உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
24 வியாழன்

ஈரான் குடியிருப்பில் அமெரிக்கா-இஸ்ரேல் வான் தாக்குதல்: 6 குழந்தைகள் உட்பட 13 பேர் பலி!

உலக செய்திகள் 6 மாதங்கள் முன்
43 பார்வைகள்

ஈரான் மீதான அமெரிக்க, இஸ்ரேல் தாக்குதல் கடந்த பெப்ரவரி 28 தொடங்கி ஒரு மாதத்தை கடந்து நீடித்து வருகிறது.ஈரானும் இஸ்ரேல் மற்றும் மத்திய கிழக்கில் அமெரிக்க ஆதரவு நாடுகள் மீது பதிலடி தாக்குதல் நடத்தி வருகிறது.


இந்த சூழலில் ஈரான் தலைநகர் தெஹ்ரானின் பஹ்ரெஸ்தான் கவுண்டியில் உள்ள ஒரு குடியிருப்புப் பகுதியில் அமெரிக்க-இஸ்ரேலியப் படைகள் நடத்திய தாக்குதலில் ஆறு குழந்தைகள் உட்பட 13 பேர் கொல்லப்பட்டதாக அந்நாட்டின் அதிகாரபூர்வ செய்தி நிறுவனமான ஃபார்ஸ் தெரிவித்துள்ளது.

இறந்தவர்களில் 10 வயதுக்குட்பட்ட நான்கு சிறுமிகளும் இரண்டு சிறுவர்களும் அடங்குவர் எனத் தெரியவந்துள்ளது. அதேபோல் கோம் நகரிலும், ஷெரிஃப் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்திலும் தாக்குதல்கள் நடைபெற்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


பதற்றங்கள் தீவிரமடைந்து வரும் நிலையில், தனது ட்ரூத் ஷோசியல் பதிவில் டிரம்ப், “செவ்வாய்க்கிழமை, இரவு 8:00 மணி (கிழக்கு நேரப்படி)” என்று மட்டும் குறிப்பிட்டுள்ளார். ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதற்கு ஈரானுக்கு அவர் நிர்ணயித்த காலக்கெடு இதுவாகும்.
ஒருவேளை ஜலசந்தியை திறக்கவில்லை என்றால் ஈரானுக்கு நரகத்தை காட்டுவோம் என டிரம்ப் முன்னதாக கூறியிருந்தார். பதிலுக்கு ஈரானும் நகரத்தை காட்டுவோம் என பதிலடி கொடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் : ட்ரம்ப் எச்சரிக்கை!

போரை முடிவுக்குக் கொண்டுவர ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால் ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் செவ்வாயன்று (22) எச்சரித்தார். ஆனாலும், ஐக்கிய நாடுகள் சபையில்…

97 0 0
உலக செய்திகள்

ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க ஈரான் நிபந்தனை!

அமெரிக்கா தனது இராணுவ நெருக்குவாரங்களைக் குறைத்து, ஈரானிய துறைமுகங்கள் மீதான முற்றுகையை நீக்கினால், அடுத்த ஏழு நாட்களுக்குள் ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறக்க முடியும் என ஈரானின்…

94 0 0
உலக செய்திகள்

உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கிக்கும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பிற்கும் இடையே பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு

உக்ரைனிய ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் தலைமையகத்தில் சந்திக்கவுள்ளதுடன், ரஷ்யாவுடனான தாக்குதல்களை நிறுத்துவதற்கான சமரச முயற்சியை முன்னெடுக்கவுள்ளார்.…

101 0 0
உலக செய்திகள்

அமெரிக்காவை சென்றடைந்தார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

ஐக்கிய நாடுகள் சபையின் 81 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி திங்களன்று (21) நியூயோர்க் சென்றடைந்தார். அமெரிக்கா-ஈரான் இடையிலான…

32 0 0