உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
24 வியாழன்

நேபாள மக்களவை சபாநாயகராக டி.பி. ஆரியால் போட்டியின்றி தேர்வு..!

உலக செய்திகள் 6 மாதங்கள் முன்
48 பார்வைகள்

நேபாள நாட்டின் ராஷ்டீரிய சுதந்திரா கட்சியின் துணை தலைவரான டோல் பிரசாத் ஆரியால் பிரதிநிதிகள் சபையின் சபாநாயகராக போட்டியின்றி இன்று தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார். இதற்காக அவர் நேற்று வேட்புமனு தாக்கல் செய்தநிலையில், அதற்கு அக்கட்சியின் தலைவர் ரபி லமிசானே ஆதரவு தெரிவித்ததுடன், மந்திரிகள் ஸ்வர்னிம் வாகலே, சோபிதா கவுதம் மற்றும்,
சுனில் லம்சால் ஆகியோரும் ஆதரவளித்திருந்தனர்.

நடப்பு ஆண்டில் நடந்த நாடாளுமன்ற தேர்தலில், காத்மண்டு 9 தொகுதியில் இருந்துதேர்ந்தெடுக்கப்பட்ட அவர், கீழவையின் 10ஆவ து சபாநாயகராகி உள்ளார். 18 ஆண்டுகளில் கம்யூனிஸ்டு அல்லாத முதல் நபராகவும் அவர் உள்ளார்.
1974ஆம் ஆண்டு மைதி நகரில் பிறந்த அவர், 1992ஆம் ஆண்டு வேலை தேடி காத்மண்டு நகருக்கு வந்து, உணவு விடுதி ஒன்றில் தொழிலாளியாகசேர்ந்து, பின்னர் சுற்றுலா வழிகாட்டியாகவும் பணியாற்றினார்.

வேலைக்காகவும், படிப்புக்காகவும் ஜப்பான் சென்ற அவர், நேபாளத்திலும், வெளிநாட்டிலும் பல அனுபவங்களை பெற்றார். கல்வி, சுற்றுலா மற்றும் தொழில் ஆகியவற்றில் ஆர்வத்துடன் ஈடுபட்ட ஆரியால், ராஷ்டீரிய சுதந்திரா கட்சி தோற்றுவிக்கப்பட்டபோது தீவிர அரசியலில் இறங்கினார். மூன்றரை ஆண்டுகளில், அக்கட்சியின் அடிப்படை மத்திய உறுப்பினரானார். இந்நிலையில், கீழவையின் சபாநாயகராகவும் ஆகியுள்ளார்.
இது அந்நாட்டின் 4ஆவது உயரிய பதவியாக கருதப்படுகிறது. கட்சியின் 3இல் 2 பங்கு பெரும்பான்மையை பெற்று துணை தலைவர் பதவியை வகித்து வரும் அவர் நாடாளுமன்ற சபாநாயகர் என்ற பாகுபாடற்ற மற்றும் கவுரவத்திற்குரிய பதவியையும் பெற்றுள்ளார். அவர் இதற்கு முன்பு, தொழிலாளர், வேலைவாய்ப்பு மற்றும் சமூக பாதுகாப்பு துறைக்கான மந்திரியாக 2 முறை பதவி வகித்த அனுபவம் கொண்டவர் ஆவார்.
நேபாள பிரதமர் கே.பி. சர்மா ஒலி ராஜினாமாவை தொடர்ந்து, கடந்த 5 ஆம் திகதி நாடாளுமன்ற தேர்தல் நடந்தது. இதில், ராஷ்டீரிய சுதந்திதிரா கட்சியை சேர்ந்த ராப் பாடகர் பாலேந்திர ஷா வெற்றி பெற்று பிரதமரானார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் : ட்ரம்ப் எச்சரிக்கை!

போரை முடிவுக்குக் கொண்டுவர ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால் ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் செவ்வாயன்று (22) எச்சரித்தார். ஆனாலும், ஐக்கிய நாடுகள் சபையில்…

97 0 0
உலக செய்திகள்

ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க ஈரான் நிபந்தனை!

அமெரிக்கா தனது இராணுவ நெருக்குவாரங்களைக் குறைத்து, ஈரானிய துறைமுகங்கள் மீதான முற்றுகையை நீக்கினால், அடுத்த ஏழு நாட்களுக்குள் ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறக்க முடியும் என ஈரானின்…

94 0 0
உலக செய்திகள்

உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கிக்கும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பிற்கும் இடையே பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு

உக்ரைனிய ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் தலைமையகத்தில் சந்திக்கவுள்ளதுடன், ரஷ்யாவுடனான தாக்குதல்களை நிறுத்துவதற்கான சமரச முயற்சியை முன்னெடுக்கவுள்ளார்.…

101 0 0
உலக செய்திகள்

அமெரிக்காவை சென்றடைந்தார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

ஐக்கிய நாடுகள் சபையின் 81 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி திங்களன்று (21) நியூயோர்க் சென்றடைந்தார். அமெரிக்கா-ஈரான் இடையிலான…

32 0 0