உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
21 சனி
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

நிலவின் பின்புறம் நாசாவின் விண்கலம் சென்றபோது.. துண்டிக்கப்பட்ட தொடர்பு.. திக்..திக்.. நிமிடங்கள்.!

உலக செய்திகள் 8 மாதங்கள் முன்
67 பார்வைகள்

அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசாவால் உருவாக்கப்பட்ட ‘அப்பல்லோ 11’ விண்கலம் கடந்த 1969-ம் ஆண்டு ஜூலை 20 ஆம் திகதி முதன்முதலில் மனிதர்களை நிலவில் தரை இறக்கியது. இதன் பிறகு கடைசியாக ‘அப்பல்லோ 17’ விண்கலம் மூலமாக 1972 ஆம் ஆண்டு நாசா மனிதர்களை நிலவுக்கு அனுப்பியது.

மனிதர்கள் நிலவில் காலடி எடுத்து வைத்து 53 ஆண்டுகள் ஆனநிலையில் ‘ஆர்டெமிஸ் 2’ என்ற திட்டத்தின் மூலமாக கடந்த 2-ந்தேதி, ஒரு கனடா நாட்டவர், ஒரு பெண் உள்பட 4 விண்வெளி வீரர்களை விண்வெளிக்கு நாசா அனுப்பியது. வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்ட இவர்கள் ஓரியன் விண்கலம் மூலமாக பூமியின் புவிவட்டப்பாதையை சுற்றி வந்து முக்கியமான சோதனைகள், உயிர்க்காக்கும் நடவடிக்கைகள் ஆகியவற்றை மேற்கொண்டனர்.


தொடர்ந்து நிலவை நோக்கிய தங்களுடைய பயணத்தை வெற்றிக்கரமாக முன்னெடுத்தநிலையில் நிலவின் சுற்று வட்டப்பாதையை நெருங்கினர். 1972-ம் ஆண்டுக்குப் பிறகு, மனிதர்கள் பயணிக்கும் விண்கலம் ஒன்று நிலவை இவ்வளவு நெருக்கமாக நெருங்குவது இதுவே முதல் முறை. ஓரிய ன் விண்கலத்தில் பயணிக்கும் நான்கு விண்வெளி வீரர்கள் நிலவின் சுற்று வட்டப்பாதையில் சுற்றி வந்தனர். பூமியில் இருந்து 3 லட்சத்து 73 ஆயிரத்து 367 கி.மீ. (2,32,000 மைல்கள்) தொலைவிலும், நிலவில் இருந்து 6 ஆயிரம் கி.மீ. (4 ஆயிரம் மைல்கள்) தொலைவில் 4 விண்வெளி வீரர்களும் ஓரியன் விண்கலம் மூலமாக சுற்றி வந்தனர்.


அப்போது நிலவின் பின்புறத்தை தமது கண்களால் வீரர்கள் கண்டனர். ரோபோக்கள், ரோவர்கள் மற்றும் செயற்கைக்கோளை தவிர்த்து மனிதர்களால் முதன்முதலில் நிலவின் பின்புறத்தை காண்பது முதல்முறையாகும். நிலவின் பின்புறம் விண்கலம் சென்றபோது, 40 நிமிடங்கள் பூமிக்கும் விண்கலத்திற்கும் இடையிலான தொடர்பு துண்டிக்கப்பட்டது.

இந்திய நேரப்படி இன்று அதிகாலை இந்த விண்கலம் நிலவுக்குப் பின்புறம் சென்றது. அந்த 40 நிமிடங்கள் பூமியுடன் அவர்களுக்கு எந்தவொரு தொடர்பும் இல்லை. அந்த குறிப்பிட்ட நேரம் அவர்கள் நிலை என்ன என்பது குறித்து பூமியில் உள்ள ஆய்வாளர்களால் கண்காணிக்க முடியவில்லை. அவர்கள் பத்திரமாக இருக்க வேண்டும்.. மீண்டும் சிக்னல் கிடைக்க வேண்டும் என்பதே அனைவரின் பிரார்த்தனையாக இருந்தது.
இதன்படி பூமியுடனான அதன் தகவல் தொடர்பு சுமார் 42 நிமிடங்கள் துண்டிக்கப்பட்டது. இந்திய அதிகாலை 4:13 மணிக்கு சிக்னல் இழக்கப்பட்டு, அதிகாலை 4:55 மணிக்கு மீண்டும் பெறப்பட்டது.

இந்த இடைப்பட்ட நேரத்தில், அதிகாலை 4:32 மணிக்கு நிலவின் மேற்பரப்பில் மிக நெருக்கமாக இவர்கள் விண்கலம் சென்றது. அதன்பின், அதிகாலை 4:35 மணிக்குப் பூமியில் இருந்து இதுவரை இல்லாத அதிகபட்ச தொலைவாக 4,06,776 கி.மீ தூரத்தை எட்டியது. சுமார் 7 மணி நேரம் இதுபோல நிலவைச் சுற்றி வந்து முக்கியமான தகவல்களை அவர்கள் சேகரித்து வருகிறார்கள்.


அதைத் தொடர்ந்து மீண்டும் அவர்கள் பூமி நோக்கிய தங்கள் பயணத்தை ஆரம்பிப்பார்கள். இந்த 10 நாள் பயணம் நிலவில் தரை இறங்குவதற்காக அல்ல.. மாறாக, விண்கலத்தின் பாதுகாப்பு மற்றும் கட்டுப்பாட்டு அமைப்புகளைச் சோதிப்பதற்காக மேற்கொள்ளப்படுகிறது. இந்த ‘ப்ரீ-ரிட்டர்ன்’ பாதையைப் பயன்படுத்தி, நிலவின் ஈர்ப்பு விசையாலேயே விண்கலம் மீண்டும் பூமியை நோக்கி தள்ளப்படும்.


வரும் சனிக்கிழமை (ஏப்ரல் 11 ஆம் திகதி) பசிபிக் பெருங்கடலில் இந்த விண்கலம் வந்திறங்கும் என கணிக்கப்பட்டுள்ளது. அடுத்த கட்டமாக நிலவில் மனிதர்களைத் தரையிறக்கும் ஆர்டெமிஸ்-3 திட்டத்துக்கு இது ஒரு முன்னோட்டமாகும்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

சவூதி மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஏவுகணைத் தாக்குதல்!

ஏமனில் அரசுப்படையினருக்கும், ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் நிலவி வருகிறது. இந்த உள்நாட்டுப்போரில் அரசுப்படையினருக்கு சவுதி அரேபியாவும், ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு ஈரானும் ஆதரவு அளித்து…

139 0 0
உலக செய்திகள்

ரோஹிங்கியா மக்களுக்கு நடந்தது இன அழிப்பு: சர்வதேச நீதிமன்றம் தீர்ப்பு!

முஸ்லிம் சிறுபான்மையினரான ரோஹிங்கியா மக்களின் பெரும் பகுதியை அழிக்கும் நோக்கில், 2017ஆம் ஆண்டு மியன்மார் இராணுவம் முன்னெடுத்த நடவடிக்கைகளில் சுமார் 10,000 ரோஹிங்கியாக்கள் கொல்லப்பட்டதற்கான ஆதாரங்கள் உள்ளதாக…

145 0 0
உலக செய்திகள்

உக்ரைனுக்கு 1,000 நீண்ட தூரத் தாக்குதல் ட்ரோன்களை வழங்க பிரித்தானியா தீர்மானம்

ரஷ்யாவின் முன்னரங்கப் பகுதிகளுக்கு அப்பால் உள்ள இலக்குகள் மீது தாக்குதல் நடத்துவதற்காக, உக்ரைனுக்கு 1,000 நீண்ட தூரத் தாக்குதல் ட்ரோன் வானுர்திகளை வழங்க பிரித்தானியா தீர்மானித்துள்ளது. உக்ரைனுக்கு…

145 0 0
உலக செய்திகள்

வரலாற்றுச் சிறப்புமிக்க முத்தரப்புச் சந்திப்பு: ட்ரம்ப், புடின், மற்றும் சீ ஜின்பிங் பங்கேற்பு

ஆசிய-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு (APEC) உச்சிமாநாட்டிற்கு இடையே, சீனாவின் ஷென்சென் நகரில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் மற்றும் சீன ஜனாதிபதி…

144 0 0