உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
24 வியாழன்

லண்டன் வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தகவல்!

உலக செய்திகள் 6 மாதங்கள் முன்
29 பார்வைகள்

லண்டனில் இந்த வார இறுதியில் வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும் என்றும், இதனால் தலைநகரம் பார்சிலோனாவை விட வெப்பமாக இருக்கும் என்றும் தேசிய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
டேவ் புயலால் ஏற்பட்ட கடுங்குளிர் நிலை மாறி, வெயிலும் இதமான வானிலையும் தலைநகரில் நிலவும் என கணிக்கப்பட்டுள்ளது.

நாளை ஏப்ரல் 09 ஆம் திகதி புதன்கிழமை லண்டனில் வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸையும், மான்செஸ்டரில் 20 டிகிரி செல்சியஸையும் எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

24 டிகிரி செல்சியஸ் வரையிலான அதிகபட்ச வெப்பநிலையானது, கடந்த மார்ச் 18 ஆம் திகதி அன்று அபெரிஸ்ட்வித் அருகே உள்ள கோகர்தானில் பதிவான 20.9 டிகிரி செல்சியஸ் என்ற இந்த ஆண்டின் இதுவரையில் பதிவான வெப்ப நிலையினை விஞ்சும் என தேசிய வானில‍ை ஆய்வாளர்கள் எதிர்வு கூறியுள்ளனர்.

இதன் காரணமாக இந்த வாரம் செவ்வாய் மற்றும் புதன்கிழமைகளில் 19 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையை எட்டவிருக்கும் பார்சிலோனாவை விட, ஐக்கிய இராச்சியத்தின் பல பகுதிகள் அதிகரித்த வெப்ப நிலை நிலவும் என கூறப்படுகிறது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் : ட்ரம்ப் எச்சரிக்கை!

போரை முடிவுக்குக் கொண்டுவர ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால் ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் செவ்வாயன்று (22) எச்சரித்தார். ஆனாலும், ஐக்கிய நாடுகள் சபையில்…

98 0 0
உலக செய்திகள்

ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க ஈரான் நிபந்தனை!

அமெரிக்கா தனது இராணுவ நெருக்குவாரங்களைக் குறைத்து, ஈரானிய துறைமுகங்கள் மீதான முற்றுகையை நீக்கினால், அடுத்த ஏழு நாட்களுக்குள் ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறக்க முடியும் என ஈரானின்…

94 0 0
உலக செய்திகள்

உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கிக்கும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பிற்கும் இடையே பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு

உக்ரைனிய ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் தலைமையகத்தில் சந்திக்கவுள்ளதுடன், ரஷ்யாவுடனான தாக்குதல்களை நிறுத்துவதற்கான சமரச முயற்சியை முன்னெடுக்கவுள்ளார்.…

101 0 0
உலக செய்திகள்

அமெரிக்காவை சென்றடைந்தார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

ஐக்கிய நாடுகள் சபையின் 81 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி திங்களன்று (21) நியூயோர்க் சென்றடைந்தார். அமெரிக்கா-ஈரான் இடையிலான…

32 0 0