உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
24 வியாழன்

சிறு வணிகங்களுக்கும் முன்னுரிமை..! வெளியான ஒன்ராறியோ 2026 வரவுசெலவுத் திட்டம்.!

உலக செய்திகள் 6 மாதங்கள் முன்
36 பார்வைகள்

மக்களுக்கும் பொருளாதாரத்துக்கும் வலுச்சேர்க்கும் 2026 வரவுசெலவுத் திட்டத்தை ஒன்ராறியோ வெளியிட்டது ஒன்ராறியோ அரசாங்கம் கடந்த 2026 மார்ச் 26 அன்று, தொழிலாளர்களையும் குடும்பங்களையும் பாதுகாக்கும் நோக்கில் தனது 2026ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தை வெளியிட்டது.

இதன் மூலம் புதிய வீடுகளை வாங்குவோருக்கு 130,000 டொலர்கள் வரை வரி மீளளிப்புச் சலுகை வழங்கப்படுவதுடன், வீட்டு வசதித் துறையில் சுமார் 2.2 பில்லியன் டொலர்கள் வரி நிவாரணமாக ஒதுக்கப்பட்டுள்ளன.
அத்துடன், சிறு வணிகங்களுக்கான வரி வீதம் 3.2 சதவீதத்திலிருந்து 2.2 சதவீதமாகக் குறைக்கப்படவுள்ளதால், சுமார் 375,000 வணிகங்கள் அடுத்த மூன்று ஆண்டுகளில் 1.1 பில்லியன் டொலர்களைச் சேமிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.


உழைக்கும் குடும்பங்களுக்கும் சிறு வணிகங்களுக்கும் முன்னுரிமை அளிக்கும் வகையில் இந்தத் திட்டம் அமைந்துள்ளதாக அமைச்சர் விஜய் தணிகாசலம் தெரிவித்தார். குறிப்பாக ஸ்காபரோ பிராந்திய மக்கள் மேம்படுத்தப்பட்ட போக்குவரத்து மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளைப் பெற்றுக்கொள்ளவுள்ளனர்.
இதில் ஸ்காபரோ நிலக்கீழ்த் தொடரி விரிவாக்கம் மற்றும் நெடுஞ்சாலைகள் சீரமைப்பு என்பன முக்கியமானவை.

மேலும், 3.4 பில்லியன் டொலர் முதலீட்டில் சுமார் 20 இலட்சம் மக்களுக்கு மேலதிகமாக ஆரம்ப சுகாதார சேவைகளை வழங்கவும், குடும்பங்களின் எரிசக்தி மற்றும் போக்குவரத்துச் செலவுகளைக் குறைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக 2026இல் ‘ரொறன்ரோ இடைக்கால நிலையம்’ மீண்டும் திறக்கப்பட்டு, மேலதிக படுக்கை வசதிகளுடன் 700 இற்கும் மேற்பட்ட புதிய பணியாளர்கள் நியமிக்கப்படவுள்ளனர்.

ஒட்டுமொத்தமாக வரிச்சலுகைகள், உட்கட்டமைப்புகளுக்கான மேம்பாடு மற்றும் பாதுகாப்பு முயற்சிகள் ஊடாக ஒரு வலிமையான, பிணைக்கப்பட்ட மற்றும் தன்னிறைவு கொண்ட ஒன்ராறியோவை உருவாக்குவதே இந்த 2026 வரவுசெலவுத் திட்டத்தின் பிரதான நோக்கமாகும்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் : ட்ரம்ப் எச்சரிக்கை!

போரை முடிவுக்குக் கொண்டுவர ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால் ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் செவ்வாயன்று (22) எச்சரித்தார். ஆனாலும், ஐக்கிய நாடுகள் சபையில்…

97 0 0
உலக செய்திகள்

ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க ஈரான் நிபந்தனை!

அமெரிக்கா தனது இராணுவ நெருக்குவாரங்களைக் குறைத்து, ஈரானிய துறைமுகங்கள் மீதான முற்றுகையை நீக்கினால், அடுத்த ஏழு நாட்களுக்குள் ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறக்க முடியும் என ஈரானின்…

94 0 0
உலக செய்திகள்

உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கிக்கும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பிற்கும் இடையே பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு

உக்ரைனிய ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் தலைமையகத்தில் சந்திக்கவுள்ளதுடன், ரஷ்யாவுடனான தாக்குதல்களை நிறுத்துவதற்கான சமரச முயற்சியை முன்னெடுக்கவுள்ளார்.…

101 0 0
உலக செய்திகள்

அமெரிக்காவை சென்றடைந்தார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

ஐக்கிய நாடுகள் சபையின் 81 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி திங்களன்று (21) நியூயோர்க் சென்றடைந்தார். அமெரிக்கா-ஈரான் இடையிலான…

32 0 0