உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
24 வியாழன்

லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்; ஹார்முஸ் நீரிணையை மீண்டும் மூடிய ஈரான்!

உலக செய்திகள் 6 மாதங்கள் முன்
28 பார்வைகள்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், தெஹ்ரானுடன் இரண்டு வார கால போர் நிறுத்தத்தை அறிவித்த 24 மணி நேரத்திற்குள் உலகின் மிக முக்கியமான கடல்வழி எண்ணெய் போக்குவரத்துத் தடையான ஹார்முஸ் நீரிணையை ஈரான் மீண்டும் புதன்கிழமை நேற்று ஏப்ரல் 08 ஆம் திகதி மூடியதாக அந்நாட்டு அரசுக்குச் சொந்தமான ஃபார்ஸ் (Fars ) செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா இலக்குகள் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் 250-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததைச் சுட்டிக்காட்டி, போர் நிறுத்தத்தை மீறியதற்காக ஹார்முஸ் நீரிணையில் எண்ணெய் கப்பல் போக்குவரத்து முற்றிலுமாக நிறுத்தப்படும் என்று ஈரான் கூறியுள்ளது.

அதேநேரம், நீரிணையை உடனடியாகத் திறக்குமாறு ஈரானிடம் வெள்ளை மாளிகை வலியுறுத்தியுள்ளது.

ஹார்முஸ் நீரிணை மூடப்படுவதற்கு முன்பு, இரண்டு கப்பல்கள் அவ்வழியாகச் செல்ல அனுமதிக்கப்பட்டன; பின்னர் ஈரான் தனது முடிவை மாற்றிக்கொண்டது.

லெபனான் போர் நிறுத்த ஒப்பந்தத்தில் அங்கம் வகிக்கவில்லை என்று இஸ்ரேல் கூறுகின்றது.

ஆனால், இந்தக் கூற்றை ஈரான் மறுத்துள்ளது.

போர் நிறுத்தத்தின் ஒரு பகுதியாக, ஹிஸ்புல்லா மற்றும் ஈரான் ஆதரவு பெற்ற பிற போராளிக் குழுக்களை இஸ்ரேல் குறிவைப்பது உட்பட, பகைமை நடவடிக்கைகளை முழுமையாக நிறுத்த வேண்டும் என்று தெஹ்ரான் அழைப்பு விடுத்துள்ளது.

லெபனானுக்கு எதிரான கொடூரமான சியோனிச ஆக்கிரமிப்பு காரணமாக ஹார்முஸ் நீரிணையை மூட வேண்டும் என்றும், இந்த போர் நிறுத்தம் அனைவருக்கும் பொருந்த வேண்டும் என்றும் ஈரானின் உயர்மட்ட அதிகாரி ஒருவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

முன்னதாக, இரண்டு வார கால போர் நிறுத்தம் காரணமாக ஈரான் ஹார்முஸ் நீரிணையை மீண்டும் திறக்க வேண்டும் என்று ட்ரம்ப் கூறியிருந்தார்.

அந்த முக்கிய நீர்வழிப்பாதையின் மீது ஈரான் தொடர்ந்து கட்டுப்பாட்டைக் கொண்டிருப்பதை வொஷிங்டன் கொள்கையளவில் ஏற்றுக்கொண்டுள்ளதாக ஈரானின் உச்ச தேசிய பாதுகாப்பு மன்றம் தெரிவித்தது.

ஏப்ரல் 11 ஆம் திகதி அன்று இஸ்லாமாபாத்தில் நடைபெறவுள்ள அமைதிப் பேச்சுவார்த்தைகளுக்கு முன்னதாக, வியாழன் அல்லது வெள்ளிக்கிழமைக்குள் தெஹ்ரான் தனது முற்றுகையைத் தளர்த்தும் என்று எதிர்பார்க்கப்படுவதாக ஒரு மூத்த ஈரானிய அதிகாரி குறிப்பிட்டார்.

எனினும், கப்பல்கள் அந்த நீரிணையைக் கடந்து செல்ல ஈரானின் அனுமதி தேவைப்படும்.

ஈரான் மற்றும் ஓமன்/ஐக்கிய அரபு அமீரகத்திற்கு இடையேயான ஒரு குறுகிய கப்பல் போக்குவரத்து வழித்தடமான ஹார்முஸ் ஜலசந்தி, பாரசீக வளைகுடாவை அரபிக்கடலுடன் இணைக்கிறது.

மேலும், இது உலகின் தினசரி எண்ணெய் மற்றும் திரவ இயற்கை எரிவாயு (LNG) விநியோகத்தில் கிட்டத்தட்ட ஐந்தில் ஒரு பங்கைக் கொண்டு செல்கிறது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் : ட்ரம்ப் எச்சரிக்கை!

போரை முடிவுக்குக் கொண்டுவர ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால் ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் செவ்வாயன்று (22) எச்சரித்தார். ஆனாலும், ஐக்கிய நாடுகள் சபையில்…

98 0 0
உலக செய்திகள்

ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க ஈரான் நிபந்தனை!

அமெரிக்கா தனது இராணுவ நெருக்குவாரங்களைக் குறைத்து, ஈரானிய துறைமுகங்கள் மீதான முற்றுகையை நீக்கினால், அடுத்த ஏழு நாட்களுக்குள் ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறக்க முடியும் என ஈரானின்…

94 0 0
உலக செய்திகள்

உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கிக்கும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பிற்கும் இடையே பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு

உக்ரைனிய ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் தலைமையகத்தில் சந்திக்கவுள்ளதுடன், ரஷ்யாவுடனான தாக்குதல்களை நிறுத்துவதற்கான சமரச முயற்சியை முன்னெடுக்கவுள்ளார்.…

101 0 0
உலக செய்திகள்

அமெரிக்காவை சென்றடைந்தார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

ஐக்கிய நாடுகள் சபையின் 81 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி திங்களன்று (21) நியூயோர்க் சென்றடைந்தார். அமெரிக்கா-ஈரான் இடையிலான…

32 0 0