உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

குறைந்த வேகத்தில் கூடிய தங்கத்தின் விலை ..!

இந்திய செய்திகள் 6 மாதங்கள் முன்
34 பார்வைகள்

கடந்த வாரம் ஆபரணத்தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கம் காணப்பட்ட நிலையில் வார இறுதி நாளில் உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ.13,950-க்கும் சவரனுக்கு 800 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ஒரு லட்சத்து 11ஆயிரத்து 600 ரூபாய்க்கு விற்பனையானது.

அதனை தொடர்ந்து இன்றும் தங்கம் உயரும் என்றுஎதிர்பார்க்கப்பட்ட நிலையில், காலையில் அதிரடியாக குறைந்தது. இன்று காலையில், கிராமுக்கு 140 ரூபாய் குறைந்து ஒரு கிராம் ரூ.13,810-க்கும் சவரனுக்கு 1120 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ஒரு லட்சத்து 10 ஆயிரத்து 480 ரூபாய்க்கு விற்பனையானது.


அதேபோல வெள்ளி விலை, இன்று காலை வெள்ளி விலையில் மாற்றமில்லை. ஒரு கிராம் வெள்ளி 255 ரூபாய்க்கும் பார் வெள்ளி 2 லட்சத்து 55 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை ஆனது.


இந்நிலையில் காலையில் குறைந்த தங்கம் விலை மாலையில் மீண்டும் உயர்வை சந்தித்துள்ளது. மாலை நிலவரப்படி கிராம் தங்கம் ரூ.180 அதிகரித்து 13,990 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. அதேபோல ஒரு சவரன் தங்கம் ரூ.1,440 உயர்ந்து ரூ. 1,11, 920 க்குவிற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலையும் மாலையில் ஒரு கிராம் 5 ரூபாய் அதிகரித்து ரூ.260க்கும், ஒரு கிலோ ரூ.5000 உயர்ந்து ரூ.2,60,000 ஆக விற்பனை செய்யப்படுகிறது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இந்திய செய்திகள்

காமராஜர் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம் : மாணவர்களுடன் சாப்பிட்ட முதல்வர் விஜய்

பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டத்தை முதலமைச்சர் விஜய் இன்று தொடங்கி வைத்தார். காமராஜர் காலை உணவுத் திட்டம்தமிழகத்தில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான காலை உணவுத் திட்டம்…

45 0 0
இந்திய செய்திகள்

மும்பையில் பாலத்தில் இருந்து பாய்ந்த BMW கார் – மூவர் உயி@ரிழப்பு!

மும்பையில் உள்ள ‘கோஸ்டல் வீதி’ (Coastal Road) பாலத்திலிருந்து அதிநவீன பிஎம்டபிள்யூ (BMW) கார் ஒன்று கீழே பாய்ந்து விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்த மூவர் உயிரிழந்தனர். மற்றொருவர்…

44 0 0
இந்திய செய்திகள்

முதல்வர் விஜய்யின் லண்டன் பயணத்தை கடுமையாக விமர்சித்த அண்ணாமலை!

தமிழக பாஜகவின் முன்னாள் தலைவர் கே. அண்ணாமலை, முதலமைச்சர் ஜோசப் விஜய் அண்மையில் மேற்கொண்ட லண்டன் பயணத்தைக் கடுமையாக விமர்சித்துள்ளார். தமிழகத்திற்கான முதலீடுகளை ஈர்க்க இங்கிலாந்து சரியான…

30 0 0
இந்திய செய்திகள்

“கேள்வி கேட்டால் பாட்டுப் பாடுகிறார்கள் – முதலமைச்சர் பஞ்ச் டயலொக் பேசுகிறார்” : உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்!

தமிழ்நாடு சட்டமன்றத்தில் எதிர்க்கட்சியினர் கேள்வி எழுப்பும்போது, ஆளுங்கட்சியினர் அதற்கு பதிலளிக்காமல் பாடல்களைப் பாடுவதாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் விமர்சித்துள்ளார். திருமண விழா ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய…

47 0 0