உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
24 வியாழன்

இங்கிலாந்தை வந்தடைந்தார் காசா மீதான இஸ்ரேலிய தாக்குதலில் கையை இழந்த பாலஸ்தீனிய சிறுமி!

உலக செய்திகள் 6 மாதங்கள் முன்
52 பார்வைகள்

காசா மீதான இஸ்ரேலின் குண்டுவீச்சு தாக்குதலில் தனது இடது கையை இழந்த பாலஸ்தீனிய சிறுமி ஒருவர் விசேட சிகிச்சைக்காக ஏப்ரல் 07 ஆம் திகதி நேற்றைய தினம் இங்கிலாந்தை வந்தடைந்துள்ளார்.


அதன்படி, மரியம் சப்பா எனும் குறித்த சிறுமி அவரது தாயார் பாத்திமா சல்மான் மற்றும் இரண்டு சகோதரர்களுடன் லண்டன் ஹீத்ரோ விமான நிலையத்தை நேற்று மாலை வந்தடைந்தார்.

விமான நிலையத்தை அவர்கள் வந்தடைந்த போது, பரிசுகள், பலூன்கள் மற்றும் பூங்கொத்துகளை ஏந்திய ஒரு சிறிய கூட்டம் அவர்களை அன்புடன் வரவேற்றது.

மரியம் சப்பாவின் சிகிச்சைக்காக அவரது குடும்பம் முன்னதாக அமெரிக்கா செல்ல திட்டமிட்டிருந்தது.

ஆனால், கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ட்ரம்ப் நிர்வாகம் அனைத்து பாலஸ்தீனியர்களுக்குமான வருகையாளர் விசாக்களை நிறுத்தியதிலிருந்து, அவர்கள் எகிப்தில் நிச்சயமற்ற நிலையில் சிக்கியிருந்தனர்.

இந்த நிலையில், காசாவில் இருந்து காயமடைந்த மற்றும் படுகாயமடைந்த சிறுவர்களை வெளியேற்றுவதற்கான முயற்சிகளைத் தீவிரப்படுத்த வேண்டும் என பிரிட்டிஷ் அரசாங்கத்திற்குத் தொடர்ச்சியான அழுத்தம் கொடுக்கப்பட்டு வரும் வேளையில் இந்த வருகை அமைந்துள்ளது.

காசாவில் டெய்ர் அல்-பாலாவில் (Deir al-Balah) உள்ள ஒரு குடும்பத்தின் வீட்டை ஏவுகணை தாக்கியதில் கை துண்டிக்கப்பட்ட 10 வயது மரியம், காசாவிலிருந்து வெளியேற்றப்பட்ட 11,000-க்கும் மேற்பட்ட நோயாளிகளில் ஒருவர் என உலக சுகாதார ஸ்தாபனம் (WHO) தெரிவித்துள்ளது.

காசாவில் இல்லாத அவசர சிகிச்சை தேவைப்படும் 18,500 நோயாளிகள் இருப்பதாக அந்த சுகாதார நிறுவனம் மதிப்பிட்டுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் : ட்ரம்ப் எச்சரிக்கை!

போரை முடிவுக்குக் கொண்டுவர ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால் ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் செவ்வாயன்று (22) எச்சரித்தார். ஆனாலும், ஐக்கிய நாடுகள் சபையில்…

98 0 0
உலக செய்திகள்

ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க ஈரான் நிபந்தனை!

அமெரிக்கா தனது இராணுவ நெருக்குவாரங்களைக் குறைத்து, ஈரானிய துறைமுகங்கள் மீதான முற்றுகையை நீக்கினால், அடுத்த ஏழு நாட்களுக்குள் ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறக்க முடியும் என ஈரானின்…

94 0 0
உலக செய்திகள்

உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கிக்கும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பிற்கும் இடையே பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு

உக்ரைனிய ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் தலைமையகத்தில் சந்திக்கவுள்ளதுடன், ரஷ்யாவுடனான தாக்குதல்களை நிறுத்துவதற்கான சமரச முயற்சியை முன்னெடுக்கவுள்ளார்.…

101 0 0
உலக செய்திகள்

அமெரிக்காவை சென்றடைந்தார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

ஐக்கிய நாடுகள் சபையின் 81 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி திங்களன்று (21) நியூயோர்க் சென்றடைந்தார். அமெரிக்கா-ஈரான் இடையிலான…

32 0 0