உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
21 சனி
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

அமெரிக்கா – ஈரான் போர்: ஈரானின் கொடூரத்தை விளக்கிய டிரம்ப்.

உலக செய்திகள் 8 மாதங்கள் முன்
122 பார்வைகள்

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியாதாவது, இந்தப் போர் ஒரே ஒரு விஷயத்தை பற்றியது.
ஈரான் அணு ஆயுதத்தை வைத்திருக்க கூடாது. நாம் சுலைமானியை கொன்றுவிட்டோம். ஒருவேளை அவர்களிடம் சுலைமானி இருந்திருந்தால், நிலைமை முற்றிலும் வேறுவிதமாக இருந்திருக்கும்.

ஒருவேளை நாம் அப்போதும் வெற்றி பெற்றிருக்கலாம், ஆனால் அது மிகவும் கடினமாக இருந்திருக்கும், ஏனென்றால் நாம் அவர்களின் நாட்டை அழித்துக்கொண்டிருக்கிறோம், அதை செய்ய நான் வெறுக்கிறேன்.
துரதிர்ஷ்டவசமாக, அமெரிக்க மக்கள் நாம் தாயகம் திரும்புவதை காண விரும்புகிறார்கள். அது என் கையில் இருந்தால், நான் எண்ணெயைஎடுத்துக்கொள்வேன், எண்ணெயை வைத்துக்கொள்வேன், நான் நிறைய பணம் சம்பாதிப்பேன். ஈரான் மக்களையும், இதுவரை அவர்கள் கவனிக்கப்பட்டதை விட மிகச் சிறப்பாக கவனித்துக்கொள்வேன்.


ஈரான் மிகவும் கொடூரமாக இருக்கிறது. ஒன்றரை மாதங்களுக்கு முன்பு வரை ஈரான் 45,000 பேரை கொன்றிருக்கிறார்கள். எனவே, என் கையில் தேர்வு இருந்தால், நான் எண்ணெயை வைத்துக்கொள்வேன். ஆனால், நம் நாட்டு மக்களையும் நான் மகிழ்ச்சியாக வைத்திருக்க விரும்புகிறேன்.
பெரும்பாலான மக்கள் அதைப புரிந்துகொள்ள மாட்டார்கள் என்று நினைக்கிறேன். நான் உங்களுக்கு ஒரு உதாரணம் சொல்கிறேன். வெனிசுலா விவகாரம் நம்பமுடியாத அளவிற்கு சிறப்பாக அமைந்துள்ளது. தற்போது ஹூஸ்டனில் பல பீப்பாய் எண்ணெய்சுத்திகரிக்கப்பட்டு வருகிறது. வெனிசுலா தலைவர்களுடனான உறவு அற்புதமாக இருந்து வருகிறது. நமக்கு ஒரு நீண்டகால, மிக நல்ல உறவு இருக்கும் என்று நான் நினைக்கிறேன் என டிரம்ப் கூறினார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

சவூதி மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஏவுகணைத் தாக்குதல்!

ஏமனில் அரசுப்படையினருக்கும், ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் நிலவி வருகிறது. இந்த உள்நாட்டுப்போரில் அரசுப்படையினருக்கு சவுதி அரேபியாவும், ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு ஈரானும் ஆதரவு அளித்து…

139 0 0
உலக செய்திகள்

ரோஹிங்கியா மக்களுக்கு நடந்தது இன அழிப்பு: சர்வதேச நீதிமன்றம் தீர்ப்பு!

முஸ்லிம் சிறுபான்மையினரான ரோஹிங்கியா மக்களின் பெரும் பகுதியை அழிக்கும் நோக்கில், 2017ஆம் ஆண்டு மியன்மார் இராணுவம் முன்னெடுத்த நடவடிக்கைகளில் சுமார் 10,000 ரோஹிங்கியாக்கள் கொல்லப்பட்டதற்கான ஆதாரங்கள் உள்ளதாக…

145 0 0
உலக செய்திகள்

உக்ரைனுக்கு 1,000 நீண்ட தூரத் தாக்குதல் ட்ரோன்களை வழங்க பிரித்தானியா தீர்மானம்

ரஷ்யாவின் முன்னரங்கப் பகுதிகளுக்கு அப்பால் உள்ள இலக்குகள் மீது தாக்குதல் நடத்துவதற்காக, உக்ரைனுக்கு 1,000 நீண்ட தூரத் தாக்குதல் ட்ரோன் வானுர்திகளை வழங்க பிரித்தானியா தீர்மானித்துள்ளது. உக்ரைனுக்கு…

145 0 0
உலக செய்திகள்

வரலாற்றுச் சிறப்புமிக்க முத்தரப்புச் சந்திப்பு: ட்ரம்ப், புடின், மற்றும் சீ ஜின்பிங் பங்கேற்பு

ஆசிய-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு (APEC) உச்சிமாநாட்டிற்கு இடையே, சீனாவின் ஷென்சென் நகரில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் மற்றும் சீன ஜனாதிபதி…

144 0 0