உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
24 வியாழன்

சில்லறை வர்த்தக குற்றங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு மார்க்ஸ் அண்ட் ஸ்பென்சர்ஸ் வலியுறுத்தல்!

உலக செய்திகள் 6 மாதங்கள் முன்
27 பார்வைகள்

தங்கள் வர்த்தக நிலையங்களில் திருட்டு மற்றும் வன்முறைச் சம்பவங்கள் தொடர்ச்சியாக அதிகரித்துள்ள நிலையில் அவற்றைக் கடுமையாக ஒடுக்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு மார்க்ஸ் அண்ட் ஸ்பென்சர்ஸ் (Marks & Spencer) நிறுவனம் இங்கிலாந்து அரசாங்கத்தையும், லண்டன் மேயரையும் வலியுறுத்தியுள்ளது.

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல்களால் வர்த்தக நிலையங்கள் குறிவைக்கப்படுவதால் ஊழியர்கள் பணிக்கு வருவது குறித்து அச்சத்துடன் உள்ளதாகவும் மார்க்ஸ் அண்ட் ஸ்பென்சர்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் குறித்த நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி ஸ்டூவர்ட் மச்சின், உள்துறைச் செயலாளர் ஷபானா மஹ்மூதுக்கும், லண்டன் மேயர் சாதிக் கானுக்கும் எழுதியுள்ள கடிதங்களில், குற்றங்களைத் திறம்படக் கையாள்வதற்கும், குற்றவாளிகளையும் குற்றச் சம்பவங்கள் அதிகம் நடக்கும் இடங்களையும் குறிவைப்பதற்கும் பொலிஸாருக்கு மேலதிக வளங்கள் தேவை என்றும் கூறியுள்ளார்.

தெற்கு லண்டனின் கிளாப்ஹாம் பகுதியில் கடந்த வார இறுதியில் பல நூறு இளைஞர்கள் அடங்கிய குழு ஒன்று சமூக விரோதச் செயல்களில் ஈடுபட்டதாக வந்த முறைப்பாடுகளை அடுத்து பொலிஸார் அங்கு சென்றனர்.

இதன்போது, அவர்களில் பலர் மார்க்ஸ் அண்ட் ஸ்பென்சர்ஸ் நிறுவனத்தின் வர்த்தக நிலையத்திற்குள் புகுந்து கொள்ளையில் ஈடுபட்டது கண்டறியப்பட்டது.

இவ்வாறான தொடர் திருட்டு சம்பவங்களின் பின்னணியில் மார்க்ஸ் அண்ட் ஸ்பென்சர்ஸ் நிறுவனத்தின் இந்த கோரிக்கை வந்துள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் : ட்ரம்ப் எச்சரிக்கை!

போரை முடிவுக்குக் கொண்டுவர ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால் ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் செவ்வாயன்று (22) எச்சரித்தார். ஆனாலும், ஐக்கிய நாடுகள் சபையில்…

95 0 0
உலக செய்திகள்

ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க ஈரான் நிபந்தனை!

அமெரிக்கா தனது இராணுவ நெருக்குவாரங்களைக் குறைத்து, ஈரானிய துறைமுகங்கள் மீதான முற்றுகையை நீக்கினால், அடுத்த ஏழு நாட்களுக்குள் ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறக்க முடியும் என ஈரானின்…

92 0 0
உலக செய்திகள்

உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கிக்கும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பிற்கும் இடையே பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு

உக்ரைனிய ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் தலைமையகத்தில் சந்திக்கவுள்ளதுடன், ரஷ்யாவுடனான தாக்குதல்களை நிறுத்துவதற்கான சமரச முயற்சியை முன்னெடுக்கவுள்ளார்.…

99 0 0
உலக செய்திகள்

அமெரிக்காவை சென்றடைந்தார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

ஐக்கிய நாடுகள் சபையின் 81 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி திங்களன்று (21) நியூயோர்க் சென்றடைந்தார். அமெரிக்கா-ஈரான் இடையிலான…

32 0 0