உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

பாக்கு நீரிணையை 11 மணி நேரம் 15 நிமிடங்களில் நீந்திக் கடந்த மாற்றுத்திறனாளி.!

இந்திய செய்திகள் 6 மாதங்கள் முன்
33 பார்வைகள்

பார்வை தடையல்ல என்ற விழிப்புணர்வை ஏற்படுத்த இலங்கை தலைமன்னாரிலிருந்து தனுஷ்கோடி அரிச்சல்முனை வரையிலான பாக்கு நீரிணையை ஈஸ்வரி என்ற மாற்றுத்திறனாளி 11 மணி நேரம் 15 நிமிடங்களில் நீந்தி கடந்துள்ளார்.

மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரைச் சேர்ந்த கமலேஷ் விட்டல்ராவ் பாண்டே மற்றும் அருணா கமலேஷ் பாண்டே தம்பதியினரின் மகள் ஈஸ்வரி (17 வயது) 11ஆம் வகுப்பு பயின்று வருகிறார்.

இவர் பிறவியிலேயே முழுமையாக பார்வையற்றவராக இருந்த போதிலும், தனது விடாமுயற்சி, துணிவு மற்றும் திறமையால் தேசிய அளவிலான பாரா ஒலிம்பிக் நீச்சல் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றுள்ளார். மேலும், இதற்கு முன்பு கடலில் நீந்தி தனது திறனை நிரூபித்துள்ளார்.

இந்நிலையில் நீந்துவதற்கு பார்வை தடையல்ல என்பதை வலியுறுத்துவதற்காக இலங்கையிலுள்ள தலைமன்னாரிலிருந்து தனுஷ்கோடி வரையிலுமான சுமார் 30 கி.மீ தொலைவிலான பாக்கு நீரிணையை நீந்துவதற்கு இந்திய வெளியுறவுத்துறை, இலங்கை தூதரகம் மற்றும் பாதுகாப்பு துறை அமைச்சகத்திடம் அனுமதி கோரியிருந்தனர்.

அனுமதி கிடைத்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை மதியம் இராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து இரண்டு படகில் அவரது பெற்றோர், பயிற்சியாளர், மருத்துவர் மற்றும் மீனவர்கள் உள்ளிட்ட 20 பேர் கொண்ட குழுவினருடன் தலைமன்னாருக்கு புறப்பட்டு சென்றனர்.

திங்கட்கிழமை அதிகாலை 4.00 மணியளவில் தலைமன்னாரிலிருந்து ஈஸ்வரி நீந்தத் தொடங்கி, பிற்பகல் 03.15 மணியளவில் அரிச்சல்முனை கடற்பகுதிக்கு வந்தடைந்தார்.

11 மணி , 15 நிமிடங்களில் சுமார் 30 கிலோ மீற்றர் தூரம் வரை நீந்தி உள்ளார். இதன் மூலம் பார்வை திறன் அற்ற மாற்றுத்திறனாளியாக கடலில் அதிக தூரமும், அதிக நேரமும் தனியாக நீந்திய சாதனையை ஈஸ்வரி படைத்துள்ளார்.

தனுஷ்கோடி அரிச்சல்முனை கடற்கரையில் பாக்கு நீரிணையை நீந்திக் கடந்த மாற்றுத்திறனாளியான ஈஸ்வரிக்கு இந்திய கடலோர காவல் படையினரால் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

இதற்கு முன்னதாக தலைமன்னார், தனுஷ்கோடி இடையிலான பாக்கு நீரிணையை 20.03.2022 அன்று மும்பையைச் சேர்ந்த ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்ட சிறுமி ஜியா ராய் தனது 13 வயதில் நீந்திக் கடந்துள்ளார்.

மேலும், சென்னை முகப்பேர் மேற்கு பகுதியைச் சேர்ந்த முழங்காலுக்கு கீழே பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளியான புவி ஆற்றல் என்பவர் கடந்த 05.10.2025 அன்று பாக்கு நீரிணையை நீந்தி கடந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இந்திய செய்திகள்

காமராஜர் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம் : மாணவர்களுடன் சாப்பிட்ட முதல்வர் விஜய்

பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டத்தை முதலமைச்சர் விஜய் இன்று தொடங்கி வைத்தார். காமராஜர் காலை உணவுத் திட்டம்தமிழகத்தில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான காலை உணவுத் திட்டம்…

45 0 0
இந்திய செய்திகள்

மும்பையில் பாலத்தில் இருந்து பாய்ந்த BMW கார் – மூவர் உயி@ரிழப்பு!

மும்பையில் உள்ள ‘கோஸ்டல் வீதி’ (Coastal Road) பாலத்திலிருந்து அதிநவீன பிஎம்டபிள்யூ (BMW) கார் ஒன்று கீழே பாய்ந்து விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்த மூவர் உயிரிழந்தனர். மற்றொருவர்…

44 0 0
இந்திய செய்திகள்

முதல்வர் விஜய்யின் லண்டன் பயணத்தை கடுமையாக விமர்சித்த அண்ணாமலை!

தமிழக பாஜகவின் முன்னாள் தலைவர் கே. அண்ணாமலை, முதலமைச்சர் ஜோசப் விஜய் அண்மையில் மேற்கொண்ட லண்டன் பயணத்தைக் கடுமையாக விமர்சித்துள்ளார். தமிழகத்திற்கான முதலீடுகளை ஈர்க்க இங்கிலாந்து சரியான…

30 0 0
இந்திய செய்திகள்

“கேள்வி கேட்டால் பாட்டுப் பாடுகிறார்கள் – முதலமைச்சர் பஞ்ச் டயலொக் பேசுகிறார்” : உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்!

தமிழ்நாடு சட்டமன்றத்தில் எதிர்க்கட்சியினர் கேள்வி எழுப்பும்போது, ஆளுங்கட்சியினர் அதற்கு பதிலளிக்காமல் பாடல்களைப் பாடுவதாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் விமர்சித்துள்ளார். திருமண விழா ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய…

47 0 0