உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
21 சனி
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

போருக்கு மத்தியிலும் கொடூரம்; ஈரானில் இருவருக்கு மரணதண்டனை!

உலக செய்திகள் 8 மாதங்கள் முன்
85 பார்வைகள்

ஈரானில் கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற அரசாங்கத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டங்களின் போது, இராணுவத் தளமொன்றைத் தாக்கி ஆயுதங்களைக் கொள்ளையடிக்க முயன்றதாகக் குற்றம் சாட்டப்பட்ட இருவருக்கு ஞாயிற்றுக்கிழமை ஏப்ரல் 05 ஆம் திகதி மரணதண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.

முகமதுஅமின் பிக்லாரி மற்றும் ஷாஹின் வாஹெத்பராஸ்ட் ஆகிய இருவருக்கே இவ்வாறு மரணதண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.

“கிளர்ச்சியாளர்கள்” எனக் குறிப்பிடப்பட்ட இவர்கள், இராணுவத் தளவாடங்களைத் திருடி மனிதாபிமானமற்ற முறையில் பாரிய கொலைகளைச் செய்ய முயன்றதாக ஈரான் உயர் நீதிமன்றம் இவர்களது தண்டனையை உறுதிப்படுத்தியது.
கடந்த வாரம் இதே வழக்கின் கீழ் 18 வயதான அமீர்ஹொசைன் ஹதாமி என்பவருக்கும் மரணதண்டனை நிறைவேற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இந்தத் தண்டனைகள் குறித்து சர்வதேச மன்னிப்புச் சபை கண்டனம் வெளியிட்டுள்ளது.

கைது செய்யப்பட்டவர்கள் தடுத்து வைக்கப்பட்டிருந்தபோது சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டதாகவும், பலவந்தமாகப் பெறப்பட்ட ஒப்புதல் வாக்குமூலங்களின் அடிப்படையிலேயே இந்தத் தண்டனைகள் வழங்கப்பட்டதாகவும் சர்வதேச மன்னிப்புச் சபை குற்றம் சாட்டியுள்ளது.

இந்தப் போராட்டங்களில் பங்கேற்ற மேலும் 11 நபர்களுக்கு எந்த நேரத்திலும் மரணதண்டனை நிறைவேற்றப்படலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஈரானில் நிலவும் தற்போதைய சூழல்அமெரிக்காவுடனான போர் பதற்றம் ஒருபுறம் இருக்க, உள்நாட்டில் வெடித்துள்ள ஆர்ப்பாட்டங்களை ஒடுக்க ஈரான் அரசாங்கம் முன்னெடுத்து வரும் இந்தத் தீவிர நடவடிக்கைகள் அந்நாட்டின் வரலாற்றிலேயே மிகப்பெரிய அடக்குமுறையாகக் கருதப்படுகிறது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

சவூதி மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஏவுகணைத் தாக்குதல்!

ஏமனில் அரசுப்படையினருக்கும், ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் நிலவி வருகிறது. இந்த உள்நாட்டுப்போரில் அரசுப்படையினருக்கு சவுதி அரேபியாவும், ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு ஈரானும் ஆதரவு அளித்து…

139 0 0
உலக செய்திகள்

ரோஹிங்கியா மக்களுக்கு நடந்தது இன அழிப்பு: சர்வதேச நீதிமன்றம் தீர்ப்பு!

முஸ்லிம் சிறுபான்மையினரான ரோஹிங்கியா மக்களின் பெரும் பகுதியை அழிக்கும் நோக்கில், 2017ஆம் ஆண்டு மியன்மார் இராணுவம் முன்னெடுத்த நடவடிக்கைகளில் சுமார் 10,000 ரோஹிங்கியாக்கள் கொல்லப்பட்டதற்கான ஆதாரங்கள் உள்ளதாக…

145 0 0
உலக செய்திகள்

உக்ரைனுக்கு 1,000 நீண்ட தூரத் தாக்குதல் ட்ரோன்களை வழங்க பிரித்தானியா தீர்மானம்

ரஷ்யாவின் முன்னரங்கப் பகுதிகளுக்கு அப்பால் உள்ள இலக்குகள் மீது தாக்குதல் நடத்துவதற்காக, உக்ரைனுக்கு 1,000 நீண்ட தூரத் தாக்குதல் ட்ரோன் வானுர்திகளை வழங்க பிரித்தானியா தீர்மானித்துள்ளது. உக்ரைனுக்கு…

145 0 0
உலக செய்திகள்

வரலாற்றுச் சிறப்புமிக்க முத்தரப்புச் சந்திப்பு: ட்ரம்ப், புடின், மற்றும் சீ ஜின்பிங் பங்கேற்பு

ஆசிய-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு (APEC) உச்சிமாநாட்டிற்கு இடையே, சீனாவின் ஷென்சென் நகரில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் மற்றும் சீன ஜனாதிபதி…

144 0 0