உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
24 வியாழன்

ஈரானில் உள்ள மிகப்பெரிய பாலத்தை தாக்கி அழித்த அமெரிக்கா..!

உலக செய்திகள் 6 மாதங்கள் முன்
24 பார்வைகள்

ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் தொடுத்துள்ள போர், கடந்த 28 ஆம் திகதி தொடங்கி 5 ஆவது வாரமாக நீடித்து வருகிறது.போரை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் பேச்சுவார்த்தை மூலமாகவும் மறுபுறம் இஸ்ரேலுடன் சேர்த்து ராணுவ தாக்குதலையும் அமெரிக்கா மேற்கொண்டு வருகிறது.

ஆயுதங்களை விட்டொழித்து முழுவதுமாக சரணாகதி அடைவது, யுரேனியம் செறிவூட்டலை கைவிடுவது உள்ளிட்ட அமெரிக்காவின் நிபந்தனைகளை ஈரான் ஏற்றுக்கோள்ளாமல் தொடர்ந்து தாக்கு பிடித்து பதிலடி கொடுத்து வருகிறது.
இதனால் அமெரிக்காவின் நட்பு நாடுகளான வளைகுடா நாடுகளுடன் இணைந்து இஸ்ரேலும் இந்த போருக்கான விலையை கொடுத்து வருகின்றன.


மறுபுறம் ஹார்முஸ் நீரிணை மூடப்பட்டதன் எதிரொலியாக உலக நாடுகளையும் மறைமுகமாக பாதிக்கப்பட்டுள்ளது. இதன் உச்சமாக போர் தொடங்கியது முதல் கச்சா எண்ணெய் விலை ஒரு பீப்பாய்க்கு 40 சதவீதம் வரை உயர்ந்தது.
இதனால் போரை முடிவுக்கு கொண்டு வர ஈரான், அமெரிக்கா, இஸ்ரேல் நாடுகளுக்கு அதன் நட்பு நாடுகள் அழுத்தம் கொடுத்து வருகிறது. இதற்கு மத்தியில் அமெரிக்க அதிப்ர் டிரம்ப் அந்த நாட்டு மக்களிடம் நேரடியாக பேசி முக்கியமான ஒரு தகவலை கூறப்போவதாக அறிவித்தார்.

20 நிமிடங்கள் நீடித்த இந்த உரையில் அவர், “அமெரிக்காவின் முக்கிய இலக்குகள் நிறைவேறும் நிலையில் உள்ளன என்று இன்று மகிழ்ச்சியுடன் தெரிவிக்கிறேன். இந்த போரில் உயிர்நீத்த அமெரிக்க ராணுவ வீரர்களுக்கு மரியாதை செலுத்துகிறேன். இந்த நடவடிக்கையை முழுமையாக முடிப்போம். அது மிகவும் விரைவாக நிறைவேறும். நாம் இறுதிக்கட்டத்தை நெருங்கிவிட்டோம். அடுத்த 2 முதல் 3 வாரங்களில் எதிரிகளை மிகவும் கடுமையாக தாக்கப்போகிறோம். அவர்களை “கற்கால யுகத்திற்கே” திருப்பி அனுப்புவோம்” என்றார்.

டிரம்பின் இந்த அறிவிப்பால் வரும் நாட்களில் ஈரான் மீதான தாக்குதல் இன்னும் தீவிரம் அடையும் என்று சொல்லப்பட்ட நிலையில், நேற்று ஈரானில் உள்ள மிகப்பெரிய தாக்குதலை அமெரிக்கா நடத்தியுள்ளது. தெஹ்ரானில் இருந்து கராஜ் நகரை இணைக்கும் 136 மீட்டர் நீள பாலத்தின் ஒருபகுதி இதில் சேதம் அடைந்துள்ளது. பயங்கர புகை மூட்டமாகவும் பாலம் இடிந்து விழும் காட்சிகளும் வெளியாகியுள்ளன.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் : ட்ரம்ப் எச்சரிக்கை!

போரை முடிவுக்குக் கொண்டுவர ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால் ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் செவ்வாயன்று (22) எச்சரித்தார். ஆனாலும், ஐக்கிய நாடுகள் சபையில்…

95 0 0
உலக செய்திகள்

ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க ஈரான் நிபந்தனை!

அமெரிக்கா தனது இராணுவ நெருக்குவாரங்களைக் குறைத்து, ஈரானிய துறைமுகங்கள் மீதான முற்றுகையை நீக்கினால், அடுத்த ஏழு நாட்களுக்குள் ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறக்க முடியும் என ஈரானின்…

92 0 0
உலக செய்திகள்

உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கிக்கும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பிற்கும் இடையே பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு

உக்ரைனிய ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் தலைமையகத்தில் சந்திக்கவுள்ளதுடன், ரஷ்யாவுடனான தாக்குதல்களை நிறுத்துவதற்கான சமரச முயற்சியை முன்னெடுக்கவுள்ளார்.…

99 0 0
உலக செய்திகள்

அமெரிக்காவை சென்றடைந்தார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

ஐக்கிய நாடுகள் சபையின் 81 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி திங்களன்று (21) நியூயோர்க் சென்றடைந்தார். அமெரிக்கா-ஈரான் இடையிலான…

32 0 0