்நிறுத்த ஒப்பந்தத்தின்படி யுரேனியம் செறிவூட்டுவதைத் தொடர ஈரானுக்கு அனுமதி உண்டு என்று ஈரானின் நாடாளுமன்ற சபாநாயகர் மொஹமட் பாகர் காலிபாஃப் கூறியுள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் : ட்ரம்ப் எச்சரிக்கை!

போரை முடிவுக்குக் கொண்டுவர ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால் ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் செவ்வாயன்று (22) எச்சரித்தார். ஆனாலும், ஐக்கிய நாடுகள் சபையில்…

98 0 0
உலக செய்திகள்

ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க ஈரான் நிபந்தனை!

அமெரிக்கா தனது இராணுவ நெருக்குவாரங்களைக் குறைத்து, ஈரானிய துறைமுகங்கள் மீதான முற்றுகையை நீக்கினால், அடுத்த ஏழு நாட்களுக்குள் ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறக்க முடியும் என ஈரானின்…

94 0 0
உலக செய்திகள்

உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கிக்கும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பிற்கும் இடையே பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு

உக்ரைனிய ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் தலைமையகத்தில் சந்திக்கவுள்ளதுடன், ரஷ்யாவுடனான தாக்குதல்களை நிறுத்துவதற்கான சமரச முயற்சியை முன்னெடுக்கவுள்ளார்.…

101 0 0
உலக செய்திகள்

அமெரிக்காவை சென்றடைந்தார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

ஐக்கிய நாடுகள் சபையின் 81 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி திங்களன்று (21) நியூயோர்க் சென்றடைந்தார். அமெரிக்கா-ஈரான் இடையிலான…

32 0 0