உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
21 சனி
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

நீண்டகால போர், பதற்றம் அதிகரிப்பு… யாருக்கும் பலன் இல்லை: சீனா…!

உலக செய்திகள் 8 மாதங்கள் முன்
63 பார்வைகள்

ஈரானுக்கு எதிராக அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து கடந்த பிப்ரவரி 28 ஆம் திகதி வான்வழியே கடுமையாக தாக்குதல் நடத்தியது. தொடர்ந்து 6 வாரங்களாக நடந்து வரும் தாக்குதலில், ஈரானில் ஆண்கள், பெண்கள் என இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டோர்.
உயிரிழந்துள்ளனர். இதற்கு ஈரானும் பதிலடி கொடுத்து வருகிறது.

மேற்காசிய போரால் அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் ஆகிய நாடுகள் நேரடியாக பாதிக்கப்பட்டு உள்ளன. வளைகுடா நாடுகளும் பாதிப்பை எதிர்கொண்டு வருகின்றன.

இந்நிலையில், சீனாவின் வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் மாவோ நிங் இன்று பேசும்போது, இந்த விவகாரத்தில், பதற்றங்களை குறைப்பதற்கு அனைவரும் ஆக்கப்பூர்வ முறையில் பங்காற்ற வேண்டும். அமைதி பேச்சுவார்த்தைக்கு முன்வர வேண்டும் என்று குறிப்பிட்டார்.

ஹார்மூஸ் ஜலசந்தியை மீண்டும் திறக்க ஈரானுக்கு இன்றிரவு 8 மணிவரை அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் காலக்கெடு விதித்துள்ள சூழலில், சீன அமைச்சகம் இதனை தெரிவித்து உள்ளது. அப்படி ஈரான் அதனை ஏற்கவில்லை என்றால், மின்சார உற்பத்தி ஆலைகள் மற்றும் பாலங்கள் மற்றும் பாலங்கள் மீது பெரிய அளவில் தாக்குதல் நடத்தப்படும் என்றும் அச்சுறுத்தல் விடுத்து உள்ளார்.

இந்த ஆலைகளை தொடர்ந்து, எரிய செய்து, வெடிக்க செய்வதற்கான நோக்கம் என்னவென்றால், அவற்றை மீண்டும் ஒருபோதும் பயன்படுத்த கூடாது என்பதே ஆகும் என்றும் டிரம்ப் அதற்கு விளக்கம் அளித்துள்ளார். ஈரானில் எந்த பாலங்களும், மின்சார உலைகளும் இருக்காது. கற்காலத்திற்கு சென்று விடுவார்கள் என்றும் டிரம்ப் எச்சரித்து உள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

சவூதி மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஏவுகணைத் தாக்குதல்!

ஏமனில் அரசுப்படையினருக்கும், ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் நிலவி வருகிறது. இந்த உள்நாட்டுப்போரில் அரசுப்படையினருக்கு சவுதி அரேபியாவும், ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு ஈரானும் ஆதரவு அளித்து…

139 0 0
உலக செய்திகள்

ரோஹிங்கியா மக்களுக்கு நடந்தது இன அழிப்பு: சர்வதேச நீதிமன்றம் தீர்ப்பு!

முஸ்லிம் சிறுபான்மையினரான ரோஹிங்கியா மக்களின் பெரும் பகுதியை அழிக்கும் நோக்கில், 2017ஆம் ஆண்டு மியன்மார் இராணுவம் முன்னெடுத்த நடவடிக்கைகளில் சுமார் 10,000 ரோஹிங்கியாக்கள் கொல்லப்பட்டதற்கான ஆதாரங்கள் உள்ளதாக…

145 0 0
உலக செய்திகள்

உக்ரைனுக்கு 1,000 நீண்ட தூரத் தாக்குதல் ட்ரோன்களை வழங்க பிரித்தானியா தீர்மானம்

ரஷ்யாவின் முன்னரங்கப் பகுதிகளுக்கு அப்பால் உள்ள இலக்குகள் மீது தாக்குதல் நடத்துவதற்காக, உக்ரைனுக்கு 1,000 நீண்ட தூரத் தாக்குதல் ட்ரோன் வானுர்திகளை வழங்க பிரித்தானியா தீர்மானித்துள்ளது. உக்ரைனுக்கு…

145 0 0
உலக செய்திகள்

வரலாற்றுச் சிறப்புமிக்க முத்தரப்புச் சந்திப்பு: ட்ரம்ப், புடின், மற்றும் சீ ஜின்பிங் பங்கேற்பு

ஆசிய-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு (APEC) உச்சிமாநாட்டிற்கு இடையே, சீனாவின் ஷென்சென் நகரில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் மற்றும் சீன ஜனாதிபதி…

144 0 0